செய்திகள் :

40 வயதைக் கடந்துவிட்டீர்களா? 'ஸ்ட்ரெஸ்' இல்லாத முதலீட்டைத் தேடுபவர்களுக்கு - Multi Asset Fund!

post image

காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை ஓயாத ஓட்டம். லேப்டாப், டார்கெட், மீட்டிங், இஎம்ஐ, அதோடு குழந்தைகளின் கல்லூரிச் செலவுகள் என ஒரு பரபரப்பான வாழ்க்கை. 40 வயதைத் தொடும்போதுதான் பொறுப்புகளின் முழுப் பளுவும் நமது தோள்களை அழுத்தத் தொடங்கும்.

சம்பாத்தியம் என்னவோ நன்றாகவே ஏறியிருக்கும். ஆனால், அந்தப் பணத்தை நிர்வகிக்கவோ, சந்தை நிலவரங்களை ஆராயவோ உங்களுக்குச் சுத்தமாக நேரம் இருக்காது.

கொஞ்சம் அமைதியாக யோசித்துப் பாருங்கள். உங்களின் வளமான எதிர்காலத்திற்காக நீங்கள் தினமும் 10 முதல் 12 மணி நேரம் உழைக்கிறீர்கள். ஆனால், அந்த ரத்தமும் வியர்வையுமான பணம் உங்கள் சேமிப்பு வங்கி லாக்கரில் தூங்கிக் கொண்டிருக்கிறது.

பத்திரமாக இருக்கட்டும் என முழுப் பணத்தையும் நிரந்தர வைப்பு நிதியில் (FD) போட்டால், பணவீக்கம் (Inflation) உங்கள் பணத்தின் வாங்கும் திறனை குறைத்துவிடும். சரி, பணத்தை வளர்க்கப் பங்குச்சந்தையில் (Equity) முதலீடு செய்யலாமா என நினைத்தால் மனது கேட்காது.

Fear in Investing

20 வயதில் இருந்த ரிஸ்க் எடுக்கும் தைரியம், 40 வயதில் நிச்சயம் இருக்காது. சந்தை லேசாகச் சரிந்தால் கூட, "இவ்வளவு கஷ்டப்பட்டுச் சேர்த்த பணம் கரைகிறதே" என்ற பயம் இரவின் தூக்கத்தைக் கெடுக்கும். பி.பி எகிறும்.

ஒரு பிஸியான கார்ப்பரேட் ஊழியராகவோ அல்லது தொழில்முனைவோராகவோ இருக்கும் உங்களுக்கு, இப்போது தேவை மார்க்கெட்டை கணிக்கும் நிபுணத்துவம் அல்ல; நிம்மதியான தூக்கம். அதே சமயம், பணவீக்கத்தைத் தாண்டிய சீரான வளர்ச்சியும் உங்கள் பணத்திற்குத் தேவை. இந்த இரண்டுக்கும் நடுவே உள்ள அந்தப் பாலம்தான் 'மல்டி அசெட் அலோகேஷன் ஃபண்டுகள்' (Multi-Asset Allocation Funds).

Multi Asset Allocation Funds

ஏன் 40 வயதினருக்கு இது மிகச் சிறந்த தேர்வு?

இந்த ஃபண்டுகளின் அடிப்படை லாஜிக் உங்களின் மனநிலையைச் சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுவதுதான். அபரிமிதமான லாபத்தைத் தரும் பங்குச்சந்தை, பாதுகாப்பைத் தரும் கடன் பத்திரங்கள் (Debt), பணவீக்கத்தைத் தாங்கும் தங்கம் ஆகிய மூன்றிலும் உங்கள் பணம் பிரித்து முதலீடு செய்யப்படுகிறது.

சந்தை உச்சத்தில் இருக்கும்போது லாபத்தை எடுப்பது; சந்தை சரியும்போது பாதுகாப்பான கடன் பத்திரங்கள் மற்றும் தங்கத்தின் மூலம் போர்ட்ஃபோலியோவின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவது என ஃபண்ட் மேனேஜர்கள் உங்களுக்காக வேலை செய்வார்கள். நீங்கள் உங்கள் தொழிலிலும் குடும்பத்திலும் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது.

இது எப்படிச் செயல்படுகிறது என்பதை இந்த எளிய ஒப்பீடு மூலம் பார்ப்போம். நீங்கள் 10 லட்சம் முதலீடு செய்துள்ளீர்கள். சந்தை பெரிய வீழ்ச்சியைச் சந்திக்கிறது என வைத்துக்கொள்வோம்:

Multi Asset Fund Comparison with FD and Equity

உணர்ச்சிகளை நம்பி எடுக்கப்படும் எந்த நிதி முடிவும் வெற்றியைத் தருவதில்லை. முதலீடு என்பது உங்கள் குடும்பத்திற்கான ஒரு பாதுகாப்பு அரண். வீழ்ச்சியைக் கண்டு பயப்படாமல், உங்களின் பிஸியான நேரத்தை வீணாக்காமல், ரிஸ்க்கை நிர்வகித்து நீண்டகாலச் செல்வத்தை எப்படி உருவாக்குவது என்பதை நீங்களும் கற்றுக்கொள்ளலாம்.

Labham Workshop on Multi Asset Allocation Funds May 17 2026

இதற்கான தெளிவான வழிகாட்டுதலை வழங்கவே வருகிறது லாபம் வழங்கும் ஆன்லைன் ஒர்க் ஷாப்!

தலைப்பு: செல்வத்தை உருவாக்கும் மாயாஜாலம் - Multi-Asset Allocation Funds
பேச்சாளர்: கிருஷ்ண தாசன், இயக்குநர், Dhanavruksha Financial Services
நாள்: மே 17, 2026 (ஞாயிறு)
நேரம்: காலை 11:00 மணி (IST)

உங்களின் நிதி சுதந்திரத்திற்கான பயணத்தை இன்றே தொடங்குங்கள். உங்கள் பணம் உங்களுக்காகப் பாதுகாப்பாக உழைக்க, இப்போதே முன்பதிவு செய்யுங்கள்!

நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்யவும்:
https://labham.money/events/webinar-may17-2026?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_may17_2026

₹5 கோடி ஓய்வுக்கால நிதி: NRI-களுக்கான ரகசிய முதலீட்டு வரைபடம்!

வெளிநாட்டில் வேலை பார்க்கும் நம்மவர்களில் பலரிடம் ஒரு விசித்திரமான முரண்பாடு உண்டு. சம்பாத்தியம் என்னவோ பல லட்சங்களைத் தாண்டும்; ஆனால், முதலீடு என்று வரும்போது மட்டும் அதீத பாதுகாப்பைத் தேடிப் பழைய கா... மேலும் பார்க்க

Women Investors: சம்பாதித்தும் உங்களுக்கெனப் பணமில்லையா? உழைக்கும் பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு!

பணம் சம்பாதிப்பதற்கும், செல்வத்தை உருவாக்குவதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. வேலைக்குச் செல்லும் பெரும்பாலான பெண்களுக்கு இது தெரிவதில்லை.மாதச் சம்பளம் கையில் கிடைக்கும்போது ஒரு தற்காலிக சுதந்... மேலும் பார்க்க

Labham: என் வயது 30... கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

கடன் பத்திரங்களில் (Bonds) முதலீடு பற்றி பலரும் விசாரித்து வருகிறார். கடன் பத்திரங்களில் முதலீடு செய்தால் எந்த ரிஸ்க்கும் இல்லாமல் லாபத்தை அள்ளிவிடலாம் என சில யூடிபர்கள் வீடியோ வெளியிட, அதைப் பார்த்த ... மேலும் பார்க்க

NRI Corner: பயந்து ஒதுங்கி நின்றால், எதிர்காலத் தேவைகளை எப்படி நிறைவேற்றிக் கொள்ள முடியும்?

'பிசினஸ் ஆரம்பிக்கலாமா? அய்யய்யோ, அது பெரிய ரிஸ்க் ஆச்சே!' எனப் பலரும் எளிதில் ஒதுங்கிவிடுவார்கள். வேலை செய்வதில் மிகத் திறமைசாலிகளான தமிழர்கள் உலகம் முழுக்க உள்ள மிகப் பெரிய நிறுவனங்களில் தலைமைப் பதவ... மேலும் பார்க்க

'மொட்டை மாடியில் இலவச மின்சாரம்' - ரூ.78,000 மானியம், 70 லட்சம் பேருக்கு வாய்ப்பு; சூப்பர் திட்டம்!

நம்முடைய மின்சாரப் பயன்பாடு வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்பதும், மின் கட்டணங்கள் உயரும் என்பதும் கூடுதல் கவலையைக் குடும்பங்களில் ஏற்படுத்துகிறது. இதிலிருந்து தப்பிக்க நாம் மின்சார நுகர்வோராக... மேலும் பார்க்க

உங்கள் குழந்தையை 21 வயதில் கோடீஸ்வரர் ஆக்குவது எப்படி? பெற்றோர்க்கான சூப்பர் பிளான்!

குழந்தை பிறக்கும் நாள், வீட்டில் சந்தோஷம் மட்டும் வராது... அமைதியாக ஒரு பெரிய பொறுப்பும் உள்ளே நுழைந்துவிடுகிறது!முதலில் பால் பவுடர், அடுத்து பள்ளி சேர்க்கை, பிறகு டியூஷன், கல்லூரி, மேற்படிப்பு, ஒரு ந... மேலும் பார்க்க