செய்திகள் :

What To Watch: அங்கம்மாள், களம்காவல், குற்றம் புரிந்தவன் - இந்த வாரம் ரிலீஸ்கள் இவைதான்!

post image

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வந்திருக்கும் படங்கள்-சீரிஸ்கள் இவைதான்.

தியேட்டர் வெளியீடுகள் – டிசம்பர் 5

துரந்தர் (Dhurandhar):


ரன்வீர் சிங், சஞ்சய் தத், அக்ஷய் கண்ணா ஆகியோர் நடித்திருக்கும் இந்த பாலிவுட் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

களம்காவல் (Kalamkaval):


ஜித்தின் கே. ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி, விநாயகன், ஜிபின் கோபிநாத் ஆகியோர் நடிப்பில் நேற்று திரைக்கு வந்திருக்கிறது. க்ரைம் த்ரில்லர் படமான இதில் மம்மூட்டி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Kalamkaval - Mammootty
Kalamkaval - Mammootty

அங்கம்மாள் (Angammal):

பெருமாள் முருகனின் 'கொடித்துணி' சிறுகதையை அடிப்படையாகக் கொண்ட விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் கீதா கைலாசம், சரண் சக்தி, பரணி ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

OTT வெளியீடுகள்:

குற்றம் புரிந்தவன் - சோனி லிவ்:
பசுபதி, விதார்த், லிசி ஆன்டனி, லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி ஆகியோர் நடித்திருக்கும் இந்த க்ரைம் த்ரில்லர் சீரிஸ் சோனி லிவ் தளத்தில் வெளியாகியிருக்கிறது. 7 எபிசோடுகளைக் கொண்ட இந்த சீரிஸ் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஸ்டீபன் - நெட்பிளிக்ஸ்:
ஸ்மிருதி வெங்கட், கோமதி ப்ரியா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம் நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியிருக்கிறது.

The Girlfriend - Rashmika Mandanna
The Girlfriend - Rashmika Mandanna

தி கேர்ள்ஃப்ரெண்ட் (The Girlfriend) - நெட்பிளிக்ஸ்:
ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ரஷ்மிகா மந்தன்னா, தீக்ஷித் ஷெட்டி, அனு இமானுவேல், ராவ் ரமேஷ், ரோகிணி நடிப்பில் தியேட்டரில் வெளியான இப்படம் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) தளத்திற்கு இப்போது வந்திருக்கிறது.

டைஸ் இரே (Dies Irae) - ஜியோ ஹாட்ஸ்டார்:
ராகுல் சதாசிவன் இயக்கத்தில், பிரணவ் மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இப்போது இத்திரைப்படம் ஜியோசினிமா தளத்தில் வெளியாகியிருக்கிறது.

மேற்கண்ட படங்கள் மற்றும் சீரிஸ்களில் உங்களுடைய பேவரைட் எது?

Kuttram Purindhavan Review: பரபர த்ரில்லர் வெப் சீரிஸ்; வெல்கிறதா பசுபதி - விதார்த் காம்போ?!

அரசு மருத்துவமனையில் மருந்தாளராக பணிபுரியும் பாஸ்கரன் (பசுபதி) தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மருந்தாளராக இருக்கும் அவருடைய பணிக்காலமும் முடிவை எட்டுகிறது. தனக்குக் கிடைக்கவிருக்... மேலும் பார்க்க

அங்கம்மாள் விமர்சனம்: உள்ளூர் கதையை உலக சினிமாவாக முன்னிறுத்தும் இயல்பான படைப்பு!

தனது குக்கிராமத்தின் முதல் டாக்டரான பவளமுத்து (சரண்), நகரத்தில் வசிக்கும் வசதியான வீட்டுப் பெண்ணான ஜாஸ்மினை (முல்லையரசி) காதலிக்கிறான்.ஊரிலிருக்கும் அவனது அம்மா அங்கம்மாள் (கீதா கைலாசம்) வாழ்நாள் முழு... மேலும் பார்க்க