செய்திகள் :

Vishal Garg அன்று 3 நிமிடத்தில் 900 பேரை பணியிலிருந்து நீக்கியவர்; இன்று அவரையே வெளியேற்றிய நிறுவனம்

post image

டிசம்பர் 2021-ல், 3 நிமிட ஜூம் (Zoom) மீட்டீங்கில் 900 ஊழியர்களை ஒரே நேரத்தில் பணிநீக்கம் செய்து உலகளவில் பெரும் சர்ச்சைக்கு ஆளான இந்திய-அமெரிக்க தொழிலதிபர் விஷால் கார்க், தற்போது Better Home & Finance நிறுவனத்தின் CEO பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பிறந்து நியூயார்க்கில் வளர்ந்த விஷால் கார்க், ஸ்டெர்ன் பிசினஸ் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு 'மைரிச்அங்கிள்' நிறுவனத்தைத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, 2014-ல் 'பெட்டர்' நிறுவனத்தைத் தொடங்கினார்.

விஷால் கார்க்
விஷால் கார்க்

பாரம்பரிய அடமானக் கடன் முறைக்கு மாற்றாகத் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தொற்றுநோய்க் காலத்தில் ரீஃபைனான்சிங் ஏற்றத்தின் போது 8 பில்லியன் டாலர் மதிப்பைப் பெற்றிருந்தது. ஆனால், 2021-ல் 900 ஊழியர்களை இரக்கமின்றி நீக்கிய சம்பவமும், அதைத் தொடர்ந்து எழுந்த கொந்தளிப்பும் நிறுவனத்தின் நற்பெயரைக் கடுமையாகப் பாதித்தன.

2022-க்குப் பிறகு நிறுவனம் 1.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்பைச் சந்தித்திருக்கிறது. விஷால் கார்க் தலைமையின் கீழ் நிறுவனத்தின் பங்குகள் 90%-க்கும் மேல் சரிந்திருக்கிறது.

மேலும், விஷால் கார்க்கின் முடிவெடுக்கும் திறன், குணம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவற்றில் ஏற்பட்ட கவலைகள் காரணமாக மற்ற இயக்குநர்கள் அனைவரும் அவரை நீக்க ஒருமனதாக வாக்களித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக பேசிய விஷால் கார்க், ``2021-ல் 1.5 பில்லியன் டாலராக இருந்த நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை 2023-ல் 70 மில்லியன் டாலராக சரிந்து, தற்போதைய சந்தை மதிப்பு தோராயமாக 300 மில்லியன் டாலராக உள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் ஹோம்-ஈக்விட்டி கடன்கள் மூலம் 2026-ல் வருவாய் 200 மில்லியனை எட்டும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

விஷால் கார்க்
விஷால் கார்க்

லாபத்தை நெருங்கும் "5-யார்டு கோட்டில்" நிறுவனம் இருக்கும் தருணத்தில் நான் நீக்கப்பட்டுள்ளேன். எனது பதவியை மீண்டும் பெற வழக்கறிஞர்களை அமர்த்தியிருக்கிறேன். நிறுவனம் மீண்டும் லாபப் பாதைக்கு வரும் வரை ஆண்டுக்கு 1 டாலர் சம்பளத்தில் பணியாற்றத் தயார். சிறப்பு வாக்குரிமை கொண்ட பங்குதாரர்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது. நிறுவனத்தின் எதிர்காலம் இன்னமும் பிரகாசமாகவே உள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"மோனலிசாவுடன் ஒப்பிடாதீர்கள்; நான் சிங்கப்பெண்" - கன்வார் யாத்திரையில் வைரலாகி வரும் மானசி

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்த மகா கும்பமேளாவில் பாசிமணி, உத்திராட்ச மாலைகளை விற்பனை செய்து வந்த மோனலிசா என்ற பெண் சமூக வலைத்தளங்கள் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். அவரது வீடியோக்கள் மிகவும்... மேலும் பார்க்க

வாடகை வீடு பார்க்கச் சென்ற தம்பதி: பிட்புல் நாய் தாக்கியதில் தம்பதிக்கு தீவிர சிகிச்சை!

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள குமான் நகர் பகுதியில் பிட்புல் (Pitbull) ரக நாய் தாக்கியதில் தம்பதியர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சிய... மேலும் பார்க்க

``மாணவர்களுக்காக குரல் கொடுத்தேன்; இப்போது துன்புறுத்தப்படுகிறேன்" - வைரல் பெண் ரியா அஹிர்

நீட் தேர்வு உள்ளிட்ட அரசுத் தேர்வுகள் குளறுபடிகளைக் கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர்கள் சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மும்பையில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, காவல்துறையின் வாகனத்தை வழி... மேலும் பார்க்க

`18 வயதில் கல்லூரி பேராசிரியர்'- 300 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளைஞர்! - யார் இவர்?

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது பொறியியல் பட்டதாரியான நாதன் தாமஸ், உலகின் மிக இளம் வயது ஆண் பேராசிரியர் என்ற பெருமையைப் பெற்று கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் ... மேலும் பார்க்க

``ராகுலை கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்க வையுங்க" - இர்பானிடம் கலகலப்பாகப் பேசிய பிரியாங்கா காந்தி

டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, ஊடகங்களிடம் போராட்டத்தில் கலந்துகொண்ட பலரும் உரையாற்றினர். அதில் ஒருவர்தான் இர்பான். பள்ளி சென்று கல்வியறிவை பெறாத இவர், தன் அனுபவம், ஆர்... மேலும் பார்க்க