செய்திகள் :

UPSC/ TNPSC: கோயம்புத்தூரில் இலவசப் பயிற்சி முகாம்; ஆலோசனைகள் வழங்கும் கல்வியாளர் ஆதில் பெய்க்

post image

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து கோயம்புத்தூரில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.

'நீங்களும் ஆகலாம் IAS' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 5 ஆம் தேதி கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள SITRA ஆடிட்டோரியத்தில் நடக்க இருக்கிறது.

UPSC/TNPSC தேர்வு
UPSC/TNPSC தேர்வு

அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. இந்த நிகழ்வில் டாக்டர். சி. சைலேந்திர பாபு, (ஐபிஎஸ் (ஓய்வு) தமிழ்நாடு முன்னாள் டிஜிபி/ காவல்துறை தலைவர்) சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.

அதே சமயம் திரு. ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் - King Makers IAS அகாடமி), King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகள் குறித்த ஆலோசனைகளை வழங்க உள்ளார்கள்.

ஆதில் பெய்க்

சிவில் சர்வீசஸ் தேர்வுத் துறையில் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலான ஆழ்ந்த அனுபவமும், 8 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்பான கற்பித்தல் அனுபவமும் கொண்ட ஒரு முன்னணி கல்வியாளராக இருக்கிறார் ஆதில் பெய்க்.

தற்போது KingMakers IAS அகாடமியில் முதன்மை ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் பணியாற்றி வருகிறார். குறிப்பாக இந்தியப் பொருளாதாரம், சர்வதேச உறவுகள், மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பாடப்பிரிவுகளில் தனித்துவமான நிபுணத்துவம் பெற்றவர்.

 திரு. ஆதில் பெய்க்
திரு. ஆதில் பெய்க்

தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் ஒரு பகுதியாக, அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் யூடியூப் தளத்தின் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குப் பயிற்சியளித்திருக்கிறார்.

டிஜிட்டல் கல்வித் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், தனது 'Curious Adil' யூடியூப் சேனல் வழியாகவும், '5 Editorials of the Week' போன்ற தொடர் நிகழ்ச்சிகள் மூலமாகவும் மாணவர்களுக்குத் தெளிவான வழிகாட்டுதலை வழங்கி வருகிறார்.

கல்விப் பணி மட்டுமன்றி, பல்வேறு செய்தி ஊடக விவாதங்களிலும் பங்கேற்று வரும் இவர், மாணவர்களின் சிவில் சர்வீஸ் கனவை நனவாக்குவதில் ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இதுபோன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம் எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

UPSC/TNPSC தேர்வு
UPSC/TNPSC தேர்வு

இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் கீழ்க்கண்ட விண்ணப்பத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.

`IAS தேர்வுக்கு தயாராகுபவர்கள் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை...' - விளக்கும் ரவி Ex., IPS

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறத... மேலும் பார்க்க

போட்டி தேர்வுகளுக்கு முழு போர்ஷனையும் படிக்க வேண்டுமா?- விளக்கும் King Makers IAS சத்யஶ்ரீ பூமிநாதன்

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறத... மேலும் பார்க்க

+2 முடித்தவங்களுக்கு Golden Chance; உயர்கல்வித் தேர்வுக்கு முழுமையான வழிகாட்டல்

இந்த,நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்யவும்https://forms.gle/mkX53JaTLuszofAt8கல்வி விகடனும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமும் இணைந்து வரும் 25.04.2026 சனிக்கிழமை, '+2-வுக... மேலும் பார்க்க

முதல் இரண்டு முயற்சிகளிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? - கல்வியாளர் விளக்கம்!

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறத... மேலும் பார்க்க

UPSC / TNPSC: தூத்துக்குடியில் இலவசப் பயிற்சி முகாம் - அனுமதி இலவசம்

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறத... மேலும் பார்க்க

'இனி மூன்று இல்லை; இரண்டு தான்' - CA தேர்வில் புதிய மாற்றங்கள் என்னென்ன?

இந்தியாவிலேயே மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் 'பட்டயக் கணக்காளர்' (CA) தேர்வு. இதில் ஒரு மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) கல்வியின் ... மேலும் பார்க்க