செய்திகள் :

What To Watch: 'பிளாஸ்ட்', 'கர', 'லீடர்' - இந்த வாரம் வெளியாகியிருக்கும் படங்கள் என்னென்ன?

post image
இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் வந்திருக்கும் படங்கள் என்னென்ன?பிளாஸ்ட் - தமிழ்

சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன், அபிராமி, ஜான் கொக்கன், விவேக் பிரசன்னா, அர்ஜுன் சிதம்பரம், பவன் கிருஷ்ணா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள 'பிளாஸ்ட்' திரைப்படம் நேற்று (மே 28) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

ஈகோ ராமன் - தமிழ்

கணேசன் நாச்சிமுத்து இயக்கி சிபி சந்திரன், ரோபோ சங்கர், கீர்த்தனா ஸ்ரீகுமார், சேரன் ராஜ், கவிதா ரமேஷ் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் மே 29 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Blast Movie
Blast Movie

காட்டாளன் - மலையாளம்

பால் ஜார்ஜ் இயக்கத்தில் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன், சுனில், ஜெகதீஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இத்திரைப்படம் மே 28 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

தி கிரேட் கிராண்ட் சூப்பர் ஹீரோ - இந்தி

மனிஷ் சைனி எழுதித் தயாரித்து இயக்கியுள்ள 'தி கிரேட் கிராண்ட் சூப்பர் ஹீரோ' படத்தில் ஜாக்கி ஷெராஃப், பிரதிக் பாபர், பாக்யஸ்ரீ, சரத் சக்சேனா, சஹர்ஷ் குமார் சுக்லா, சிவன்ஷ் சோர்ஜே ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் மே 29 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

Obsession Movie
Obsession Movie

அப்செஷன் - ஆங்கிலம்

கரி பார்கர் எழுதி இயக்கியுள்ள அப்செஷன் திரைப்படத்தில் மைக்கேல் ஜான்ஸ்டன், இண்டே நவரெட், கூப்பர் டாம்லின்சன், மேகன் லாலெஸ், ஆண்டி ரிக்டர் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் மே 29 திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்த வாரம் ஓடிடி ரிலீஸ்:

  • கர (Kara) - Netflix

  • லீடர் (Leader) - Prime

  • ஜெட்லீ (Jetlee) - Hotstar

  • ரூம்மேட்ஸ் (Roommates) - Z5 Series

  • ஃபேசஸ் (Faces) - Sun Nxt

  • மெர்மெய்ட் (Mermaid) - Prime

  • மார்ஷ்மல்லோ (Marshmallow) - Prime

  • அன்ப்ரோக்கன் (Unbroken) - Z5 Docu

Kara Movie
Kara Movie
  • ஷெரிஃப் லாப்ரடோர் (Sheriff Labrador) - Netflix

  • ஸ்பைடர் நொயார் (Spider-Noir) - Prime Series

  • அ ஃபாகி டேல் (A Foggy Tale) - Netflix

  • டெட் மேன்ஸ் வயர் (Dead Man's Wire) - Netflix

  • அவோனான் (Awonon) - Prime

  • தி போட்டனிஸ்ட் (The Botanist) - Prime

  • ரூம் டூ மூவ் (Room To Move) - Netflix Docu

  • டீமன் ஹண்டர்ஸ் (Demon Hunters) - Prime

Jayaram: "அப்போ நான் அவர்கிட்ட போய் மன்னிப்புக் கேட்டேன்'' - தன் காதல் கதையைப் பகிர்ந்த ஜெயராம்

நடிகர் ஜெயராம் நடிப்பில் கடந்த வாரம் 'பரிமளா & கோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அப்படத்திற்காக நம் சினிமா விகடன் சேனல் நடத்திய பிரத்யேக 'விகடன் பிரஸ் மீட்' நிகழ்வில் ஜெயராம் கலந்துகொண்டு ... மேலும் பார்க்க

Nooru Saami: "பசியோட இருக்காத, பண உதவி பண்றேன்னு..." - ஏ.ஆர். முருகதாஸ்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Nooru Saami: "'உன்னை பார்க்கும்போது ரவுடி மாதிரி தெரிஞ்ச'னு சசி சார் சொன்னார்!" - பா. ரஞ்சித்

இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நி... மேலும் பார்க்க

Double Occupancy Review: 6-6 ஆண்; 6-6 பெண் சுவாரஸ்யமான ஒன்லைன் - படமாக பாஸாகிறதா?

பல வருடங்களாகக் குழந்தையில்லாமல் தவிக்கிறது ஒரு தம்பதி (போஸ் வெங்கட் - வினோதினி). கடவுளை நம்பாத போஸ் வெங்கட், கைகூப்பி கடவுளை வணங்கி வேண்டுகிறார். கடவுளின் அருளால் ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், பிறந்... மேலும் பார்க்க

Habeebi Review: தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் பின்னணியில் ஓர் அழகான காதல் கதை; ஆனால், படமாகக் கவர்கிறதா?

தென் தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக நெசவுத் தொழிலை யூசுஃப் கானின் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கவனித்து வருகிறார்கள். கைத்தறித் தொழில் நலிவடைந்து வருவதால், யூசுஃப் கானின் தம்பி வளைகுடா நாட்டிற்குப் பணிக்க... மேலும் பார்க்க

Bharathiraja: "துயரத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி" - பாரதிராஜா மனைவி சந்திர லீலா

இயக்குநர் இமயம் பாரதிராஜா நேற்று முன்தினம் (ஜீன்.10) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் நேற்று சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் உள்ள காட் ரோட்டில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலைய... மேலும் பார்க்க