செய்திகள் :

பச்சை நிறமாக மாறிய மேட்டூர் அணை - கர்நாடகா தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுகிறதா?

post image

கர்நாடகா மாநிலத்தில் இருந்து காவிரி ஆற்றில், மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பருவமழை காலத்தில் காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரில் கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் திறந்து விடப்படுவதாக மேட்டூர் நீர்த்தேக்க பகுதிகளில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காவிரி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் நீர் மாசுபடுவதோடு, காவிரி நீர் பச்சை நிறத்தில் மாறி துர்நாற்றம் வீசுவதாக தெரிவிக்கின்றனர்.

சுப்ரமணி

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி சுப்பிரமணி, ``காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரிக்கும் போது கர்நாடகா மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை கழிவு நீர்கள் கலந்து விடப்படுகிறது. இதனால், நீர் மாசுபாடு ஏற்படுவதோடு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதேபோல், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலமாக தான் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் நடைபெறுகிறது. காவிரி ஆற்றில் தொழிற்சாலை கழிவுகள் கலப்பதால் பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தரமற்ற முறையில் இருப்பதால் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. விவசாயத்தைப் பொறுத்தவரை துர்நாற்றம் வீசும் நீரினால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு காவிரி நீர் மாறி வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்று கூறினார்.

இது குறித்து மேட்டூர் அணை செயற்பொறியாளர் சதீஷிடம் கேட்டபோது, 'மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும் போது நீரின் நிறம் மாறுவது இயல்பான ஒன்றுதான். காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் சிலர் ஆற்றங்கரையில் விவசாயம் செய்கின்றனர். நீர்வரத்து அதிகரிக்கும்போது மரம், செடி, கொடிகள் நீரில் அடித்து வரப்படுகிறது. இது ஒரு வாரத்தில் பழைய நிலைக்கு திரும்பிவிடும். கர்நாடகாவில் இருந்து தொழிற்சாலை கழிவுகள் காவிரியில் கலக்கப்படுகிறதா என தெரியவில்லை. நாங்கள் குடிநீருக்கு உகந்த நிலையில் தண்ணீர் உள்ளதா என்பதை மட்டும்தான் பார்ப்போம்.

காவிரி ஆறு

அதன்படி தற்போது உள்ள நீர் குடிநீருக்கு ஏற்றதாக உள்ளது. தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுகிறதா? என்பதை மாசு கட்டுப்பாட்டு வாரியம் தண்ணீரின் மாதிரியே சேகரித்து ஆய்வு செய்வார்கள்' என தெரிவித்தார்.

காவிரி ஆறு

மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரி சதீஷ் கூறுகையில், 'மேட்டூரில் உள்ள தொழிற்சாலைகளில் கடந்த வாரம் ஆய்வுகள் நடத்தப்பட்டது. மேட்டூரில் இருந்து காவிரி ஆற்றில் தொழிற்சாலையின் கழிவுகள் கலப்பதில்லை. மேட்டூர் அணையில் உள்ள நீர் பச்சை நிறத்தில் மாறி உள்ளது தொடர்பாக தண்ணீரின் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டது. விவசாயக் கழிவுகளால் தான் நிறம் மாறியுள்ளதாக ஆய்வு முடிவுகள் வந்துள்ளது. கர்நாடகாவில் இருந்து தொழிற்சாலை கழிவுகள் காவிரி ஆற்றல் கலக்கப்படுகிறதா என்பது குறித்து தெரியவில்லை. ஆய்வு முடிவுகளும் அப்படி வரவில்லை' என்றார்.

மகாராஷ்டிரா: பருவம் தவறிய கனமழை; திராட்சை விவசாயம் 70% பாதிப்பு - உயிரை மாய்த்த 9 விவசாயிகள்

நாசிக் - திராட்சை தலைநகர் பாதிப்பு மகாராஷ்டிராவின் நாசிக், புனே, சோலாப்பூர், சாங்கிலி மாவட்டங்களில் திராட்சை அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இப்பகுதியில் ஒயின் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அதிக அளவில் இ... மேலும் பார்க்க

கார்த்திகையில் மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்; ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஒலித்த சரண கோஷம் | Photo Album

ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள், ஈரோடு. ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள... மேலும் பார்க்க

``அரசின் முன்னேற்பாட்டால் மழை பாதிப்பு இல்லை, பாசன நீர் உறுதி'' - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து தண்ணீரை, மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில், வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். இராமச்சந்திரன் திறந்து வைத்தார். வத... மேலும் பார்க்க

நவம்பர் 30-ம் தேதி வரை சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யலாம்- பயன்பெறும் மாவட்டங்களின் பட்டியல்

நெற்பயிர் காப்பீடு தொடர்பாக தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது, "தமிழக அரசு சம்பா நெற்பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்... மேலும் பார்க்க

``ஆண்டுக்கு ரூ.1 கோடி வருமானம்'' - விவசாயத்தில் சாதித்த லக்னோ இளம் பெண்; எப்படி சாத்தியமானது?

இன்றைக்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள் விருப்பப்பட்டு விவசாயத்திற்கு வருவது அதிகரித்து இருக்கிறது. லக்னோவைச் சேர்ந்த அனுஷ்கா ஜெய்ஸ்வால் (29) படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல், எதை... மேலும் பார்க்க

Black Carrot : முதல் முறையாக கருப்பு கேரட் உற்பத்தியில் களமிறங்கும் நீலகிரி தோட்டக்கலைத்துறை!

ஆரஞ்சு தங்கம் என வர்ணிக்கப்படும் கேரட் சாகுபடியில் நீலகிரி மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஊட்டியில் அறிமுகப்படுத்தப்பட்ட கேரட் சாகுபடி, மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பரவி ... மேலும் பார்க்க