செய்திகள் :

TN Budget 2025: `நிறைய புதிய திட்டங்களை அறிவிச்சுருக்காங்க, ஆனா...' - எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?

post image

தமிழ்நாட்டின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

பட்ஜெட் குறித்து அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் 2025 -26 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "பட்ஜெட்டில் நிறையப் புதியத் திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இந்தத் திட்டத்திற்கு தேவையான நிதி எங்கிருந்து கிடைக்கும் என்று தெரியவில்லை. 2021 சட்ட மன்றத் தேர்தலின்போது திமுக 525 அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்கள். அதில் 15 சதவிகித அறிவிப்புகள் கூட நிறைவேற்றப்படவில்லை. ஆனால் ஸ்டாலின் அவர்கள் கடந்த 4 ஆண்டுகளில் 95 சதவிகிதப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகப் பொய்யானத் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

அதில் சிலவற்றை குறிப்பிடுகிறேன். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் சொல்லி இருந்தார்கள். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதான் திமுக அறிவிப்பின் லட்சணம். கல்வி கடன் ரத்து, நூறு நாள் வேலைத்திட்டம் 150 நாளாக மாற்றுதல் அவர்களின் ஊதிய உயர்வு, எரிவாயு சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை, ரேஷன் கடைகளில் 1 கிலோ கூடுதல் சர்க்கரை என பல விஷயங்களைத் தேர்தல் நேரத்தில் அறிவித்திருந்தார்கள். ஆனால் பட்ஜெட்டில் இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஸ்டாலின் எப்போதும் ஒரு திட்டத்தை அறிவிப்பார். அதற்கு குழு ஒன்றை அறிவிப்பார். ஆனால் அந்த குழுவின் நடவடிக்கைப் பற்றி எதுவும் அறிவிக்க மாட்டார்கள். மொத்தத்தில் முதல்வரும், துணை முதல்வரும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள முனைப்பு காட்டுகிறார்கள். ஆனால் மக்களின் பிரச்னையைக் கண்டுகொள்வதில்லை. இன்றைய ஆட்சி வெறும் விளம்பரத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. 2026 தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

கடந்த 4 ஆண்டுகளில் 50,000 அரசுப்பணிகள் நிரப்பட்டன. ஓராண்டில் 40,000 அரசுப் பணியிடங்களை நிரப்புவதாகச் சொல்லி இருகிறார்கள். அப்படி நிரப்ப முடியுமா? தமிழ்நாடு கடனில் தத்தளிக்கிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி இல்லை. நிர்வாக திறமையற்ற ஆட்சி நடக்கிறது" என்று எடப்பாடி திமுகவை சாடி இருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``கட்சி கொடி கம்பங்களை அகற்ற அவசரம் ஏன்? திமுக மேல்முறையீடு செய்ய வேண்டும்" - சிபிஎம்., சண்முகம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 6 தேதி வரை மதுரையில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்த கருத்தரங்கு மற்றும் நிதியளிப்பு பொதுக்கூட்டம் தேனியில் நடைபெற்றது. பொதுக் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: ``இதய நோய்க்கான மாத்திரையை வெளியே விற்கிறார்கள்..'' - அரசு மருத்துவமனையை சாடிய திமுக

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் வெளிப்புற சிகிச்சைப் பெற்று வரும் இதய நோயாளிகளுக்கு, அசிட்ரோம் (Asitrom 2 / NICOUMALONE – CGTROM) என்ற மாத்திரை வழங்கப்படுகிறது. இந்த மாத்திரை இரத்தம் உறைதலை கட்டுப்பட... மேலும் பார்க்க

Grok AI: ``அரசியல் விமர்சனங்களுக்கு தணிக்கை..'' - செயற்கை நுண்ணறிவை நெருக்கும் மத்திய அரசு!

எலான் மஸ்கின் எக்ஸ் தளத்தில் செயல்படும் க்ரோக் (Grok), சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு சாட்போட். ட்வீட்களில், கமண்ட் செக்‌ஷனில் க்ரோக்கை சுட்டி கேள்விகள் கேட்கும் ஆப்ஷன் அறிமுகப்படுத்தியப் பிறகு, அரட்ட... மேலும் பார்க்க

Ukrain - Russia: ``ட்ரம்ப் எந்த அழுத்தத்திலும் இல்லை..'' - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புகழாரம்!

ரஷ்யா போர் நிறுத்த விதிமுறைகளை மீறினால், அதே வழியில் உக்ரைன் பதிலளிக்கும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டிருக்கிறார். கடந்த பிப்ரவரி 28 அன்று, கனிம ஒப்பந்தம் மற்றும் உக்ரைனில் போரை முடிவுக்குக... மேலும் பார்க்க

கவுன்சிலரிடையே மோதல்; மேசையை தூக்கிவீசி அமளிதுமளி- களேபரமான சிவகாசி மாமன்ற கூட்டம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் சங்கீதா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தீர்மானம் குறித்து விவாதம் தொடங்கியபோது, பா.ஜ.க. உறுப்பினர் குமரிபாஸ்கர், மாநகராட... மேலும் பார்க்க

Health: வைட்டமின்- டி குறைபாடு இருப்பவர்கள் மீள்வது எப்படி?

நமது உடலில் எலும்புகளின் கட்டுமானம் சரியாக இருந்தால்தான் நாம் நிற்க, நடக்க, ஓட என எந்த வேலையையும் செய்ய முடியும். எலும்புகளின் கட்டுமானம் சரியில்லை என்றால் நம்மால் எழுந்திருக்கக்கூட முடியாது. எலும்பின... மேலும் பார்க்க