செய்திகள் :

SIR -க்கு பின் வரைவு வாக்காளர் பட்டியல்: கோவை மாவட்டத்தில் மட்டும் 6,50,590 வாக்காளர்கள் நீக்கம்!

post image

பீகாரில் ஏராளமான குழப்பங்களுடன் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டது. அதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் `வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்' (SIR) பணி நடந்து வருகிறது.

ஆரம்பம் முதலே இந்தப் பணிக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையமும் - பா.ஜ.க-வும் கூட்டு சேர்ந்து இயங்குகின்றன எனக் குற்றம்சாட்டியிருந்தன.

மேலும், சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதாகவும், தேர்தல் முறைகேடுக்கு இந்தப் பணி வழி வகுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தன.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

அதே நேரம், கடுமையான பணிச் சுமையால் SIR பணியில் ஈடுபடும் BLO-க்களின் தொடர் தற்கொலைகளும் சர்ச்சையானது.

இந்த விவகாரங்கள் அனைத்தும் நடந்துவரும் நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கடந்த நவம்பர் 4-ம் தேதி, தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தொடங்கின.

வாக்குச்சாவடி முகவர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை வழங்கி, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெற்று வாக்காளர்களின் அடையாளங்களை உறுதி செய்தனர்.

ஒரு மாதத்தில் ஒட்டுமொத்த பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டாலும், களத்தில் இருந்த சிக்கல்கள் காரணமாக இரண்டு முறை அதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையம் - SIR
Election Commission - SIR

அதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 14-ம் தேதியுடன் 100 சதவிகிதம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு, ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் அடிப்படையிலான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாவட்ட ரீதியாக வெளியிடப்பட்டு வருகிறது.

மாவட்டமாக வாரியாக வாக்காளர் பெயர் நீக்க விவரங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் 79,690 வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டிருக்கிறது.

> காஞ்சிபுரத்தில் 2.74 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது.

> கோவை மாவட்டத்தில் 6,50,590 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றனர்.

இதில் இறந்த வாக்காளர்கள், முகவரியில் இல்லாதவர்கள், குடிபெயர்ந்தோர், இரட்டை வாக்காளர்கள் உள்ளிட்ட வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

> சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில், 13,30,117 ஆண் வாக்காளர்கள், 13,37,688 பெண் வாக்காளர்கள், 303 இதர வாக்காளர்கள் என மொத்தம் 26,68,108 வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கெடுப்பு பணிகளின் போது கணக்கீட்டு தான் படிவங்கள் பெறப்படாத இனங்களில் இறந்தவர்கள் 1,00,974 பேர், குடியிருப்பில் இல்லாதவர்கள், முகவரி மாற்றம் செய்தவர்கள் போன்ற இதர இனங்கள் 2,41,283 பேர், இரட்டை பதிவு இனங்கள் 20,171 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை.

(தொடர்ந்து பிற மாவட்டத்தின் தரவுகள் இங்கு அப்டேட் செய்யப்படும்)

அதிகரிக்கும் ரயில் கட்டணங்கள்; AC, Non AC வகுப்புகளுக்கு எவ்வளவு? - இந்திய ரயில்வே அறிவிப்பு

இந்திய ரயில்வே துறை தற்போது புதிய கட்டண மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றம் வருகிற 26-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.கட்டண மாற்றங்கள் இதோ...> துணை நகர்ப்புற (Urban) டிக்கெட்டுகள் மற்றும் மாத ச... மேலும் பார்க்க

விருதுநகர்: 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்; பட்டியலில் பெயரைச் சரிபார்க்க ஆட்சியர் வலியுறுத்தல்!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை விருதுநகர் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

RBI-ன் ஓரேயொரு மூவ்: வலுவான இந்திய ரூபாய்; ஓடி வந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் - அது என்ன?

சில நாள்களாக, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. அது 91-ஐ தாண்டி எல்லாம் சென்றது. இந்த நிலையில் தான், நேற்று சந்தையின் முடிவில் 90.38-க்கு இறங்கி இந்திய ரூபாயி... மேலும் பார்க்க

முல்லை பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழு ஆய்வு

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு முல்லை பெரியாறு அணை, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. கடந... மேலும் பார்க்க

செங்கோட்டை நகர்மன்ற கூட்டம்: ``செருப்பால் அடிப்பேன்'' - திமுக நகர்மன்ற தலைவி பேச்சால் பரபரப்பு

தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் தி.மு.க நகர்மன்ற தலைவி ராமலட்சுமி தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 51 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு,... மேலும் பார்க்க

``கரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் பாஜக பற்றி பேசாதாது ஏன்?'' - CPIM பெ.சண்முகம் கேள்வி

கரூர் கூட்ட நெரிசலில் 41 பலியான விவகாரம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த சம்பவத்திற்குப் பிறகு 40 நாள்களுக்கு மேல் பொதுவெளிக்கு வராமல் இருந்த விஜய், கடந்த நவம்பர் மாதம் முதல் ... மேலும் பார்க்க