செய்திகள் :

Trump: "பொழுதுபோக்கிற்காக மீண்டும் தாக்குவோம்" - ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ட்ரம்ப்

post image

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதில் தாக்குதல் தொடுத்துவருகிறது ஈரான்.

கடந்த பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடந்து வரும் இந்த வான்வழிப் போரில் இதுவரை 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் இஸ்ஃபஹான் நகரில் உள்ள தொழிற்சாலை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் பலியாகினர்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் பெரும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

ட்ரம்ப்
ட்ரம்ப்

இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப் NBC செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ``ஈரானின் கர்க் தீவில் (Kharg Island) உள்ள பெரும்பாலான ராணுவ இலக்குகள் ஏற்கனவே அமெரிக்கத் தாக்குதலில் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டன.

தேவைப்பட்டால் பொழுதுபோக்கிற்காக இன்னும் சில முறை அங்கு தாக்குதல் நடத்துவோம் ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது. ஆனால் அவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் ஏற்புடையதாக இல்லை.

ஈரானுடனான இந்த மோதலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. எனவே, உலகின் முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்ய சீனா, பிரான்ஸ், ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும். அந்தப் பகுதியின் பாதுகாப்பிற்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு வழங்கும்" எனக் குறிப்பிட்டார்.

ஈரான் போர்
ஈரான் போர்

இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் ஈரான், ``அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்கள் நிறுத்தப்படும் வரை போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை. துபாய், அபுதாபி மற்றும் புஜைரா (Fujairah) போன்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய துறைமுகப் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு எச்சரிக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.

இதற்கிடையில், ஈரானிலிருந்து அமீரகத்தை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால், அங்குள்ள முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் உலகளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு பெருமளவில் ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

"ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுவோம்" - மதுரை ரஜினி காந்த் ரசிகர்கள் ஆவேசம்

சென்னையில்கடந்த வாரம் தவெக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து மிகப்பெரிய அரசியல... மேலும் பார்க்க

`அதிமுக உறுப்பினர் கார்டை கிழிச்சு போடக்கூட மனசு வரலை!'- சசிகலா கட்சியின் நிறுவன தலைவர் சக்கரவர்த்தி

தனது ஆதரவாளர் ஒருவர் பதிவு செய்து வைத்திருந்த ‘அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்னும் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியிருக்கிறார் மறைந்த ஜெ.ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா.சக்கரவ... மேலும் பார்க்க

"தேர்தலில் போட்டியிடும்படி மோடியின் பிரதிநிதி என்னை சந்தித்தார்" - எம்.பி ஆக ஆசைப்படும் ஐ.எம்.விஜயன்

கேரளாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கேரளாவைச் சேர்ந்த இந்தியக் கால்பந்து ஜாம்பவானும், நடிகரும், போலீஸ் அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற ஐ.எம்.விஜயன் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க சார்பில் ... மேலும் பார்க்க

இறுதியான என்.ஆர் - பாஜக கூட்டணி; தவெக-வுக்கு வலை வீசும் ரங்கசாமி! - புதுவையில் விசிலடிப்பாரா விஜய்?

புதுச்சேரி, தமிழகம் உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிவிப்பு இன்றே கூட வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங... மேலும் பார்க்க

``கூட்டணிக்காக நாங்கள் யாரையும் எதிர்பார்த்து இல்லை" - அண்ணாமலை அதிரடி

கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமிக்கு நடத்த கொடூரத்திற்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை. புகார் அளித்த... மேலும் பார்க்க

திருச்சி: "திமுக-விற்கு வாக்களிப்பது தற்கொலைக்கு சமம்!" - பி.ஆர்.பாண்டியன் ஆவேசம்

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி விவசாயிகளுக்கு எதிராகவேதான் கடந... மேலும் பார்க்க