செய்திகள் :

SIP: உச்சத்தைத் தொட்ட Stoppage Ratio... என்ன காரணம்?!

post image

பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் மாதந்தோறும் பல லட்சம் புதிய முதலீட்டாளர்கள் புதிதாக எஸ்.ஐ.பி கணக்கைத் தொடங்கிக் கொண்டு இருப்பதும், ஏற்கெனவே முதலீடு செய்துவரும் முதலீட்டாளர்கள் தங்கள் எஸ்.ஐ.பி கணக்கை நிறுத்துவதும் வழக்கமான விஷயம்தான். ஆனால், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் புதிதாக எஸ்.ஐ.பி கணக்குகளைத் தொடங்குவதைவிட எஸ்.ஐ.பி கணக்குகளை நிறுத்துவது அதிகமாகி இருக்கிறது.

எஸ்.ஐ.பி

இதை 'எஸ்.ஐ.பி ஸ்டாப்ஏஜ் ரேஷியோ' என்பார்கள். கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 50.68 லட்சம் புதிய எஸ்.ஐ.பி முதலீட்டுக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆனால், அதே மாதத்தில் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்ட 59.12 லட்சம் எஸ்.ஐ.பி முதலீட்டுக் கணக்குகள் நிறுத்தப்பட்டன. இந்த இரண்டுக்குமான வித்தியாசம்தான் இந்த 'எஸ்.ஐ.பி ஸ்டாப்ஏஜ் ரேஷியோ'. இந்த வித்தியாசம் விகிதாசாரக் கணக்கின்படி பார்த்தால், 116% ஆகும். இந்த 'எஸ்.ஐ.பி ஸ்டாப்ஏஜ் ரேஷியோ'வானது இந்த ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்குக் கடந்த அக்டோபர் மாதத்தில் அதிகமாக இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடங்கி மாதந்தோறுமான 'எஸ்.ஐ.பி ஸ்டாப்ஏஜ் ரேஷியோ' விவரம் இதோ...

ஏப்ரல் - 101%

மே - 95.46%

ஜூன் - 91.23%

ஜூலை - 81.87%

ஆகஸ்ட் - 81.5%

செப்டம்பர் - 78.53%

அக்டோபர் - 105.7%

பொதுவாக, பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்று வரும்போது குறைந்தபட்சம் 7 ஆண்டு முதல் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட காலம் தொடர வேண்டிய முதலீடாகும். இந்தக் காலகட்டத்தில் பங்குச் சந்தையின் செயல்பாட்டுக்கேற்ப முதலீட்டுத் தொகையானது ஏற்ற, இறக்கத்துக்கு உள்ளாகும். இந்த ஏற்ற, இறக்கத்துக்கு உள்ளாகும்

காலத்தில் குறிப்பாக, பங்குச் சந்தை இறக்கத்தில் முதலீடு நஷ்டத்தில் இருக்கும்போது, எஸ்.ஐ.பி முதலீட்டாளர்கள் பதற்றம் அடையக் கூடாது. காரணம், எஸ்.ஐ.பி முதலீடு என்பது 10 ஆண்டுகள் தொடர வேண்டிய முதலீடு என்பதால், குறுகிய காலத்தில் ஏற்படும் நஷ்டத்தைப் பார்த்து முதலீட்டாளர்கள் பயப்படத் தேவை இல்லை.

எஸ்.ஐ.பி

ஆனால், வங்கி எஃப்.டி-க்கு மட்டுமே பழக்கப்பட்ட நம்முடைய முதலீட்டாளர்கள், எஸ்.ஐ.பி முதலீட்டு 5% - 10% இறங்கி இருப்பதைப் பார்த்துப் பதற்றப்படுகின்றனர். சந்தை இறங்கிக்கொண்டே போனால், நம் முதலீடு அனைத்தும் காணாமலே போய்விடும் என்று நினைக்கின்றனர். இதனால் எஸ்.ஐ.பி முதலீட்டை நிறுத்திவிடுகின்றனர். மொத்தமாக முதலீடு செய்திருந்தால், அந்தத் தொகையையும் திரும்ப எடுத்துவிடுகின்றனர்.

பங்குச் சந்தை
Stock Market - பங்குச் சந்தை

ஆனால், இந்த இரண்டு முடிவுகளுமே தவறாவை என்பது பல முதலீட்டாளர்களுக்குத் தெரிவதில்லை. காரணம், கடந்த ஏழு மாதங்களாக இறக்கத்தில் இருந்த பங்குச் சந்தை கடந்த ஒரு மாத காலத்தில் மேலே வந்திருக்கிறது. இதனால் நஷ்டத்தில் இருந்த பல எஸ்.ஐ.பி முதலீட்டாளர்கள் தற்போது லாபத்தில் இருக்கிறார்கள். நஷ்டத்தில் இருக்கிறோமே என்று நினைத்து, முதலீட்டை நிறுத்திய முதலீட்டாளர்கள் மேற்கொண்டு லாபம் பார்க்க முடியாத நிலையை அடைந்திருப்பார்கள்.

கடந்த அக்டோபர் மாதத்தில் பங்குச் சந்தையின் இறக்கத்தைப் பார்த்து பயந்ததால்தான், தங்கள் எஸ்.ஐ.பி முதலீட்டுக் கணக்கை இந்த அளவுக்கு அதிகமாக நிறுத்தி இருக்கிறார்கள். ஆனால், இப்போது பங்குச் சந்தை மீண்டும் ஏற்றத்தில் போக்கில் வந்திருப்பதால், அவர்கள் மீண்டும் எஸ்.ஐ.பி கணக்கைத் தொடங்க நிறையவே வாய்ப்பு இருக்கிறது. எனவே, கடந்த ஏபரல் மாதத்தில் உச்சத்தில் இருந்த 'எஸ்.ஐ.பி ஸ்டாப்ஏஜ் ரேஷியோ' அடுத்தடுத்த மாதங்களில் குறைந்தது போல, இனி வரும் காலத்திலும் மெல்ல மெல்லக் குறைய வாய்ப்பு இருக்கிறது.

லாபம்

மியூச்சுவல் ஃபண்டில் SIP மற்றும் Lump sum முதலீட்டை ஆரம்பிக்க நினைப்பவர்கள் லாபம் நிறுவனத்தின் பின்வரும் தொலைபேசி எண்களை அழைக்கலாம்!

ஏ.ஆர்.குமார் - 89259 44568

சபரிநாதன் - 89259 44569

தங்கலட்சுமி - 95007 77894

வெளிநாடு மற்றும் இந்தியாவில் வசிப்பவர்கள் தங்கள் முதலீட்டைச் சரியானபடி அமைத்துக்கொள்ள ஆலோசனை பெற, பின்வரும் லிங்கினைக் கிளிக் செய்து, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்...

வெளிநாட்டில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-nri-vikatan-com

இந்தியாவில் வசிப்போருக்கு: https://calendly.com/calendar-labham/schedule-call-with-labham-vikatan-com

Labham Youtube Channel: www.youtube.com/@labham_money

Labham Website: https://labham.money/tamil

முதலீட்டாளர்களின் கவனத்துக்கு:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. இதில் முதலீடு செய்யும்முன் திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாகப் படித்துப் பார்த்து, சுயமாக முடிவெடுக்க வேண்டுகிறோம்!

Vikatan Wealth Pvt Ltd - ARN - 310095

மினிமல் பேலன்ஸ் முதல் பணம் வரை... Post Office கணக்கு, PPF, RD-ல் என்னென்ன மாற்றங்கள்?

அஞ்சல் துறை சமீபத்தில் அஞ்சலக சேமிப்பு வங்கியின் (POSB) திருத்தப்பட்ட கோர் பேங்கிங் சொல்யூஷன் (CBS) கையேட்டை வெளியிட்டுள்ளது. அந்தக் கையேட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய விதிகள்: 1. குறைந்தபட்ச இருப்புத் ... மேலும் பார்க்க

2027-ல் ₹5,00,000 மெடிக்கல் இன்ஷூரன்ஸ், ₹50,00,000 லைஃப் கவர்! - உங்கள் குடும்பத்துக்குப் போதுமா?

"என்னிடம் ₹5 லட்சம் ஹெல்த் இன்சூரன்ஸ் மற்றும் ₹50 லட்சம் லைஃப் இன்சூரன்ஸ் உள்ளது, இது போதுமானது!" என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் ஒரு நிதி ஆபத்தில் இருக்கிறீர்கள் எ... மேலும் பார்க்க

இனி PF கணக்கில் இருந்து 90 சதவிகிதம் வரை பணம் எடுத்துக்கலாம்! வேறு என்ன மாற்றம்?

நேற்று (நவம்பர் 19) ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தற்போது பி.எஃப்.-இல் இருந்து பகுதி அளவு பி.எஃப். பணம் எடுக்கும் நடைமுறையில் சில மாற்றங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.அவை என்ன?> த... மேலும் பார்க்க

40+ வயதில் முதலீட்டைத் தொடங்க இருக்கீங்களா? NRI-களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

"முதலீடு செய்யத் தாமதமாகிவிட்டதே!" என்ற கவலை உங்களுக்கு இருக்கிறதா? வெளிநாட்டில் (NRI) பணிபுரியும் பலருக்கும், குடும்பப் பொறுப்புகள், கடன்கள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் காரணமாக 20 அல்லது 30 வயதில் மு... மேலும் பார்க்க

EPFO SWP: ஓய்வுக்குப் பிறகு PF பணத்தை தவணையாகப் பெறலாம்; வட்டியும் தொடரும்! 3 ஆப்ஷன்கள் என்ன?

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), ஓய்வுக்குப் பிறகு பி.எஃப். சேமிப்புத் தொகையை மொத்தமாக எடுப்பதற்குப் பதிலாக, தவணை முறையில் பெற்றுக்கொள்ளும் வகையில் Systematic Withdrawal Plan-க்கு (SWP... மேலும் பார்க்க

பி.எஃப்: இனி 90% பணத்தை 55 வயதுக்குள் திரும்ப எடுக்கலாம்! மாறிய புதிய விதிமுறைகள் சாதகமா, பாதகமா?

பணியாளர் ஓய்வுக் கால விதிமுறைகளில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது எம்ப்ளாயிஸ் பென்ஷன் ஃபண்ட் நிறுவனம். ஒரு பணியாளர் 55 வயதில் தனது பி.எஃப் கணக்கில் இருக்கும் 90% பணத்தைத் திரும்ப எடுக்கலாம்... மேலும் பார்க்க