செய்திகள் :

Virat Kohli: ``விராட் கோலி மீது அவதூறு பரப்ப பேரம் பேசப்பட்டது' - உண்மையை உடைத்த ஜெர்மன் மாடல்!

post image

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மீது அவதூறு பரப்புவதற்காக, சில ஊடகங்கள் தனக்கு பணம் தர முன்வந்ததாக ஜெர்மன் மாடல் லிஸ்லாஸ் (Lyslass) தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில காலத்திற்கு முன்பு, லிஸ்லாஸின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை விராட் கோலி 'லைக்' செய்ததாக ஒரு தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் லிஸ்லாஸ் கவனம் பெற்றார். இந்த நிலையில், 'Filmymantra Media' ஊடகத்திற்கு லிஸ்லாஸ் பேட்டி அளித்திருந்தார். அதில், ``நான் சிறுவயதில் கேப் டவுன் கடற்கரை பகுதியில் வளர்ந்தவள். இந்தியாவில் எனக்கு மிகவும் பிடித்தமான, சொந்த ஊர் போன்ற உணர்வைத் தரும் இடம் பெங்களூரு தான். இந்தியாவுக்கு வந்த பிறகுதான் கிரிக்கெட் விளையாட்டைத் தெரிந்துகொண்டேன். எனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி தான்.

லிஸ்லாஸ்
லிஸ்லாஸ்

ஐபிஎல் தொடரில் கோலி விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் தீவிர ஆதரவாளர் நான். சில பத்திரிகையாளர்கள் என்னைத் தொடர்பு கொண்டு, விராட் கோலியைப் பற்றி தவறாகப் பேசுவதற்கும், அவர் செய்யாத காரியங்களைச் செய்ததாகக் கூறுவதற்கும் எனக்குப் பணம் தருவதாகக் கூறினார்கள். ஆனால் நான் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? பணத்திற்காகவோ அல்லது புகழுக்காகவோ ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை" எனத் தெரிவித்திருக்கிறார்.

விராட் கோலியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயலும் இந்த செய்தி சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.

யார் இந்த லிஸ்லாஸ்?

தென்னாப்பிரிக்காவில் பிறந்த லிஸ்லாஸ், ஒரு பன்முகத் திறமையாளர். ஜெர்மன் மற்றும் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த இவர், டச்சு, பிரஞ்சு, ரஷ்யன் என பல மொழிகளில் சரளமாகப் பேசக்கூடியவர். உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். நீச்சல் வீரரும் (Lifeguard) கூட. பாடல் எழுதுதல் மற்றும் உணவு சார்ந்த பயண வீடியோக்கள் மூலம் இவர் பிரபலமானவர். தற்போது விராட் கோலி குறித்துப் பேசி சமூக ஊடகங்களில் மீண்டும் வெளிச்சம் பெற்றிருக்கிறார்.

``அங்க என்ன பண்ற.. சீக்கிரம் சேப்பாக்கத்துக்கு ஓடி வா!" - அஸ்வின் போட்ட போஸ்ட்! - வைரலாகும் போட்டோ!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பதவியேற்பு விழா ஒருபுறம் கோலாகலமாக நடக்க, மறுபுறம் சமூக வலைதளங்களில் சுவாரசியமான ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. முன்னாள் சிஎஸ்கே ஜாம்பவான் ரவிச்சந்திரன் அஸ்வின் பகி... மேலும் பார்க்க

மத்​தியப் பிரதேச படகு விபத்து: மகனை அணைத்தபடி உயிரிழந்த தாய்; வைரல் படத்தின் உண்மை பின்னணி என்ன?

மத்​தியப் பிரதேச மாநிலம் ஜபல்​பூர் மாவட்​டத்​தி​லுள்ள பார்கி அணை​யில் 3 நாட்​களுக்கு முன்பு படகில் சுற்​றுலா சென்றபோது திடீரென்று படகு நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து மக்களிடையே பெரும் அ... மேலும் பார்க்க

``என் கணவர் உனக்கு; உன் கணவர் எனக்கு...!" - நீதிபதிகளை தலைச்சுற்ற வைத்த சகோதரிகள் - என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம், ததியா பகுதியைச் சேர்ந்த கிரிஜா சங்கர், `மாயாராம் என்பவர் தனது மனைவியையும் மகளையும் கடத்திச் சென்று சட்டவிரோதமாகப் பிணைக் கைதிகளாக வைத்துள்ளார்' என குவாலியார் உயர் நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

முதலிரவில் முகத்திரையை எடுக்க ரூ.90 லட்சம்: பெண் வீட்டார் மீது `கொலை முயற்சி' வழக்கு - என்ன நடந்தது?

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்தவர் முஸ்கான் சிங். இவருக்கும் கல்பனா என்றப் பெண்ணுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. முதலிரவு அன்று கல்பனா தன் முகத் திரையை அகற்ற ரூ.90 லட்சம் கொ... மேலும் பார்க்க

நேரலையில் சிக்கிய 'செல்போன்' சர்ச்சை: ராஜஸ்தான் ராயல்ஸ் மேலாளர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை?

ஐபிஎல் 2026 தொடரில் தனது அதிரடி ஆட்டத்தால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. அந்த அணியின் மேலாளர் ரோமி பிந்தர், போட்டியின்போ... மேலும் பார்க்க