'அரசியல் லாபத்துக்காக ஐயப்ப சுவாமி பெயரை பயன்படுத்துவதா?'- திருவாபரண பாதை பாதுகா...
முல்லை பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக் குழு ஆய்வு
தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த ஆண்டு முல்லை பெரியாறு அணை, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 11-ந்தேதி அணையில் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தினர் ஆய்வு செய்தனர். அதன் தொடர்ச்சியாக முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.
இதற்காக துணைக் குழுவின் தலைவரான தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தென்மண்டல இயக்குநர் கிரிதர் தலைமையில், தமிழக உறுப்பினர்களான முல்லைப்பெரியாறு அணையின் கண்காணிப்புப் பொறியாளர் சாம் இர்வின், செயற்பொறியாளர் செல்வம், கேரள உறுப்பினர்களான கண்காணிப்புப் பொறியாளர் கோஷி. கட்டப்பனை செயற்பொறியாளர் லிவின்ஸ்பாபு ஆகியோர் தேக்கடிக்கு வந்து அங்கிருந்து படகுகள் மூலம் அணைக்குச் சென்றனர்.

அணைப் பகுதியில், பிரதான அணையை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்த மதகுகளை இயக்கி சோதனை செய்தனர். பின்னர் பிரதான அணை வழியாக பேபி அணைக்கு நடந்து சென்று ஆய்வு செய்தனர். சுரங்கப்பகுதியில் கசிவுநீர் அளவை பார்வையிட்டனர். அணையின் நீர்மட்டத்துக்கு ஏற்ப அது இயல்பான அளவில் இருந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை குமுளியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முல்லை பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்புப் பணிகள், பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.




















