செய்திகள் :

Zoho: ``நான் மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறேனா?'' - கொந்தளிக்கும் ஸ்ரீதர் வேம்பு

post image

நீட் வினாத்தாள் கசிவு, அரசுத் தேர்வுகள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையிலான இளைஞர் போராட்டம் நடந்தது.

போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். மேலும், பிரதமரின் ஆலோசனைப்படி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சரான பிரஹலாத் ஜோஷிக்கு, அவர் ஏற்கனவே வகித்து வரும் பொறுப்புகளுடன் கூடுதலாக கல்வி அமைச்சகத்தின் பொறுப்பும் வழங்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்

அதைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தது குறித்து வருத்தம் தெரிவித்து பதிவிட்டிருந்த ஜோஹோ (Zoho) நிறுவனத்தின் இணை நிறுவனரும், முன்னாள் சி.இ.ஓ-வுமான ஸ்ரீதர் வேம்பு, ``ஸ்ரீ தர்மேந்திர பிரதான் நான் அறிந்த மிகச்சிறந்த மக்கள் பணியாளர்களில் ஒருவர். குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.

கிராமப்புற இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவது குறித்து அவருடன் நான் பலமுறை விவாதித்துள்ளேன். அவர் சுயநலமின்றி நாட்டின் நலனையே முதன்மையாகக் கருதியவர். அவர் ராஜினாமா செய்ததைக் கண்டு நான் மனவருத்தம் அடைகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

மத்திய அரசுக்குச் சாதகமான ஸ்ரீதர் வேம்புவின் இந்தப் பதிவைத் தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஜோஹோ நிறுவனத்தின் தொழில் மற்றும் வணிக நலன்களைப் பாதுகாப்பதற்காகவே, அவர் மத்திய அரசுக்கும் அதன் அமைச்சருக்கும் ஆதரவாகப் பேசுகிறார் என்றும், அரசுக்குச் சாதகமாக நடப்பதாகவும் பல பயனர்கள் விமர்சித்திருந்தனர்.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ஸ்ரீதர் வேம்பு ஒரு புதிய விளக்கப் பதிவை வெளியிட்டார். அதில், ``எங்கள் நிறுவனத்தின் மொத்த வருவாயில் சுமார் 90 சதவீதம் இந்தியாவிற்கு வெளியிலிருந்தே வருகிறது.

ஸ்ரீதர் வேம்பு
ஸ்ரீதர் வேம்பு

அது கடுமையான உலகளாவியப் போட்டியில் ஈட்டப்பட்டது. அரசின் ஒப்பந்தங்கள் மூலம் எங்களுக்கு வெறும் 2 சதவீத வருவாய் மட்டுமே கிடைக்கிறது. அரசுடன் பணியாற்றும்போது கூட, வரி செலுத்துவோரின் பணத்தைச் சேமிப்பதையே கடமையாகக் கொண்டுள்ளோம்.

மேலும், எங்கள் பகுதியில் அதிக வரி செலுத்தும் நிறுவனங்களில் நாங்களும் ஒன்று. இடதுசாரி அரசு ஆட்சியில் இருந்தபோது கேரள ஸ்டார்ட்அப் மிஷனுக்கு ஆலோசனை வழங்கி, அங்குள்ள பல ஆராய்ச்சி சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்தேன்.

அதேபோல், தமிழ்நாட்டில் நமது முதலமைச்சர் ஒரு சிறப்பான புதிய தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே அவரது முயற்சியை ஆதரிக்கிறேனே தவிர, அரசியல் சித்தாந்தத்திற்காக அல்ல. நான் நமது நாட்டை நேசிக்கிறேன், என் மனதில் தோன்றுவதைப் பேசுகிறேன்.

தாக்குதல்களுக்கோ அல்லது மிரட்டல்களுக்கோ நான் ஒருபோதும் தலைவணங்க மாட்டேன். இதுபோன்ற தாக்குதல்கள் எங்களை மேலும் வலுப்படுத்தி, பெரிய வெற்றிகளை அடையவே உதவும்" எனக் குறிப்பிட்டிருக்கிரார்.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க