செய்திகள் :

TVK : `ஒளி ஒன்று பிறக்கும்; அது நம்மை வழிநடத்தும்; Praise The Lord' - கிறிஸ்துமஸ் விழாவில் விஜய்

post image

தவெக சார்பில் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய், " இது ஒரு அன்பான தருணம். அழகான தருணம். அன்பும் கருணையும்தான் எல்லாத்துக்கும் அடிப்படை.

தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்னுதானே?

இது இரண்டும் இருக்குறதுதான் தாய் மனசு. நம்ம தமிழ் மண்ணும் தாய்ப்பாசம் கொண்ட மண் தான்.

தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்னுதானே? நம்முடைய வாழ்க்கை முறையும் வழிபாட்டு முறையும் வேறாக இருந்தாலும் நம்ம எல்லாரும் சகோதர்கள்தானே.

சமத்துவ கிறிஸ்துமஸ் விழா
சமத்துவ கிறிஸ்துமஸ் விழா

ஒரு இளைஞனுக்கு எதிராக தன்னுடைய சொந்த சகோதரர்களே அவனை பாழங்கிணற்றில் தள்ளிவிட்டார்கள்.

அவன் மீண்டு வந்து அந்த நாட்டுக்கே அரசனான். அரசனாகி தன்னை தள்ளிவிட்ட சகோதர்களையும் நாட்டையும் காப்பாத்தினான்.

இதே மாதிரி பைபிள்ல நிறைய கதைகள் இருக்கு. அந்த கதை யாரை குறிக்குதுன்னு சொல்லி தெரிய வேண்டிய அவசியமில்லை.

அது உங்களுக்கே தெரியும். சமூக சமய நல்லிணக்கத்தை பாதுகாப்பத்தில் தவெக 100% உறுதியாக இருக்கும்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

கண்டிப்பாக ஒரு ஒளி பிறக்கும். அந்த ஒளி நம்மை வழிநடத்தும். அனைத்து புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே. Praise the Lord. எல்லாருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். அனைத்து புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கே பொருந்தும்.” என்றார்.

பெருநிறுவனங்கள் பாஜகவிற்கு வழங்கிய ரூ.3,112 கோடி; யார் கொடுத்தார்கள்? காங்கிரஸிற்கு எவ்வளவு?

தேர்தல் பத்திரங்களில் பல்வேறு முறைகேடுகள் நடக்கின்றன என்று கடந்த ஆண்டு அந்தப் பத்திரங்களை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். இதனால், பெரு நிறுவனங்கள் தற்போது அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் அறக்கட்டளைகள் (... மேலும் பார்க்க

`சித்ரவதை, தற்கொலை முயற்சி, அச்சத்தில் வாழ்க்கை' மோடியிடம் நியாயம் கேட்கும் மும்பை ஹாஜி மஸ்தான் மகள்

மும்பையில் மாபியாவிற்கு முதன் முதலில் வித்திட்டது ஹாஜி மஸ்தான் ஆவார். மும்பை தென்பகுதியில் கடத்தலில் பிரதானமாக ஈடுபட்டிருந்த ஹாஜி மஸ்தான் மற்றொரு தாதாவான வரதராஜ முதலியார் என்பவருடன் இணைந்து செயல்பட்டா... மேலும் பார்க்க

விஜய்: `மீட்பர்; ஒரு அரசன் வருவான்!' - ஸ்கோர் செய்த திமுக; சுதாரித்த தவெக - கிறிஸ்துமஸ் விழா பின்னணி

விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழாவை நடத்தி முடித்திருக்கிறது தவெக. விழாவில் கலந்துகொண்ட பாதிரியார்களும், கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்தவர்களும் விஜய்யை 'மீட்பர்' லெவலுக்கு பேச விஜய் 'ஒரு அரசன் வருவான்!' எ... மேலும் பார்க்க

மும்பை தேர்தல்: தொகுதிப் பங்கீட்டை முடிக்க போராடும் தாக்கரே சகோதரர்கள்: பாஜக-விடம் இறங்கும் ஷிண்டே!

மகாராஷ்டிராவில் முதல் கட்டமாக உள்ளாட்சியில் உள்ள நகராட்சிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக மாநகராட்சிகளுக்கு வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்கான வேலையில் அரசியல... மேலும் பார்க்க