செய்திகள் :

Toxic: "'என் நெஞ்சில் குடியிருக்கும்' என்று சொல்லலாம்; ஆனால்..." - விஜய் குறித்து யஷ்

post image

‘டாக்ஸிக்’ படத்தின் ப்ரி ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நேற்று (ஆகஸ்ட்.24) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய யஷ், "இந்த அன்பிற்கு நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இப்போது 'என் ரத்தத்தில் ரத்தமான' என்று சொல்லலாம் என்றால் அதை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சொல்லிவிட்டார்.

'என்னை வாழவைத்த தெய்வங்களே' என்று சொல்லலாம் என்றால் தலைவர் ரஜினிகாந்த் சார் சொல்லிவிட்டார்.

யஷ்
யஷ்

'என் நெஞ்சில் குடியிருக்கும்' என்று சொல்லலாம் என்றால் தளபதி விஜய் சார் சொல்லிவிட்டார். அதனால், 'என்னைத் தத்தெடுத்த தமிழ்மக்களே' என்கிறேன்.

இந்தச் சமயத்தில் தமிழ் மக்களுக்கு நான் உண்மையிலேயே சல்யூட் செய்கிறேன். 'ஜன நாயகன்' படம் நெட்டில் லீக் ஆனபோது தயாரிப்பாளருக்கும், படக்குழுவினருக்கும் அது எவ்வளவு பெரிய வேதனை என்பது எனக்குத் தெரியும்.

ஆனால் நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்த தயாரிப்பாளருக்காகவும், விஜய் சார் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்காகவும், லீக் ஆன பிறகும் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்த்து உழைப்பை மதித்தீர்கள்.

சினிமாவையும் அதன் பின்னணியில் உள்ள உழைப்பையும் மதித்த தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

விஜய் சாரின் அர்ப்பணிப்பைப் பார்த்து பல விஷயங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

யஷ்
யஷ்

மக்கள் அவர் மீது முழு நம்பிக்கை வைத்து பொறுப்பைக் கொடுத்துள்ளனர். அவர் தமிழக மக்களுக்காகக் காட்டும் அர்ப்பணிப்பு அளப்பரியது.

மக்கள் கொடுத்த அன்பைத் திருப்பித் தரும் நிலைக்கு அவர் வந்திருக்கிறார். அவரது புதிய பயணத்திற்கு எனது வாழ்த்துகள். நாங்கள் சாதாரண மனிதர்கள்.

மக்கள்தான் எங்களை ஹீரோவாக ஆக்குகிறார்கள். அவர்களை மகிழ்விப்பது மட்டுமே எங்கள் கடமை. தொடர்ந்து மக்களை மகிழ்விப்போம்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.

What To Watch: 'சர்தார் 2', 'மண்டாடி', 'விஸ்வநாத் & சன்ஸ்' - இந்த வாரம் ரிலீஸ்கள் | முழு லிஸ்ட்

மண்டாடி: 'மண்டாடி' திரைப்படம் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில் சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார் ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது. இத்திரைப்படம் திரையரங்குகளில் செப்டம்பர் 10-ஆம்... மேலும் பார்க்க

"நான் என் அடையாளத்தை இழந்துவிட்டதுபோல் உணர்ந்தேன்" - சமந்தா

நடிகை சமந்தா சமீபத்தில் 'The Hollywood Reporter' ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கிறார். மயோடிஸ் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து அந்த நேர்காணலில் பேசியிருக்கும் சமந்தா, "மயோடிஸ் நோயால் நான் பாதிக... மேலும் பார்க்க

ஆரண்ய காண்டம் : வன்முறை அழகியல்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 23

`சினி'ஸ்கோப் 23ஆரண்யகாண்டம்பசுபதியை கஜேந்திரனின் ஆட்கள் துரத்திக் கொண்டிருக்கிறார்கள். பசுபதி பயத்துடன் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறான். அதுவொரு பரபரப்பான சேஸிங் காட்சி. ஏதேதோ குழப்பமான பின்னணி இசை ... மேலும் பார்க்க

Mandaadi: "ஒரு மீனவனா நடிச்சதை நான் பாக்கியமாக நினைக்கிறேன்!" - நடிகர் சூரி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'மண்டாடி' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. Mandadi இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இப்படத்தின் மு... மேலும் பார்க்க

Sardar 2 Review: அதிக பிரமாண்டம், அச்சுறுத்தும் களம்; ஆனாலும் இந்த சர்தார் சறுக்குவது எங்கே?

RAW ஏஜென்ட்டான விஜய் பிரகாஷ் (கார்த்தி), தனது தந்தை சர்தார் சந்திரபோஸின் (கார்த்தி) கடந்தகாலத்துடன் தொடர்புடைய முக்கியமான மிஷனுக்குள் இழுக்கப்படுகிறார். சில நொடிகளில் லட்சக்கணக்கான உயிர்களைப் பறிக்கக்... மேலும் பார்க்க

Mandaadi Review: புதிய களம், பழைய டெம்ப்ளேட்; ஆனாலும் மிரட்டும் தாட்டியக்காரன் இந்த மண்டாடி!

ஊரில் தன்னை பாய்மரப் படகு போட்டியில் சேர்க்க மறுக்கும் சட்டாப்புலியின் (சுஹாஸ்) மகனைக் கொல்ல முயற்சி செய்கிறார் மாரி (மிதுன் ஜெய் சங்கர்). ஆனால், இதில் மாரியின் குறி தவறிவிட, சட்டாப்புலியும் அவரின் ஆட... மேலும் பார்க்க