செய்திகள் :

இந்தியா முழுவதும் விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் போராடுவது ஏன்? 6 புள்ளிகள்|Quick Points

post image

இன்று இந்தியா முழுவதும் தொழிலாளர் சங்கங்களும், விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. இது நாடு முழுவதுமே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

இந்தப் போராட்டத்திற்கான காரணத்தை 6 புள்ளிகளில் தெரிந்துகொள்ளலாம்... வாங்க...

> இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்தில், பல அமெரிக்க விவசாய மற்றும் பால் பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது... வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. இது இந்திய விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும்.

இதனால், இந்திய - அமெரிக்க ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள விவசாயம் மற்றும் பால் பொருள்கள் குறித்த அறிவிப்புகளை ரத்து செய்ய வேண்டும்.

விவசாயம்
விவசாயம்

> 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய தொழிலாளர் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் முன்பிருந்த 29 சட்டங்கள் 4 சட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இந்தச் சட்டத்தினால் தொழிலாளர்களின் பாதுகாப்பு பாதிக்கப்படலாம். மேலும், நிறுவனங்கள் எளிதாக தொழிலாளர்களை வேலையில் அமர்த்துவதும்... நீக்குவதும் நடக்கும். கூடவே, தொழில்கள் கான்ட்ராக்ட் அடிப்படையில் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.

இதனால், இந்தத் திருத்தத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்களின் கோரிக்கை வைக்கின்றன.

கூடுதலாக...

> மின்சாரத் திருத்தச் சட்டம் மற்றும் வரைவு விதை சட்டம் திரும்பப் பெற வேண்டும்.

விவசாயிகளின் உயிர்நாடிகளில் ஒன்று, மின்சாரம். விவசாயத்தில் அதிக வருமானம் கிடைக்கவில்லை என்றாலும் இலவச மின்சாரம் விவசாயிகளின் செலவை ஓரளவு குறைக்கிறது.

இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்சாரத் திருத்தச் சட்டம் இலவச மின்சாரத்தை ரத்து செய்யலாம்.

தொழில்
தொழில்

வரைவு விதை மசோதா கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் என்று விவசாயிகள் இந்த இரு மசோதாகளையும் எதிர்க்கின்றனர்.

> பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

> 100 நாள் வேலைத் திட்டத்திற்கு முன்பு இருந்த 90 - 10 நிதி பகிர்தலையே மீண்டும் கொண்டு வர வேண்டும்.

> விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உறுதி மிஷன் (கிராமின்) மற்றும் சாந்தி சட்டத்தைத் திரும்ப பெற வேண்டும்.

'96 க்குப் பின் ஒற்றை இலக்க வாக்கு வங்கி மட்டுமே!' - தமிழகத்தில் காங்கிரஸின் பலம்தான் என்ன?

திமுக காங்கிரஸ் இடையே மூன்று மாதங்களுக்கு முன்பாக புகைய தொடங்கிய நெருப்பு இன்னும் அணையவில்லை. 'அமைச்சரவையில் பங்கு கிடையாது' என முதல்வர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன பிறகும் காங்கிரஸார் விடுவதாக இல்லை... மேலும் பார்க்க

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

நாடாளுமன்றம்இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. நமது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழும் நாடாளுமன்றம், மக்களவை மற்றும் ... மேலும் பார்க்க

"2 அரசுகளும் அலைக்கழித்தால் எங்கே போவது?" - நயினார் நாகேந்திரனிடம் குமுறிய அங்கன்வாடி ஊழியர்கள்

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10வது நாளாக தொடர் காத்திருப்பு... மேலும் பார்க்க

பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக-வின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திர... மேலும் பார்க்க

"மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?"- மீண்டும் எதிர்வினை ஆற்றிய மாணிக்கம் தாகூர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.அதிக சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.இந்தச் ச... மேலும் பார்க்க