செய்திகள் :

SIR: உங்கள் பெயர் நீக்கப்பட்டு விட்டதா? புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க எளிய வழி!

post image

தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கும் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் முதல் கட்டம் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிவிட்டது.

இதில் தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளன. இதில் இறந்தவர்களின் பெயர், இரண்டு தொகுதிகளில் வாக்காளர் அட்டை வைத்திருக்கும் நபரின் ஒரு தொகுதியின் வாக்காளர் அட்டை மட்டும் ரத்து செய்யப்படவில்லை... சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு நவம்பர் 4-ம் தேதியில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட சில ஆவணங்களில் சந்தேகம் இருந்தாலும் அவர்களின் பெயரும் நீக்கப்பட்டுள்ளன.

SIR
SIR
இவர்களின் பெயர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறுவதற்கான‌ வாய்ப்பு இதோ...

இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதில் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட தகுதி உடைய வாக்காளர்கள், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் தங்களின்‌ பெயரைப் பதிவு செய்யலாம். இதற்கு அவர்கள் புதிய வாக்காளர்கள் படிவம் 6ஐ உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

மிஸ் செய்துவிட்டால்...

இன்றும், நாளையும் இதற்காகச் செல்ல முடியவில்லை என்றால், பரவாயில்லை. வரும் ஜனவரி 3, 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. அதில் கட்டாயம் கலந்துகொள்ளுங்கள்.

'இன்னும் 5 நாள்கள் தான்' Pan Card-ல் இதை செய்துவிடுங்கள்; இல்லை, வருமான வரி ரீஃபண்ட் 'ரிஸ்க்'!

உங்களது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்னும் ஐந்து நாள்கள் தான் மீதம் உள்ளன. ஆம்... பான் - ஆதார் இணைப்பிற்கு வரும் டிசம்பர் 31-ம் தேதியே கடைசி. இதை தவறவிட்டு விட்டால், வரும் ஜனவரி 1-ம் தேதியில் இர... மேலும் பார்க்க

வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா? இவற்றை சீக்கிரம் செக் செய்யுங்க

இந்நேரத்திற்கு வருமான வரி ரீஃபண்ட் வந்திருக்க வேண்டும். ஆனால் பல லட்ச மக்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லை. ஏன்... என்ன காரணம்? இந்த ஆண்டு வருமான வரி ரீஃபண்ட் தாமதமாவதற்கு இரண்டு காரணங... மேலும் பார்க்க

மும்பை: 28 ஆண்டுக்கால கனவு நனவானது; பயன்பாட்டிற்கு வந்த நவிமும்பை சர்வதேச விமான நிலையம்!

மும்பையில் ஏற்கனவே இருக்கும் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், விமானப் போக்குவரத்து நெருக்கடியில் திணறிக்கொண்டிருக்கிறது.இதையடுத்து மும்பை அருகில் நவிமும்பையில் புதிய சர்வதேச விமான நிலையம் கட்ட மு... மேலும் பார்க்க

ஏறுமுகத்தில் தொழில்துறை... இறங்குமுகத்தில் விவசாயம்... கவனம் செலுத்துவாரா முதல்வர்?

அனைவருக்கும் பசுமை வணக்கம்.‘தமிழ்நாட்டில் 2023-24-ம் ஆண்டின் வேளாண் உற்பத்தி மதிப்பு ரூ.52,831.20 கோடி; 2024-25-ம் ஆண்டின் வேளாண் உற்பத்தி மதிப்பு 51,862.76 கோடி’ என்று இந்திய ரிசர்வ் வங்கி புள்ளிவிவர... மேலும் பார்க்க

விருதுநகர் - அருப்புக்கோட்டை இடையிலான இலவசப் பேருந்துகளில் கூட்ட நெரிசல்; மாணவர்கள், பயணிகள் புகார்

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கான இலவச பேருந்து திட்டம் பல ஏழை, எளிய குடும்பங்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. எனினும், சில பாதைகளில் நெருக்கடி நேரங்களில் ஏற்படும் கடும் கூட்ட நெரிசல் கா... மேலும் பார்க்க