செய்திகள் :

SRH Vs DC: "பீல்டிங் மட்டும் கைகொடுத்திருந்தால் மேட்ச் மாறியிருக்கும்"– தோல்வி குறித்து அக்சர் படேல்

post image

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (ஏப்ரல் 21) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் போராடித் தோல்வியடைந்தது.

அபிஷேக் சர்மா மற்றும் கிளாசனின் அதிரடி ஆட்டத்தால் ஹைதராபாத் இமாலய ரன்களைக் குவித்தது. இந்தத் தோல்விக்குப் பிறகு பேசிய டெல்லி கேப்டன் அக்சர் படேல், தவறவிட்ட வாய்ப்புகள் மற்றும் பந்துவீச்சாளர்களின் நிலை குறித்து வெளிப்படையாகப் பேசினார்.

SRH Vs DC Match
SRH Vs DC Match

போட்டிக்குப் பிறகு பேசிய அக்சர் படேல், "ரன்-அவுட் மற்றும் கேட்ச் வாய்ப்பை நாங்கள் தவறவிட்டோம்.

ஒருவேளை அபிஷேக் சர்மாவின் அந்த வாய்ப்பை நாங்கள் சரியாகப் பயன்படுத்தியிருந்தால், அவர்களைக் குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தி இருக்கலாம்.

ஆனால், ஒரு பேட்ஸ்மேன் அவ்வளவு சிறப்பாக விளையாடும்போது, அவருக்கு நாம் பாராட்டு தெரிவித்தே ஆக வேண்டும்.

ஒரு பேட்ஸ்மேன் இதுபோல வெறித்தனமாக ஆடும்போது, யாராலுமே அவரைத் தடுக்க முடியாது. நீங்கள் திட்டமிட்டபடி சரியாகப் பந்துவீசியும், அவர் நல்ல ஷாட் அடித்தால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று பந்துவீச்சாளர்களிடமும் இதையேதான் சொன்னேன்.

பீல்டிங் என்பது நம் கையில் இருக்கும் விஷயம். கேட்ச் பிடிப்பது மற்றும் ரன்-அவுட் செய்வதை நாம் சரியாகச் செய்திருக்க வேண்டும்.

SRH Vs DC Match
SRH Vs DC Match

இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவாக இருப்பது மிகவும் முக்கியம். அந்த இடத்தில்தான் நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். இப்போதைக்கு அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் தேவையில்லை" என்று அக்சர் படேல் பேசினார்.

SRH vs DC: "கேமராவை என் அப்பா பக்கம் திருப்பி அவர் ரியாக்ஷனைப் பாருங்க" - ஆட்டநாயகன் அபிஷேக் சர்மா

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல் 21) ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.அபிஷேக் சர்மாவின் அதிரடி சதமே சன்ரைசர்ஸ் அணியின் ... மேலும் பார்க்க

IPL: கேன்வாஸ் ஷுவில் பயிற்சி; சைக்கிளில் பயணம்; மும்பை அணியில் அசத்தும் அஸ்வனி குமார் - யார் இவர்?

'எப்போதெல்லாம் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்று நினைப்பேன்' என உத்வேகமாக பேசிய மும்பை அணியின் இளம் வீரரான அஸ்வனி குமார் குஜராத் அணிக்கு எதிரான நேற்றைய (ஏப்... மேலும் பார்க்க

GT vs MI: "ஹர்திக் பாயுடன் இணைந்துதான் திட்டமிட்டேன்" - மும்பையின் கம்பேக் வெற்றி குறித்து அஸ்வனி

ஐபிஎல் தொடரின் நேற்றைய (ஏப்ரல்20) ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை அணியும் மோதின.இதில் 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் புள்ளி... மேலும் பார்க்க

GT vs MI: "மைதானத்தில் நான் கொடுத்த எனர்ஜி எனக்கே தலைசுற்றலை ஏற்படுத்தியது, ஆனால்.!"- ஹர்திக்

ஐபிஎல் தொடரில் நேற்று (ஏப்ரல்20)நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு மு... மேலும் பார்க்க

GT vs MI: 'OG is Back டி' - கம்பேக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ்; வீழ்ந்த குஜராத் டைட்டன்ஸ்!

"மூழ்காத ஷிப்பே மும்பை ஷிப்பா" எனப் பாட வைக்குமளவு தனது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது மும்பை அணி.ரபடாவின் பீரங்கித் தாக்குதலில் தொடங்கி, திலக் வர்மாவினை கதாநாயகனாக்கிய குஜராத்தின் திக்திக்... மேலும் பார்க்க

CSK: சென்னை அணிக்குப் பின்னடைவு? - ஆயுஷ் மாத்ரேவுக்கு பதில் யாரை களமிறக்கப் போகிறது சிஎஸ்கே?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை ரசிகர்கள் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை. சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது. பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் சொதப்பி வருகிறது. இதுவரை ஆறு போட்டிகளி... மேலும் பார்க்க