செய்திகள் :

VCK : 'தலித் பாந்தர்' தொடங்கி தமிழக அமைச்சரவை முதல் முறை வரை.! - விசிக கடந்து வந்த பாதை!

post image

தமிழக அமைச்சரவையில் முதல் முறையாக விசிக இடம்பெற்றிருக்கிறது. தவெக அரசின் சமூக நீதி அமைச்சராக வன்னிஅரசு பொறுப்பேற்றிருக்கிறார்.

அதிகாரப் பகிர்வு குறித்து நீண்டகாலமாக பேசி வந்த விசிக-விற்கு அமைச்சரவையில் இடம் கிடைத்திருப்பது, தமிழக அரசியலில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

சமூக நீதி அமைச்சராக வன்னியரசு
சமூக நீதி அமைச்சராக வன்னியரசு

தமிழக அரசியலில் விசிக கடந்து வந்த பாதை என்ன?

* 1989-ல் 'தலித் பாந்தர்' அமைப்பின் மாநில அமைப்பாளராக இருந்த திருமாவளவன், 1991-ல் இந்த அமைப்பை 'விடுதலைச் சிறுத்தைகள் கட்சி' என்று மாற்றினார்.

* கட்சி ஆரம்பித்து எட்டு ஆண்டுகள் தேர்தல் அரசியல் களத்தில் இருந்து விலகியிருந்தது, திருமாவளவனின் விசிக

* 1999 மக்களவைத் தேர்தலில் ஜி.கே.மூப்பனார் அழைப்பை ஏற்று முதன் முதலாக தமாகா-வுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தல் மூலம் அரசியலில் அடியெடுத்து வைத்தது.

சட்டப்பேரவையில் நுழைந்த திருமா

* முதல் தேர்தலிலேயே பெரம்பலூரில் 1 லட்சம், சிதம்பரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதால் திருமாவளவன் முக்கிய அரசியல் சக்தியாக விளங்கினார்.

* முதல் முறையாக 2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கிய திருமாவளவன் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் கடலூர் மாவட்டம் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவையில் நுழைந்தார்.

* திமுக உறுப்பினராக சட்டப்பேரவையில் சுயேச்சையாக செயல்பட முடியவில்லை எனக் கூறி 2004-ல் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

திருமாவளவன்
திருமாவளவன்

திமுக உடனான கூட்டணி

* 2006 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் கூட்டணி வைத்து ் 9 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிட்ட விசிக இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது.

* பிறகு 2006 உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட சிக்கலால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி திமுகவுடன் கூட்டணி அமைத்தது.

* 2009 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வென்று முதன்முறையாக நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார்.

* தொடர்ந்து 2011 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில், 10 தொகுதியில் போட்டியிட்ட விசிக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.

மக்கள் நலக் கூட்டணி

* 2014 தேர்தலிலும் அதே கூட்டணியில் 2 இடங்களில் போட்டியிட்டு, இரண்டிலுமே தோல்வியைத் தழுவியது.

* தொடர்ந்து 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட விசிகவிற்கு ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. குறிப்பாக அந்தத் தேர்தலில் திருமா 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார்.

* பிறகு 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் திமுகவுடன் கூட்டணி வைத்து இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. எம்.பி-யாக திருமாவும், ரவிக்குமாரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

* தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்த விசிகவிற்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டது. இதில் 4 இடங்களில் மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தது.

சமூக நீதிஅமைச்சராக வன்னியரசு
சமூக நீதிஅமைச்சராக வன்னியரசு

அமைச்சரவையில் விசிக

* 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட இரண்டு இடங்களிலும் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றது.

* திமுகவுடன் பல தேர்தல்களில் கூட்டணி வைத்த விசிக சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணியைத் தொடர்ந்து 8 இடங்களில் போட்டியிட்டு இரண்டில் வெற்றி பெற்றது. இருப்பினும் பெரும்பான்மையை நிரூபிக்க தவெக கட்சி ஆதரவு கோரிய நிலையில் தனது ஆதரவை கொடுத்த விசிக இன்று அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறது.

* கரடுமுரடான அரசியல் களத்தில் கால்பதித்து பல சாவால்களை எதிர்கொண்ட விசிக முதல் முறையாக அமைச்சரவையில் இடம் பிடித்து தனது பயணத்தைத் தொடர்கிறது.!

Cockroach Janta Party: "என் குடும்பத்திற்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாது" - அபிஜித் தீப்கே ஆதங்கம்!

வேலை இல்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள் என்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கருத்து பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து `கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்ற நையாண்டித் தளத்தை இ... மேலும் பார்க்க

`பிராமணர் என்கிற காரணத்திற்காக அறநிலையத்துறை அமைச்சர் பதவியா?' - அமைச்சர் ரமேஷ் விளக்கம்

தமிழக அமைச்சரவையில் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ.ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. ரமேஷ் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பலரும் இதை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில்... மேலும் பார்க்க

கோவை: சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி: ``நெஞ்சை உலுக்கும் பேரதிர்ச்சியை.!"- செந்தில் பாலாஜி

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, நடப்புக் கல்வியாண்டில் 5ம் வகுப்புக்கு செல்ல இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்ற நிலையில், வெகுநேர... மேலும் பார்க்க

"கேரளா துபாயிலா இருக்கிறது?"கனிமவள லாரிகளை அனுமதிக்க கோரிய திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேசம்

நாகர்கோவில் எம்.எல்.ஏ. ஆஸ்டின் மற்றும் திருச்செந்தூர் எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து ஆஸ்டி... மேலும் பார்க்க

"ஏற்கனவே நிறைய அனுபவித்துவிட்டேன்" ராசியில்லை என ஒதுக்கிய 13-ம் நம்பர் காரை கேட்டு வாங்கிய அமைச்சர்!

எம் எ கேரள மாநில முதல்வராக வி.டி.சதீசன் பதவியேற்ற பின்னர் அமைச்சர்களின் இலாகாக்கள் ஒதுக்கீடு, அவர்களுக்கான பங்களா மற்ரும் கார் ஆகியவை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த சி.பி.எம் அமைச்சரவையில் வேளாண் த... மேலும் பார்க்க

’நிதித்துறை அமைச்சர் பொறுப்பு மாற்றப்பட்டது ஏன்?’ – செங்கோட்டையன் விளக்கம்

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முதல்வர் புரட்சித் தளபதியை பொறுத்தவரை தமிழகம் வாழ வேண்டும் என்பதுதான் அவரது ந... மேலும் பார்க்க