ஜனநாயகன்: ``சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டு.....
`அமித் ஷாவா, அவதூறுஷாவா? மக்களுக்கு விடப்பட்ட சுயமரியாதைக்கான சவால் இது..!' - மு.க.ஸ்டாலின்
திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம், விலையில்லா வீட்டு மனை பட்டா உட்பட ரூ.1549.90 கோடியிலான பல்வேறு நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டிற்கு வந்தார். அவர் பேசும்போது தமிழ்நாடு அரசு இந்து சமய வழிபாடுகளுக்கு முடிவுகட்டும் வகையில் செயல்படுகிறது என்கிறார்.
அவர் 'அமித் ஷாவா அல்லது அவதூறுஷாவா' என்று சந்தேகம் வருகிறது. அந்தளவிற்கு உண்மைக்குப் புறம்பான விஷயங்களைப் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார் அமித் ஷா. இதற்காக அவருக்குக் கடுமையான கண்டனங்கள்.
திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை தமிழ்நாட்டில் 4,000 கோயில்களில் கும்பாபிஷேகம் செய்திருக்கிறோம். இப்படி ஒரு சாதனையை பாஜக ஆள்கிற மாநிலங்களில் செய்திருக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது.

997 கோயில்களுக்குச் சொந்தமான 7,071 கோடி மதிப்பிலான நிலங்களை மீட்டிருக்கிறோம். உண்மையான பக்தர்கள் அரசைப் பாராட்டுகிறார்கள். தலைமைச் செயலகத்தில் வாரம் இரு முறை இந்து சமய பணிகளை தொடங்கி வைக்கிறேன். அனைத்து சமயத்தவர்கள் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கிறோம். இப்படி இருக்கும்போது துளியும் உண்மையில்லாத குற்றச்சாட்டை மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுவது அவருடைய பதவிக்கு கண்ணியமல்ல.
அதோடு தமிழ்நாட்டில் மோடி ஆட்சி அமைய வேண்டுமா? என அமித் ஷா கேட்கிறார். அதையே தான் நாங்களும் சொல்கிறோம். தமிழ்நாட்டை நாம் ஆள வேண்டுமா? அல்லது டெல்லியிலிருந்து வேறு யாரோ ஒருவர் ஆள வேண்டுமா? என முடிவு செய்யும் தேர்தல் இது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு விடப்பட்ட சுயமரியாதைக்கான சவால்

பா.ஜ.க-வை ஆட்சியில் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி முயல்கிறார். தமிழ்நாட்டில் கடந்த மூன்று தேர்தல்களிலும் படு தோல்வியடைந்தும் உங்களுக்குப் புரியவில்லையா... தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை செய்வதை நீங்கள் மாற்றிக் கொள்ளாத போது மக்களும் மாற்றிக் கொள்ள மாட்டார்கள். திரும்பவும் நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம்" என்றார்.














