செய்திகள் :

அமைந்தகரை வரதராஜப் பெருமாள் கோயிலில் வேண்டும் வரம் தரும் விளக்குபூஜை... நீங்களும் கலந்துகொள்ளலாம்!

post image

இன்றைக்கு நவீன மெட்ரோ நகரமாகத் திகழும் சென்னை பழங்காலத்தில் ஆன்மிக பூமி. ஆழ்வார்களும் ஆசார்யர்களும் நாயன்மார்களும் தம் திருவடிபட நடந்த நகரம்.

ஏன் இதிகாச காலத்திலேயே இந்தப் பகுதி மிகுந்த சிறப்புகளோடு திகழ்ந்தது என்கிறார்கள். ராமாயண காலத்தில் ஸ்ரீ ராமர் தன் குமாரர்களான லவனையும் குசனையும் தேடி இந்தப் பகுதிக்கு வந்தார். தொடர் பயணத்தினால் களைப்புற்ற அவர் கூவம் நதிக்கரையில் கொஞ்சம் ஓய்வெடுக்க அமர்ந்தார்.

ரகுகுல நாயகன் ஸ்ரீராமன் அமர்ந்த கரை என்பதால் அந்தப் பகுதிக்கே அந்தப் பெயர் உண்டானது. பிற்காலத்தில் மெல்ல மெல்ல மருவி அந்தப் பெயர் அமைந்தகரை ஆனது என்பார்கள்.

பெருந்தேவித் தாயார்
பெருந்தேவித் தாயார்

அப்படிப்பட்ட அமைந்த கரையில் அமைந்திருக்கிறது பிரசன்ன வரதராஜ பெருமாள் திருக்கோயில். சுமார் 300 ஆண்டுகள் பழைமையான இந்தத் திருக்கோயிலின் மகிமைகள் ஏராளம். காஞ்சி வரதராஜ பெருமாளுக்கு இணையான பெருமாளாக இவர் எழுந்தருளியிருக்கிறார்.

பெருமாள் வரதராஜன் என்பதால் தாயாரும் பெருந்தேவி என்னும் திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கிறார். இத்தலப் பெருமாள் கருணாமூர்த்தி. வேண்டும் வரம் வழங்கும் வள்ளல் என்கிறார்கள். தீரா பிரச்னைகள்கூட இந்தப் பெருமாளிடம் வேண்டிக்கொண்டு வழிபட்டால் உடனே தீரும் என்கிறார்கள்.

தாயாரோ தயாபரி. இந்தத் தேவியை வழிபட்டால் செல்வ வளம் சேரும். வெள்ளிக்கிழமைகளில் சுக்ரஹோரையில் இந்தத் தாயாருக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் நிச்சயம் கடன் பிரச்னைகள் விலகும் என்கிறார்கள்.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

இந்த ஆலயத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருப்பதி ஸ்ரீநிவாசர், காஞ்சிபுரம் வரதராஜர், அயோத்தி ஸ்ரீராமர், மதுரா கிருஷ்ணர் ஆகியோர் சந்நிதிகொண்டு அருள்கின்றனர். இங்கே இருக்கும் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி மகத்துவம் வாய்ந்தது.

அன்னை ஆண்டாளை வழிபட்டால் கல்வி கேள்விகளில் மேன்மை ஏற்படும் என்கிறார்கள். படிக்கும் பிள்ளைகள் பூர நட்சத்திர நாளில் இங்கு வந்து ஆண்டாளை வழிபட்டால் கல்வியில் உள்ள தடைகள் விலகி நல்ல தேர்ச்சி கிட்டும் என்கிறார்கள்.

இங்குள்ள ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவராகத் திகழ்கிறார். சனி தோஷம், ஏழரை சனி ஆகியவற்றால் பாதிக்கப்படும் பக்தர்கள் சனி மற்றும் வியாழக்கிழமைகளில் இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் சகலவிதமான துன்பங்களும் விலகி நற்பலன்கள் கூடிவரும் என்கிறார்கள்.

ஸ்ரீ வரதராஜப் பெருமாள்
ஸ்ரீ வரதராஜப் பெருமாள்

வரதராஜ பெருமாளுக்குப் பிரதி புதன் காலை மாலை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்டால் திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கூடிவரும் என்கிறார்கள். மேலும் குடும்ப கஷ்டங்கள் தீர்வதோடு தொழில் அபிவிருத்தி, புத்ரபாக்கியம் ஆகியனவும் கிடைக்கும் என்கிறார்கள்.

இப்படிப்பட்ட வரங்கள் அருளும் இந்த வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் சக்திவிகடனும் வரதராஜ பெருமாள் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து விளக்கு பூஜை இருக்கிறோம். திருவிளக்கை தீபலட்சுமி என்றுதான் போற்றுவோம்.

அன்னையை தீபத்தில் ஆவாஹனம் செய்து பூஜை செய்தால் லட்சுமி தேவி மகிழ்ந்து வேண்டும் வரம் அருள்வாள். எனவேதான் வரும் ஜூலை 24 ம் தேதி ஆடி மாதம் வெள்ளிக்கிழமையுடன் கூடிய நன்னாளில் மாலை 6 மணிக்கு விளக்குபூஜை நடைபெற இருக்கிறது.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

இந்த விளக்குபூஜையில் கலந்துகொண்டு பூஜை செய்ய சுபங்கள் கூடிவரும். திருமணப் பிரார்த்தனைகள் நிறைவேறும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேலும் வீடு மனை வாங்கும் பாக்கியமும் உண்டாகும். இப்படி சகல வரங்களையும் தரும் விளக்கு பூஜையை ஜீ.ஆர்.டி ஜுவல்லர்ஸ், சக்தி மசாலா மற்றும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் ஆகியோர் இணைந்து வழங்குகிறார்கள்.

இந்த வைபவத்தில் நீங்களும் பங்கேற்கலாம். அதற்கு கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள். இணைப்பில் பதிவு செய்தாலே போதுமானது. உறுதிப்படுத்த வேறெந்த பதிலும் அனுப்பப்பட மாட்டாது. நேரடியாக ஆலயத்துக்கு வந்துவிடலாம்.

கலந்துகொள்ளும் வாசகியர் கவனத்துக்கு:

விளக்குப் பூஜையில் கலந்துகொள்ளும் வாசகியர், விளக்கு, விளக்கை வைப்பதற்கான தட்டு, மணி, பஞ்சபாத்திரம், உத்தரணி, கற்பூர ஆரத்தித் தட்டு ஆகியவற்றை எடுத்து வந்தால் போதுமானது. மற்றபடி பூஜைக்குத் தேவையான திரி, எண்ணெய், தாம்பூலப் பொருள்கள், நைவேத்தியம் முதலானவற்றை நாங்களே வழங்குகிறோம்.

அற்புதமான இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள விரும்பும் வாசகியர் இங்கு தரப்பட்டுள்ள link-ஐ பயன்படுத்தி உரிய விவரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்யலாம் அல்லது கீழ்க்காணும் எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் விவரங்களுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த விளக்குப் பூஜையில் கலந்துகொள்ள எவ்வித கட்டணமும் கிடையாது.

முன்பதிவுக்கு: 044-66802980/07

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்!

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆடிமுளைக்கொட்டு திருவிழா! | Album

ஆடிமுளைக்கொட்டு திருவிழாஆடிமுளைக்கொட்டு திருவிழாஆடிமுளைக்கொட்டு திருவிழாஆடிமுளைக்கொட்டு திருவிழாஆடிமுளைக்கொட்டு திருவிழாஆடிமுளைக்கொட்டு திருவிழாஆடிமுளைக்கொட்டு திருவிழாஆடிமுளைக்கொட்டு திருவிழாஆடிமுளைக... மேலும் பார்க்க

திருச்சி, திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீகாட்ச பெருமாள் கோயில்: தாமரைக் குளம்... இரு வாசல்கள் கொண்ட கருவறை!

பெருமாள் கோயில்கொண்டிருக்கும் திவ்ய தேசத்தலங்களில் ஸ்ரீரங்கம் முதன்மையானது. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு இணையான பெருமையும் பழைமையும் உடைய திருத்தலம் திருச்சி மாவட்டத்திலேயே அமைந்துள்ளது. அந்தத் தலத்தை நினைத்... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டம், சேங்கனூர் சத்தியகிரீஸ்வரர் கோயில்: பதவி யோகம் கிடைக்கும்... குரு தோஷம் நீங்கும்!

முருகப்பெருமான் ஈசனை வழிபட்ட தலங்கள் அநேகம். அவை மகிமையும் பழைமையும் பெருமையும் வாய்ந்த தலங்கள். அத்தகைய தலங்களுக்குச் சென்று வழிபட்டாலே நம் வினைகள் தீரும். வேண்டும் வரம் கிடைக்கும் என்கின்றன ஞானநூல்க... மேலும் பார்க்க

சேலம்: காவடி பழநியாண்டவர் கோயிலில் சக்திவிகடன் நடத்தும் திருமண வரம்தரும் ஶ்ரீசுயம்வர பார்வதி ஹோமம்!

இருமணம் இணையும் திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் மிகவும் முக்கியமான தருணம். காரணம் இல்லறத்தில் ஈடுபடுபவர்களே சகல அறங்களையும் செய்யத் தகுதியானவர்கள் என்கின்றன ஞான நூல்கள். அப்படிப்பட்ட திருமணம் சி... மேலும் பார்க்க

திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் ஸ்ரீ அகத்தீஸ்வரர்: கும்பராசிக்காரர்களுக்கு வளம் தரும் திருத்தலம்!

சிவபெருமானின் 64 திருவடிவங்களில் முக்கியமானது ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சொரூபம். குருவாக அமர்ந்து மௌன உபதேசம் செய்யும் ஆலமர் செல்வனை வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். சிவாலயங்களில் தட்சிணாமூர்த்த... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டம் இஞ்சிமேடு ஸ்ரீவரதராஜபெருமாள்: திருமண வரம் தரும் மஞ்சள்மாலை பிரார்த்தனை!

வேள்விகள் செய்வதன் மூலம் நம் வாழ்வுக்குத் தேவையான சகலத்தையும் அதேவேளையின் பெருமாளின் அனுக்கிரகத்தையும் பெறமுடியும் என்பது நம்பிக்கை. தேவர்கள் முதல் ரிஷிகள் மன்னர்கள்வரை அனைவரும் வேள்வி செய்து இறைவனை வ... மேலும் பார்க்க