செய்திகள் :

TNPL 2026 : சொதப்பிய சேலம் ஸ்பார்டன்ஸ்‌ - பவுலிங்கில் ஆதிக்கத்தை இறக்கியது மதுரை பாந்தர்ஸ்!

post image

சேலம் ஸ்பார்டன்ஸ் vs மதுரை பாந்தர்ஸ்-க்கான 11 ஆவது TNPL போட்டி திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 20 ஓவர்களுக்கு மதுரை பாந்தர்ஸ் அணி 195 ரன்கள் குவித்திருந்தனர். இரண்டாவதாக இறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸ் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை கண்டது.

டாஸ் வென்ற சேலம் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கில் களமிறங்கிய மதுரை பாந்தர்ஸ்-ன் தொடக்க வீரர்களான ராம்குமார் மற்றும் மகாதேவனின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களை எட்டிய போது. பொய்யாமொழி தனது அதிரடியான பவுலிங்கின் மூலம் அந்த பார்ட்னர்ஷிப்பை தகர்த்தெறிந்தார்.

சென்ற ஆட்டத்தில் கோவை கிங்க்ஸ்-க்கு எதிராக ஆடி 121 ரன்கள் குவித்து அதிரடி கிளப்பிய என்.எஸ் சதுர்வேத் இன்றைய ஆட்டத்திலும் அதைச் செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் 5(4) என்ற சொற்ப ரன்களில் கேட்ச் செய்யப்பட்டு வெளியேறினார்.

சித்தார்த் மகாதேவன் 42 பந்துகளுக்கு 60 ரன்களை சிறுக சிறுக சேர்த்து பின் போல்டாகி வெளியேறினார். ஆத்திக் மற்றும் மகாதேவனின் பார்ட்னர்ஷிப் 50(40) என கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. 20 ஓவர் முடிவில் மதுரை பாந்தர்ஸ் அணி 195 என்ற இலக்கை வைத்தது.

பாந்தர்ஸின் பவுலிங்கால் பலம் இழந்தது ஸ்பார்டன்ஸ் !

195 என்ற இலக்கை நோக்கி இறங்கிய சேலம் ஸ்பார்டன்ஸின் தொடக்கம் சூடு பிடித்தாலும் பின் ஏனோ கை நழுவ தொடங்கியது.

ரன் அடித்தே ஆக வேண்டும் என்ற நோக்கம் களமிறங்கிய வீரர்களுக்கு இருந்தாலும், ஒரு வீரரை கூட 30 ரன்களுக்கு மேல் தொட விடாமல் சேலம் ஸ்பார்டன்ஸை தனது நேர்த்தியான பந்து வீச்சின் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்தது மதுரை பாந்தர்ஸ்.எம்.முகமது-வின் வெறும் 30 ரன்கள் மட்டுமே சிறிது ஆறுதல்.

பின், 20 ஓவர்களுக்கு மொத்த விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களுக்கு சுருண்டது சேலம் ஸ்பார்டன்ஸ்.

இதன் மூலம் மதுரை பாந்தர்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று. பாயிண்ட்ஸ் டேபிலில் 6 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தைப் பிடித்தது.

இதில் சிறப்பாக பந்து வீசி 9 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்த ரோஹன் ரவி புத்ரா "மேன் ஆஃப் தி மேட்ச்" பெற்றார் .

`பூரணை நீங்க எடுத்துக்குங்க; ஹர்திக்க குடுங்க' - LSG யின் டிரேட் டீல்-க்கு ‘ஓகே’ சொல்லுமா மும்பை?

ஐபிஎல் 2027 போட்டிகளுக்கு இன்னும் காலம் இருக்கிறது... ஆனால் அடுத்த சீசனுக்கான டிரேட் பேச்சுகள் எப்போதோ சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. அதிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்ட்யாவின் டிரேட் பற்றி ... மேலும் பார்க்க

TNPL 2026: ஒரே நாள்... இரு அதிரடி சேஸ்! திண்டுக்கல்லில் தெறிக்கவிட்ட சேப்பாக் –திருப்பூர் அணிகள்!

TNPL 2026-ல் ஆகஸ்ட் 9-ம் தேதி திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடந்த இரண்டு போட்டிகளும் பேட்டிங் அதிரடியால் ரசிகர்களை கட்டிப் போட்டன. பிற்பகலில் நடந்த 9-வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸை 7 ... மேலும் பார்க்க

TNPL 2026: 40 பந்துகளில் சதம்... கோவையைச் சிதறடித்த சதுர்வேத்; மதுரையின் மிரட்டல் சேஸ்!

திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற TNPL 2026-ன் 7-வது போட்டியில், கோவை கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் 239 ரன்கள் குவிக்க, அதை 19.3 ஓவர்களில் துரத்த... மேலும் பார்க்க

பிரிட்டன் குடியுரிமை; ஐபிஎல் போட்டியில் பாகிஸ்தான் வீரரா? - யார் இந்த முகமது அமீர்?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர இடதுகை வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் 2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தற்போது பிரிட்டன் குடியுரிமை ... மேலும் பார்க்க

TNPL 2026: சச்சினின் அதிரடி... நிதிஷின் போராட்டம் - சேலத்தை வீழ்த்திய கோவை கிங்ஸ்!

தமிழ்நாடு பிரீமியர் லீக் 2026 தொடரின் 4-வது லீக் போட்டி, திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் கோவை கிங்ஸ் - சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் பரபரப்பாக நகர்ந... மேலும் பார்க்க

RBI வங்கி மேலாளராக கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன்; சம்பளம் எவ்வளவு தெரியுமா?| வைரல் புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான இஷான் கிஷன், பாட்னாவில் உள்ள ரிசர்வ் வங்கி (RBI) கிளையில் உதவி மேலாளராக பணியாற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வங்கி ஊழியர்களுடன் அவர... மேலும் பார்க்க