`ராஜா அப்படிப்பட்டவர் அல்ல; தவறான கணிப்பில் இப்படி...' - சர்ச்சை சம்பவம் குறித்த...
T20 WC: பாகிஸ்தான் வீரரின் பந்து வீச்சு; கிளம்பும் எதிர்ப்புகள் - ஆதரிக்கும் அஷ்வின்
கொழும்புவில் நடைபெற்ற அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில், உஸ்மான் டரிக் பந்துவீசிய விதம், தற்போது பேசுப்பொருளாக மாறியிருக்கிறது.
பேசுப்பொருளான உஸ்மான் டரிக் பந்துவீச்சு
உஸ்மான் டரிக், பந்துவீச வரும்போது, பந்தை ரிலீஸ் செய்வதற்கு முன், இரண்டு நொடிகள் வரை நின்றுவிட்டு பிறகு பந்துவீசுவார்.
மேலும், அவரது கை ஆக்ஷன், மற்ற பௌலர்களைப் போல இல்லாமல், சற்று வித்தியாசமாக இருக்கும். கேதர் ஜாதவைப் போல பந்துவீசுவார். ஆனால், அப்படி பந்துவீசும்போது, உஸ்மான் டரிக்கின் கை, நேராக இல்லாமல், சற்று வளைந்து திரும்பி இருக்கும்.

ஐசிசி விதிமுறைப்படி, பந்துவீசும் கை 15 டிகிரிவரை வளைந்திருக்கலாம். ஆனால், உஸ்மானின் கை அதற்கும் மேல் வளைந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
உஸ்மான் டரிக் விளக்கம்
இந்தக் குற்றச்சாட்டுக்கு உஸ்மான் டரிக் விளக்கமும் அளித்திருக்கிறார். அதாவது, " எனது கை, இயற்கையாகவே வளைந்திருக்கிறது. எனது கையை நேராக நீட்ட முடியாது. இதனை ஐசிசியும் சோதித்து பார்த்துவிட்டது. இது எனது உடம்பில் இருக்கும் மாற்றம். இதனை மாற்ற முடியாது’’ என்று கூறியிருக்கிறார்.
எழும் விமர்சனங்கள்
ஆனால் உஸ்மான் டரிக், பந்தை ரிலீஸ் செய்யும் முன், 2 நொடிகள் வரை அப்படியே நின்று, பேட்டர் எந்த ஷாட்டை ஆட தயாராக இருக்கிறார் என்பதை யூகித்து பிறகு பந்துவீசுகிறார்.
கால்பந்தில், இது தடை செய்யப்பட்ட ஒன்று, பெனால்டி ஷாட்டின்போது பந்தை உதைக்க ஓடி வரும் வீரர், ஒரு நொடி அப்படியே நின்று, பிறகு பந்தை எட்டி உதைத்தால் அது செல்லாது. அதேபோல்தான், கிரிக்கெட்டிலும் தடை விதிக்க வேண்டும் கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

அஷ்வின் விளக்கம்
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அஷ்வின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், " உஸ்மான் டரிக்கின் பந்துவீச்சு செயல் சட்டப்பூர்வமானதா? என்பதை ஐசிசி பந்துவீச்சு செயல் பரிசோதனை மையத்தால் மட்டுமே சொல்ல முடியும்.
ஒரு பந்துவீச்சாளர் தனது முழங்கையை அதிகபட்சம் 15 டிகிரி வரை மட்டுமே நிமிர்த்தலாம் என்ற விதி இருக்கிறது.
நடைமுறையில் இயலாத ஒன்று!
ஆனால், அந்த 15 டிகிரி வரம்புக்குள் பந்துவீசுகிறாரா? என்பதை மைதானத்தில் உள்ள நடுவர் நேரடியாக கணக்கிடுவது நடைமுறையில் இயலாத ஒன்று.
இதற்கான ஒரே தீர்வு, போட்டி நடைபெறும் நேரத்திலேயே உடனடி (real-time) பரிசோதனை செய்யக்கூடிய தொழில்நுட்ப வசதியை கொண்டிருப்பதுதான்.
அது அவரது வழக்கமான பந்துவீச்சு முறையின் ஒரு பகுதியாக இருப்பதால், அது முற்றிலும் சட்டபூர்வமானதே என்று நான் நம்புகிறேன்.

சரியா? தவறா?
மேற்குறிப்பிடப்படும் இந்த விஷயம் தெளிவற்ற ஒன்று. அதற்காக ஒரு தனிப்பட்ட நபரை குற்றஞ்சாட்டுவது முறையல்ல.
பந்து வீசும்போது ஒரு நொடி அப்படியே நின்று விட்டு வீசுவது முறையா? தவறா? எனும் கேள்வி எழுகிறது. அது முறையானதே. ஏனெனில் அதுதான் அவரின் வழக்கமான ஆக்ஷன்" என்று அஷ்வின் பதிவிட்டிருக்கிறார்.




















