சேலம்: தனியார் பல்கலை விடுதியில் சாப்பிட்ட 70 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்; சமை...
``எடப்பாடி முதுகில் குத்துவார் என்பது அமித்ஷாவுக்கு தெரியும், ஆகவே'' - புகழேந்தி சொல்வது என்ன?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக ஒருங்கிணைப்பு குழு சார்பில் வா.புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வா.புகழேந்தி "அதிமுக தொண்டர்கள் எந்த காலத்திலும் பாஜக-வுடன் கூட்டணியை ஒப்புக்கொள்ள மாட்டார்கள், அதனை நாங்கள் ஆதரிக்க மாட்டோம், எதிர்த்து நிற்போம். 'புது கட்சி தொடங்க மாட்டேன், நான் அப்படி சொல்லவில்லை' என்று கூறியுள்ளது வியப்பாக இருக்கிறது.
இவரை அருகில் வைத்துக் கொண்டு சொன்னவர் வைத்திலிங்கம், அவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் வைத்திலிங்கம் சொன்னதை அப்படியே மறைக்கிறார் ஓபிஎஸ், அதேபோல மூத்த தலைவர் பண்ருட்டியார், 'தேசிய ஜனநாயக கூட்டணியோடு இனி கூட்டணி இல்லை' என்று கூறினார்.
'ஒரு மாதம் பொறுமையாக இருப்போம். பழனிசாமி ஒத்துவரவில்லை என்றால் தனி கட்சி ஆரம்பிப்போம் என்று வைத்திலிங்கம் மிகத் தெளிவாக சொன்னாரா இல்லையா, தொண்டர்கள் உரிமை மீட்பு குழு, கட்சியாக மாறும் என்றெல்லாம் சொன்னார்கள்.
ஆனால், இப்போது அமித் ஷாவை நேரில் சந்தித்து வந்ததாக ஓபிஎஸ் சொல்கிறார். எல்லாமே முன்னுக்கு பின் முரணாக நடக்கிறது, சொந்தக் கட்சி விஷயத்தில் தலையிட மாட்டேன் என்று கூறிய உள்துறை அமைச்சர், கே ஏ செங்கோட்டையனை அழைத்து பேசுகிறார். ஓபிஎஸ்சை அழைத்து பேசுகிறார்.

எப்படியும் பழனிசாமி, முதுகில் குத்துவார் என்பது அமித்ஷாவிற்கு தெரியும். ஆகவே இப்பொழுது ஓபிஎஸ்-ஐ தயார் நிலையில் வைத்துக் கொள்ளத்தான் அழைத்து சந்தித்திருக்கிறார் என்பது ஆதாரப்பூர்வமாக தெரிகிறது.
மேலும் மதச்சார்பற்ற கட்சிகள் உதவியோடு மீண்டும் எம்ஜிஆர், ஜெயலலிதா கொள்கைகளை நிலை நிறுத்தும் வகையில் ஆட்சி அமைக்க பாடுபடுவோம்." என்று தெரிவித்தார்.














