ஒண்டிமுனியும் நல்லபாடனும் விமர்சனம்: சாதிய பாகுபாட்டினைப் பேசும் நல்லதொரு எழுத்த...
What To Watch: `தேரே இஷ்க் மெயின்', 'ரிவால்வர் ரீட்டா', 'அஞ்சான்' -இந்த வார ரிலீஸ்கள் இவைதான்!
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள் மற்றும் சீரிஸ்.
தேரே இஷ்க் மெயின் (இந்தி):
தனுஷ் - ஆனந்த் எல் ராய் - ரஹ்மான் கூட்டணியில் வெளிவரும் மூன்றாவது திரைப்படமான இதில் நடிகை க்ரித்தி சனான் நாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படம் இன்று (நவம்பர் 28) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
அஞ்சான் (ரீ-ரிலீஸ்):
நடிகர் சூர்யா நடிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் 2014-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘அஞ்சான்’. இத்திரைப்படத்தை மீண்டும் எடிட் செய்து இன்று (நவம்பர் 28) திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்துள்ளனர்.

ரிவால்வர் ரீட்டா:
டார்க் காமெடி கதைப் பின்னணி கொண்ட திரைப்படம் ‘ரிவால்வர் ரீட்டா’. நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (நவம்பர் 28) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
BP 180:
அறிமுக இயக்குநர் ஜே.பி இயக்கத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘BP 180’. இத்திரைப்படம் இன்று நவம்பர் 28 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ரஜினி கேங்:
நடிகர்கள் ரஜினி கிஷன், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர்-காமெடி திரைப்படமான இது நேற்று (நவம்பர் 27) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
IPL: Indian Penal Law:
யூடியூப் பிரபலம் TTF வாசன் மற்றும் நடிகர்கள் கிஷோர், அபிராமி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (நவம்பர் 28) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வெள்ளைக் குதிரை:
கிராமப் பின்னணி கொண்டுள்ள இத்திரைப்படத்தில் நடிகர்கள் ஹரிஷ் ஓரி அர்த்தநாரீஸ்வரன், அபிராமி போஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று (நவம்பர் 28) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஒண்டிமுனியும் நல்லபாடனும்:
நடிகர்கள் பரோட்டா முருகேசன், விஜயன் தியா, வித்யா சக்திவேல் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (நவம்பர் 28) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Andhra King (தெலுங்கு):
நடிகர்கள் ராம் போதினேனி, உபேந்திரா, பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (நவம்பர் 28) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Gustaakh Ishq (இந்தி):
நடிகர்கள் நஸ்ருதீன் ஷா, விஜய் வர்மா, பாத்திமா சனா ஷேக் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள ரொமான்டிக் திரைப்படமான இது இன்று நவம்பர் 28 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Zootopia 2 (ஆங்கிலம்):
ஏற்கனவே வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அனிமேஷன் திரைப்படமான ஜூட்டோபியாவின் இரண்டாம் பாகமான இத்திரைப்படம் இன்று நவம்பர் 28 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Spider-Man: Home Trilogy (ஆங்கிலம் - ரீ ரிலீஸ்):
டாம் ஹாலண்ட் நடிப்பில் ஜான் வாட்ஸ் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஸ்பைடர்-மேன் ஹோம் ட்ரைலாஜி இன்று நவம்பர் 28 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
ஓடிடி தொடர்கள்:
Stranger Things Season 5: Volume 1 (ஆங்கிலம்) - Netflix - November 27:
ஏற்கெனவே நான்கு சீசன்கள் வெளிவந்து உலகெங்கும் பெரும் ரசிகர் பலம் கொண்ட தொடர் ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ். இறுதி சீசனின் முதல் 4 எபிசோடுகள் தற்போது நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளன. தமிழ் உட்பட பல மொழிகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓடிடி திரைப்படங்கள்:
ஆர்யன் - Netflix - November 28
ஆண்பாவம் பொல்லாதது - JioCinema - November 28
ரேகை - Zee5 - November 28
Mass Jathara (தெலுங்கு) - Netflix - November 28
Sasivadane (தெலுங்கு) - Sun NXT - November 28
The Pet Detective (மலையாளம்) - Zee5 - November 28
Sunny Sanskari Ki Tulsi Kumari (இந்தி) - Netflix - November 28
Raktabeej 2 (பெங்காலி) - Zee5 - November 28
Born Hungry - Documentary film (ஆங்கிலம்) - JioCinema - November 28
Primitive War (ஆங்கிலம்) - Lionsgate Play - November 28

















