``இந்தியா - ரஷ்யா உறவு 'துருவ நட்சத்திரத்தை' போன்றது'' - மோடி பெருமிதம்
சேலம்: தனியார் பல்கலை விடுதியில் சாப்பிட்ட 70 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்; சமையல் கூடத்திற்கு சீல்
சேலம் மாவட்டம் சின்ன சீரகாபாடி அருகே பிரபல தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
பல்கலைக்கழகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி விடுதியில் நேற்று வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒருவர் பின் ஒருவராக வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்த தகவல் அறிந்த சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மருத்துவக் கல்லூரி விடுதிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, விடுதி சமையல் கூடம் சுகாதாரம் இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடியாக சமையல் கூடத்திற்கு சீல் வைத்தனர்.
தொடர்ந்து, பாதிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதை ஆய்வு செய்தபோது, உணவில் எந்த பாதிப்பும் இல்லை எனவும், உணவிற்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீரில் மாசு இறந்தது தெரியவந்தது.
பின்னர், தண்ணீரின் மாதிரிகளை எடுத்து ஆய்விற்கு அனுப்பியுள்ளனர். மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட செய்தியறிந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
















