சேகர் பாபு செங்கோட்டையனை திமுக-வுக்கு அழைத்தாரா? `நட்பு ரீதியில்.!’ - அமைச்சர் ர...
”SIR கொண்டு வரப்பட்டதன் நோக்கம் நிறைவேறப் போவதில்லை” - சொல்கிறார் துரை வைகோ
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.கவின் முதன்மை செயலாளர் துரை வைகோ, “த.வெ.கவில் இணைய செங்கோட்டையன் எடுத்த முடிவு, அவரது தனிப்பட்ட விருப்பம், உரிமை. அவர் இணைவதால், அக்கட்சிக்கு பலமா? பலவீனமா? என்பதை வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி பெறும் வாக்குகளைப் பொறுத்துதான் சொல்ல முடியும். அ.தி.மு.கவை பலவீனப்படுத்தி தமிழகத்தில் இரண்டாவது கட்சியாக வர வேண்டும் என்பதுதான் பா.ஜ.கவின் ஆசை.

அந்த ஆசை இன்றல்ல, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகே அ.தி.மு.கவை பிளவுபடுத்தினர். ஒரு இயக்கத்தின் அடையாளம் என்பதே அக்கட்சியின் கொடி, சின்னம்தான். எங்களுடைய சின்னத்தில் தேர்தலில் நிற்க வேண்டும் என்பது ம.தி.மு.க தொண்டர்களின் விருப்பம். இதுகுறித்து கூட்டணி பேச்சுவார்த்தையின் போது சுமுகமாக பேசி முடிவு எடுக்கப்படும். வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவில்பட்டி தொகுதியில் ம.தி.மு.க போட்டியிட விரும்பினால் அதனை கட்சியின் தலைமை பரிசீலனை செய்யும்.
எஸ்.ஐ.ஆரை தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் எதிர்க்கின்றன. அதை அமல்படுத்தும் முறையையும் எதிர்க்கிறோம். எஸ்.ஐ.ஆர் பணியால் அரசு ஊழியர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நாடு முழுவதும் 16-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். எஸ்.ஐ.ஆர் எதற்காக கொண்டு வரப்பட்டதோ அதன் நோக்கம் நிறைவேறப்போவதில்லை.

எஸ்.ஐ.ஆருக்கு அ.தி.மு.க ஆதரவு கொடுத்துள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் மதுரை, கோவையில் மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்படும் என, வானதி சீனிவாசன் கூறியுள்ளார். அப்படி என்றால், பிற கட்சிகள் ஆட்சிக்கு வந்தால், நீங்கள் கொடுக்க மாட்டீர்களா? அதிலேயே அவர்களின் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்,” என்றார்.















