செய்திகள் :

TASMAC: `ஆன்லைனில் பேமென்ட் தான் செய்ய முடியும்; கடைகளில் தான் டெலிவரி' - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்

post image

தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இந்தக் கூட்டத்தொடரின் ஒரு பகுதியாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ்.

அவரிடம் ஆன்லைன் மதுபான விற்பனை உள்ளிட்ட டாஸ்மாக் சம்பந்தமான பல கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தக் கேள்விகளுக்கு அவருடைய பதில்கள்...

மதுபானஆன்லைன் ஆர்டர்?

ஆன்லைனில் மது விற்பனை செய்யப்படுவதாக வரும் செய்திகள் தவறானவை. அது ஆன்லைன் விற்பனை கிடையாது. அது ஒரு டிஜிட்டல் பேமென்ட் முறை மட்டுமே.

டாஸ்மாக்
டாஸ்மாக்

ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ கசிந்ததால், 'ஹோம் டெலிவரி' என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் எந்தக் கடையில் என்னென்ன மதுபான வகைகள் இருப்பில் உள்ளன என்பதை மக்கள் வெளிப்படையாகத் தெரிந்து கொள்ளலாம். இது அரசு நிர்வாகத்திலும், கடைகளிலும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும்.

மதுபான விலையை உயர்த்தும் எண்ணம் அரசுக்கு இல்லை. விலையை உயர்த்தி வருவாயைப் பெருக்குவதை விட, இந்தத் துறையில் பல ஆண்டுகளாக நடக்கும் ஊழல்களைக் கண்டறிந்து தடுத்தாலே, அரசுக்கான வருவாய் தானாகவே அதிகரிக்கும். கடந்த ஆண்டு ரூ.51,000 கோடியாக இருந்த வருவாய் இலக்கை, இந்த ஆண்டு ரூ.55,000 கோடியாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.

கூடுதல் 10 ரூபாய்?

இந்த 10 ரூபாய் கூடுதல் வசூல் என்பது இன்று நேற்றல்ல, 2011-ஆம் ஆண்டிலிருந்தே நடைமுறையில் இருக்கிறது. ஊழியர்களுக்கு ஏற்படும் ஏற்றி இறக்கும் கூலி, மின்சாரக் கட்டணம், கடை வாடகை போன்ற செலவுகளுக்காக இதை வாங்குவதாகக் கூறுகிறார்கள். இப்போது அரசு அந்தச் சுமைகளை ஊழியர்கள் மீது சுமத்தாமல் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

முக்கியமாக, ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு மற்றும் இ.எஸ்.ஐ (ESI) வசதி செய்து தரப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதன் மூலம், நுகர்வோரிடம் இருந்து கூடுதலாகப் பணம் வசூலிப்பது முழுமையாகத் தடுக்கப்படும்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

மேலும் கடைகள் மூடல்?

ஏற்கனவே 717 கடைகளை மூடியிருக்கிறோம். பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் உள்ள கடைகள் மற்றும் பெண்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகளை ஆய்வு செய்து இடமாற்றம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மக்களின் புகாருக்குள்ளாகும் கடைகள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

நாங்கள் செய்வது விற்பனையை அதிகரிப்பதற்கான வளர்ச்சி அல்ல, மாறாக இந்தத் துறையில் தேவைப்படும் சீர்திருத்தங்கள் மட்டுமே. மக்கள் படும் சிரமங்களை அரசு உணர்ந்துள்ளது, அவை படிப்படியாகச் சரி செய்யப்படும்."

நள்ளிரவு டெல்லி ஃபோன்கால்... கேன்சலாகிறதா அமித் ஷா - எடப்பாடி சந்திப்பு?

தென்னிந்திய முதல்வர்கள் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக, இன்றிரவு சென்னை வருகிறார் அமித் ஷா. கோவளத்திலுள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்குபவர், பின்னிரவில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி... மேலும் பார்க்க

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள்; அரசின் ஈடு இணையற்ற சாதனை"- சீமான் கண்டனம்

"100 நாள் ஆட்சியில், 6 காவல் நிலைய மரணங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதுதான் தவெக கொடுங்கோன்மை அரசின் ஈடு இணையற்ற சாதனை" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அ... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம் குறித்த சுற்றறிக்கை: "பாசிச அரசியலைத் தொடங்க ஆழம் பார்த்ததா தவெக அரசு?"- கனிமொழி

காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து சில நிமிடங்களிலேயே இந்த ... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சி ஆகிவிட்டோம்' தவெக கூட்டணியை உறுதி செய்த திருமா; பாமக-வுக்கு வைத்த செக்! - பின்னணி என்ன?

தவெக அமைச்சரவையில் அமைச்சர் வன்னி அரசு இடம்பெற்றிருந்தாலும் எந்தக் கூட்டணியில் விசிக இருக்கிறது என்பதை தெளிவாக கூறாமல் திருமாவளவன் குழப்பி வந்தார். 'திமுகவுடன் எங்களது நட்பு தொடர்கிறது' என்று திமுகவிற... மேலும் பார்க்க

மேகமலை: `துணை ராணுவப் படையை அனுப்ப நேரிடும்; முழுமையாக இடித்து அகற்றுங்கள்'- உச்ச நீதிமன்றம் அதிரடி

மேகமலை புலிகள் சரணாலயம் மற்றும் மாஞ்சோலையைச் சுற்றியுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், இலவம் பஞ்சு தோட்டங்களையும் முழுமையாக அப்புறப்படுத்த உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையான உத்... மேலும் பார்க்க

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?'- திமுக கேள்வி

`முதலமைச்சரை மிஞ்சிய சூப்பர் பவரின் கையில் ஆட்சி இருக்கிறதா?' என திமுக கேள்வி எழுப்பியிருக்கிறது.இது தொடர்பாக வெளியாகியிருக்கும் அறிக்கையில், `நேற்றைய தினம் அதிகார ஆணவத்திமிரோடு, “திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க