Vikatan : இந்தவாரம் தொடங்கப்பட்ட `புதிய' ஸ்பெஷல் தொடர்களை படித்துவிட்டீர்களா? |...
Soori: "பிரச்னை உருவாக்குவது சரியானது அல்ல!" - விமர்சித்தவருக்கு எக்ஸ் பக்கத்தில் சூரி தந்த பதில்!
நடிகர் சூரி தற்போது 'மண்டாடி' படத்தில் நடித்து வருகிறார். நேற்றைய தினம் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை நேரில் காண நடிகர் சூரி சென்றிருந்தார்.
அங்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மரியாதை செலுத்திய சூரியை சமூக வலைதளப் பக்கத்தில் ஒருவர் விமர்சித்திருந்தார். அந்த விமர்சனத்திற்கு பதில் ஒன்றைக் கொடுத்து சூரி மறுபதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில் அவர், "தம்பி, தமிழனின் அடையாளமே யாரையும் இழிவுபடுத்தாமல் மரியாதையோடு பேசும் பண்பாடுதான்.
கவனம் கிடைக்கிறது என்பதற்காக சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது. மதிப்பு இருந்தா அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும்.
ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள் கருத்து இல்லை, அது வெறும் சத்தம். சினிமாவுல ஒரு படத்தின் பயணத்தை பணமும், அரசியலும், பேசுறவங்களும் தீர்மானிக்காது. இன்று சினிமாவில் Content தான் King.
அதைத் தீர்ப்பது சத்தம் போடுறவர்கள் அல்ல. அதைப் பார்க்கும் எல்லா தரப்பு மக்கள்தான். நல்லா இருந்தா அது தானாகவே நிலைக்கும், இல்லைன்னா எதுவுமே காப்பாற்ற முடியாது.
அதுதான் நியாயம். அதுதான் உண்மை." எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.
தம்பி,
— Actor Soori (@sooriofficial) January 17, 2026
தமிழனின் அடையாளமே
யாரையும் இழிவுபடுத்தாமல்
மரியாதையோடு பேசும் பண்பாடுதான்.
கவனம் கிடைக்கிறது என்பதற்காக
சொல்வதெல்லாம்
உண்மையாகிவிடாது. மதிப்பு இருந்தா
அதற்கேற்ற பொறுப்பும் இருக்கணும்.
ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகள்
கருத்து இல்லை அது வெறும் சத்தம்.
சினிமாவுல
ஒரு படத்தின்…
இதையடுத்து சூரியை விமர்சித்துப் போட்ட பதிவைப் பதிவிட்டிருந்தவரே நீக்கி சூரியிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இதற்கு சூரி, "தம்பி. தன் தவறை உணர்ந்து அதை ஒத்துக்கொள்ளும் மனசு எப்போதும் மதிப்புக்கு உரியதுதான்.
வேடிக்கை என்ற பெயரில்கூட பிறரின் பெயர், படம் அல்லது நிழலைப் பயன்படுத்திப் பிரச்சினை உருவாக்குவது சரியானது அல்ல. அது நமக்கும், அவர்களுக்கும் மதிப்பைக் கெடுக்கும்.
இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு இடமும் ஒரு காரணமும் உண்டு. அதை மறக்கும் சொற்களும் செயல்களும் ஏற்றுக்கொள்ள முடியாது." எனக் குறிப்பிட்டு ரிப்ளை கொடுத்திருக்கிறார்.



















