செய்திகள் :

அனிருத்தா - சம்யுக்தா திருமணம்: முன்னாள் கிரிக்கெட்டரை கரம்பிடித்த நடிகை!

post image

முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஶ்ரீகாந்த் மற்றும் நடிகை சம்யுக்தா சண்முகநாதன் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது.

விளம்பர மாடலாக தனது பயணத்தைத் தொடங்கி நடிகையாக பணியாற்றிவருபவர் சம்யுக்தா. 2007ஆம் ஆண்டில் மிஸ் சென்னை பட்டத்தை வென்ற இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகமெங்கும் பிரபலமானார். காபி வித் லவ், துக்ளக் தர்பார், மைடியர் பூதம், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அனிருத்தா மற்றும் சம்யுக்தா
அனிருத்தா மற்றும் சம்யுக்தா

அனிருத்தாவும் சம்யுக்தாவும் கடந்த சில காலமாகவே பழகி வந்தநிலையில் இவர்களது உறவு குறித்து ஏற்கெனவே கிசுகிசுக்கப்பட்டிருந்தது.

முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தின் மகன் அனிருத்தா ஶ்ரீகாந்த். இவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக விளையாடியிருக்கிறார்.

தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைகாட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் நிபுணராகவும் பணியாற்றிவருகிறார். அனிருத்தா மற்றும் சம்யுக்தா தங்கள் சமூக வலைத்தளங்களில் திருமணம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.

அனிருத்தா மற்றும் சம்யுக்தா

சம்யுக்தாவுக்கு முந்தைய திருமணத்தில் ஒரு மகன் இருக்கிறார் என்பதும், அனிருத்தா ஏற்கெனவே விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணத்துக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

.

Vedan: ICU-வில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ராப் பாடகர் வேடன்; துபாயில் தீவிர சிகிச்சை!

மலையாள ஹிப்-ஹாப் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றவர் ராப் பாடகர் வேடன். இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை துபாயின் குசைஸில் நிகழ்ச்சி நடத்... மேலும் பார்க்க

Samyuktha Anirudha: சினிமா - கிரிக்கெட் ஜோடியின் கல்யாண புகைப்படங்கள் | Photo Album

Samyuktha Weds AnirudhaSamyuktha Weds AnirudhaSamyuktha Weds AnirudhaSamyuktha Weds AnirudhaSamyuktha Weds AnirudhaSamyuktha Weds AnirudhaKeerthy Suresh: இது கீர்த்தி சுரேஷின் 'Wedding Party' - அட்டகா... மேலும் பார்க்க

வெள்ளித்திரையின் `மேஜிக்' ரஜினிகாந்த்! - நீண்ட திரைப்பயணத்தில் நீங்கள் கொண்டாடிய தருணங்கள்!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமை, 'ஸ்டைலு ஸ்டைலு தான் அது சூப்பர் ஸ்டைலு தான்' என்று இப்போதுவரை ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் கலைஞன் நடிகர் ரஜினிகாந்த்!நடிகர் ரஜினிகாந்தின் சமீபத்திய ... மேலும் பார்க்க

Smriti Mandhana:``டெலிட் செய்யப்பட்ட திருமணம் தொடர்பான போஸ்ட்" - கிரிக்கெட் வீராங்கனை திடீர் முடிவு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா. இவருக்கும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து. அதை ஸ்மிருதி மந்தனா வித்தியாசமான முறையில், அணித் தோழிகளுடன் க... மேலும் பார்க்க

Big Boss Kannada: `சாதி பாகுபாடு' - கிச்சா சுதீப், போட்டியாளர்கள் மீது மகளிர் ஆணையத்தில் புகார்

கடந்த சில வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் எனப் பல மொழிகளில் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.கன்னட நட்சத்திரம் க... மேலும் பார்க்க

AR Rahman:``இங்கு இருக்கும் எனது ஒரே பிரச்னை" - தன் பயணம் குறித்து பகிர்ந்த் ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்ந்து ஆன்மீகம் சார்ந்தும், சூஃபியிசம் சார்ந்தும் இயங்கும் பயணம் குறித்து பேசி வருகிறார். சமீபத்தில் நிகில் காமத்தின் பாட்காஸ்டில் கலந்துகொண்டு பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், ``நான் அனைத்து மதங... மேலும் பார்க்க