Anaswara Rajan: "அல்லு அர்ஜுனை மலையாள நடிகர் என நினைத்துக் கொண்டிருந்தேன்" - அனஸ...
விருதுநகர்: 1,89,964 வாக்காளர்கள் நீக்கம்; பட்டியலில் பெயரைச் சரிபார்க்க ஆட்சியர் வலியுறுத்தல்!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை விருதுநகர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான சுகபுத்ரா, இன்று மாலை வெளியிட்டார். சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தத்திற்கு முன் 16 லட்சத்து 26 ஆயிரத்து 485 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தத்திற்குப் பின் மொத்தம் 14 லட்சத்து 36 ஆயிரத்து 521 வாக்காளர்கள் உள்ளனர்.

தொகுதி வாரியான வாக்காளர்கள் விவரம்:
ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியில் 2,01,901 வாக்காளர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2,13,665 வாக்காளர்கள், சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2,18,801 வாக்காளர்கள், சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் 2,14,544 வாக்காளர்கள், விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் 1,90,824 வாக்காளர்கள், அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1,98,996 வாக்காளர்கள், திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் 1,97,790 வாக்காளர்கள்.
அருப்புக்கோட்டை (வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ) தொகுதியில் 23,252 வாக்காளர்கள். திருச்சுழி (நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு) சட்டமன்றத் தொகுதியில் 20,542 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

வாக்குச்சாவடிகள் விவரம்:
முன்பு இருந்த வாக்குச்சாவடிகள்: 1,901
புதிய வாக்குச்சாவடிகள்: 98
தற்போது உள்ள மொத்த வாக்குச்சாவடிகள்: 1,999
சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தத்தின்போது நீக்கப்பட்டவர்கள் - 1,89,964
இறந்தவர்கள்: 73,279
முகவரி இல்லாதவர்கள்: 10,722
குடிபெயர்ந்தோர்: 95,609
இரட்டைப் பதிவுகள்: 10,135
இதர: 219

மேற்படி சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தம்-2025 இன் போது வாய்ப்பைத் தவறவிட்டோர் மற்றும் 01.01.2026 அன்று 18+ வயதைப் பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர், திருத்தம் மற்றும் நீக்கம் செய்ய விழையும் அனைவரும், இத்தேதிக்குப் பின் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் தொடர் மேம்பாட்டுக் காலத்தில், Voter Service Portal, Voters Helpline App, Saksham App வழியிலும், உரிய படிவங்களைப் பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வட்ட, கோட்ட மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் சமர்ப்பிக்கலாம். அதேபோல் தங்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன அனைவரும் கட்டாயம் சரிபார்க்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.



















