செய்திகள் :

Youth: "நான் இந்தக் கதையை சொல்லும்போது, அவரிடம் 50 ரூபாய்கூட இல்லை; ஆனால்.!" - கென் கருணாஸ்

post image

கென் கருணாஸ் இயக்கி நடித்திருக்கும் 'யூத்' திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

'சிறை' அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், சின்ன தமிழா எனப் பலரும் நடித்திருக்கும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வசூலையும் அள்ளி வருகிறது.

Ken Karunas - Youth
Ken Karunas - Youth

கடந்த வாரம் இத்திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியானது. அதன் ப்ரோமோஷனுக்காக ஹைதராபாத்தில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் அவர் மீது வைத்த நம்பிக்கை பற்றி பேசியிருக்கிறார் கென்.

கென் கருணாஸ் பேசுகையில், ''நான் 'யூத்' கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். அனைவருக்கும் கதை பிடித்திருந்தது.

ஆனால், படத்தின் பட்ஜெட், நான் புதுமுக நடிகர் என்பது போன்ற காரணங்களால், அது தடைப்பட்டது. நான் அவர்களை தவறாக சொல்லமாட்டேன். நான் எப்படி இந்தப் படத்தை எடுப்பேன் என அவர்கள் நம்புவதற்கு கடினமாக இருந்திருக்கலாம்.

பிறகு, என்னுடைய நண்பரும் இயக்குநருமான அம்மாமுத்து சூர்யாவிடம் 'எப்படியாவது எனது நண்பர்களுடன் சேர்ந்து இந்தப் படத்தை எடுத்துவிடப் போகிறேன்' என்றேன்.

அப்போதுதான் அவர் இப்போது இந்தப் படத்தை தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் கருப்பையாவை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

Ken Karunas
Ken Karunas

அவருடனான கதை நரேஷன் முடிந்தப் பிறகு ஒரு டீ கடைக்குச் சென்றோம். அங்கு டீ குடித்துவிட்டு ஜிபே மூலமாக 50 ரூபாய் பணம் செலுத்தக்கூட அவரிடம் பணம் இல்லை.

அவருடைய நண்பருக்கு ஃபோன் செய்து பணம் வாங்கி, டீ-க்கு பணம் செலுத்தினார். அப்படியான நேரத்தில் இந்தப் படத்திற்கு எவ்வளவு பட்ஜெட் தேவைப்படும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால், அவர் என்னை முழுமையாக நம்பினார். நான் அவரை முழுமையாக நம்பினேன். அவரிடம் நான் 'என்னை ஒரு ஹீரோவாக நிறுத்துவதற்கு இந்தப் படத்தை நான் செய்கிறேன்.

உங்களுடைய பணத்திற்கு நான் பதிலளிப்பேன். உங்களுடைய பணத்தை வீணாக்கமாட்டேன்' என்றேன். என்னை அவர் என் மீது நம்பிக்கை வைத்தார். இன்று நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்." எனக் கூறினார்.

ஜனநாயகன்: 'விஜய் சாரை கடைசி முறையாக திருவிழா போல் கொண்டாட வேண்டாமா?'- பூஜா ஹெக்டே ஆதங்கம்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி இருந்தது. ஆனால், சென்சா... மேலும் பார்க்க

Jana Nayagan: "இது மன்னிக்க முடியாதது" - 'ஜனநாயகன்' படக்காட்சிகள் கசிந்ததற்கு சூர்யா கண்டனம்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதமே வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது. ஜனநாயகன் திரைப்படம்நேற்று இரவு, 'ஜனநாய... மேலும் பார்க்க

சல்மான் கான், யாஷ், மோகன்லால், மம்மூட்டி, நிவின்பாலி.! மாஸ் ஹீரோக்களுடன் அசத்தும் நயன்தாரா லைன்அப்

இந்திய சினிமாவில் 23வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. கடந்த 2003ல் மலையாளத்தில் சத்யன் அந்திக்காடின் 'மனசினக்கரே' மூலம் அறிமுகமானவர் 23 ஆண்டுகளுக்கு பிறகும் ஹீரோயினாக பட்டொளிவீசி பறக்கிற... மேலும் பார்க்க

What To Watch: 'LIK', 'தாய் கிழவி', 'TN 2026' - இந்த வார ரிலீஸ்கள் இவைதான்

LIK: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி:நயன்தாரா மற்றும் '7 ஸ்கிரீன் ஸ்டுடியோ' லலித் குமார் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியிருக்கும் படம் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி'. பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, கௌர... மேலும் பார்க்க

LIK Review: காதல் தரும் சயின்ஸ் பிக்ஷன் நாக் அவுட் பன்ச்! - லைக், ஷேர், சப்ஸ்கிரைப் செய்யலாமா?

2040-ல் பசுமை உலகத்தில் வைப் வாசேவும் (பிரதீப் ரங்கநாதன்) அவருடைய தந்தை அன்புகடலும் (சீமான்) வசித்து வருகிறார்கள். அலைப்பேசிக்கு அடிமைப்பட்டிருக்கும் சமூகத்தை அதிலிருந்து மீட்பதே இந்த பசுமை உலகத்தின் ... மேலும் பார்க்க