செய்திகள் :

TVK: `ஒன்றரை கிலோ மீட்டருக்காவது அனுமதி கொடுங்கள்!’ - விஜய் ரோடு ஷோ; `நோ’ சொன்ன ரங்கசாமி

post image

தமிழகத்தில் நடைபெற இருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருசில மாதங்களே இருக்கும் நிலையில், வரிந்து கட்டிக்கொண்டு ஆளும் கட்சியும், எதிர்கட்சிகளும் தேர்தல் பணிகளில் இறங்கியிருக்கின்றன.

அந்த வரிசையில் த.வெ.க தலைவர் விஜய்யும், மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் கரூரில் நடைபெற்ற துயரச் சம்பவத்தால் அங்கு தொடர்ந்து ரோடு ஷோ நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதியளிக்கவில்லை. அதனால் டிசம்பர் 5-ம் தேதி புதுச்சேரியில் `ரோடு ஷோ’ நடத்த த.வெ.க தரப்பில் அனுமதி கேட்டு, புதுச்சேரி காவல்துறை டி.ஜி.பி-யிடம் கடிதம் அளித்தனர்.

அந்தக் கடிதத்தில் ஈ.சி.ஆர் சாலையில் இருக்கும் காலாப்பட்டு பகுதியில் தொடங்கி, அஜந்தா சிக்னல், உப்பளம், மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், கன்னியக்கோயில் வழியாகச் சென்று மக்களைச் சந்திக்கவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

காவல்துறை அதிகாரிகளை சந்திக்க வந்த தவெக ஆனந்த், ஆதவ் அர்ஜுனா
காவல்துறை அதிகாரிகளை சந்திக்க வந்த தவெக ஆனந்த், ஆதவ் அர்ஜுனா

ஆனால் ரோடு ஷோவுக்கு விதிமுறைகள் வழங்குவது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி, புதுச்சேரி காவல்துறை அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது.

அதையடுத்து நேற்று மீண்டும் புதுச்சேரிக்கு வந்த த.வெ.க பொதுச் செயலாளர்கள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜூனா நான்காவது முறையாக முதல்வர் ரங்கசாமி, காவல்துறை டி.ஐ.ஜி உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்தனர்.  

ஆனால் ரோடு ஷோவுக்கு அனுமதி கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டது காவல்துறை. அது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டி.ஐ.ஜி சத்தியசுந்தரம், ``ரோடு ஷோவுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்திருக்கிறோம். அதேசமயம் நேரம் குறைவாக இருப்பதால் வேறு தேதியில் பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருக்கிறோம்” என்றார்.

அதைத் தொடர்ந்து டிசம்பர் 5-ம் தேதி நடக்கவிருந்த விஜய்யின் ரோடு ஷோ பொதுக்கூட்டமாக மாறி, அதுவும் தள்ளிப்போகும் சூழல் நிலவியது.

இந்த நிலையில்தான் இன்று காலை சட்டப்பேரவையிலுள்ள முதல்வர் ரங்கசாமியின் அறைக்கு டி.ஜி.பி ஷாலினி சிங், ஐ.ஜி அஜிஸ்குமார் சிங்ளா, டி.ஜ.ஜி சத்தியசுந்தரம் உள்ளிட்டவர்கள் வந்தனர்.

சட்டத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனுடன் அங்கு வந்த முதல்வர் ரங்கசாமி, ஊர்க்காவலர்களாக பயிற்சி பெற்ற 68 பேருக்கு பணி வாய்ப்பு இல்லாமல் போனது குறித்து காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். அதையடுத்து சட்டப்பேரவைக்கு வந்த த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முதல்வர் ரங்கசாமியை அவரது அறையில் சந்தித்தார்.

முதல்வர் ரங்கசாமியை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்
முதல்வர் ரங்கசாமியை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்

 அதன்பிறகு செய்தியாளர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் அங்கிருந்து வெளியேறினார் புஸ்ஸி ஆனந்த். முதல்வர் அலுவலகத்தில் அதுகுறித்து விசாரித்தபோது, ``ரோடு ஷோ நடத்த அவர்கள் கேட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அதற்கு அனுமதி வழங்க முடியாது என்று ஏற்கெனவே காவல்துறை தெரிவித்துவிட்டது.

இன்று புதுச்சேரி ஈ.சி.ஆர் சிவாஜி சிலை முதல் கொக்கு பார்க் வரை ஒன்றரை கிலோமீட்டருக்காவது அனுமதி கொடுங்கள் என்று முதல்வரிடம் கேட்டார் புஸ்ஸி ஆனந்த்.

ஆனால் காவல்துறை அதிகாரிகள் அனுமதிக்க முடியாது என்று உறுதியாக தெரிவித்துவிட்டதால் அதில் ஒன்றும் செய்வதற்கில்லை என்று கூறிவிட்டார்” என்றனர்.

தீவிரமாகும் பொதுக்குழு ஏற்பாடு; டெல்லியில் ஓ.பி.எஸ்... அதிமுகவில் கிளைமேட் சேஞ்ச் நடக்குமா?

2021 சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் அனலைக் கிளப்பியது. எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதல், வரலாற்றுச் சிறப்பு பொதுக்குழு எ... மேலும் பார்க்க

UN: 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நிலுவை; ரூ.5000 கோடி பட்ஜெட் கட்; நிதிப் பற்றாக்குறை ஐநா சபை

ஐக்கிய நாடுகள் சபை கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாக அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.2024ஆம் ஆண்டின் முடிவில், ஐநா சபைக்கு 760 மில்லியன... மேலும் பார்க்க

400 பேருக்கு மட்டும் அழைப்பு: சொந்த ஊரை தவிர்த்து பஹ்ரைனில் திருமணம் செய்துகொள்ளும் அஜித் பவார் மகன்

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசினார். அவரது மகன் ஜெய் பவாருக்கு வரும் 4ம் தேதியிலிருந்து 7ம் தேதி வரை திருமணம் நட... மேலும் பார்க்க

``ஆதவ் அர்ஜுனாவின் கிளி ஜோசியத்துக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது!'' - அமைச்சர் ரகுபதி காட்டம்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி,"பா.ஜ.க மற்றும் மோடியின் செல்வாக்கு தமிழ்நாட்டில் எப்போதும் உயராது. திராவிட மாடல் ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு கொண்ட... மேலும் பார்க்க

``சேகர்பாபு கும்பாபிஷேகம் நடத்துவதால் கடவுளை வணங்குவதையே விட்டுவிடத் தோன்றுகிறது"- தமிழருவி மணியன்

காந்திய மக்கள் இயக்கமாக இருந்து பிறகு காமராஜர் மக்கள் கட்சியாக மாறிய தமிழருவி மணியனின் கட்சி ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸுடன் இணைந்திருக்கிறது. மணியன், ஜி.கே. வாசன் இருவரும் இதை முறைப்படி அறிவி... மேலும் பார்க்க

TVK: "மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால்..." - திமுக அரசு மீது விமர்சனம்

டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட மழைப் பொழிவால் சென்னை மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர்... மேலும் பார்க்க