செய்திகள் :

"எப்ஸ்டீனை சந்தித்து இருக்கிறேன் தான்; ஆனால், 'இதற்கு'!" - ராகுல் காந்திக்கு ஹர்தீப் பூரி பதில்!

post image

உலகம் முழுவதும் பரபரப்பைக் கிளப்பி வரும் எப்ஸ்டீன் ஃபைலுக்கு இந்தியாவும் விதிவிலக்கு அல்ல.

அமெரிக்கா வெளியிட்டு வரும் எப்ஸ்டீன் ஆவணங்களில் இந்தியாவைச் சேர்ந்த சிலரின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

தற்போது இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு மத்திய அரசைக் கடுமையாகச் சாடி வரும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரிக்கு எப்ஸ்டீனுடன் தொடர்பு உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

ஹர்தீப் பூரி இந்திய வெளியுறவுத் துறையின் முன்னாள் உயர் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெஃப்ரி எப்ஸ்டீன்
ஜெஃப்ரி எப்ஸ்டீன்
ராகுல் காந்தியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்துள்ளார் ஹர்தீப் பூரி...

"எப்ஸ்டீனில் முப்பது லட்சம் இமெயில்களில் என்னுடைய பெயர் வெறும் மூன்று நான்கு முறை தான் இடம்பெற்றிருக்கிறது.

அலுவல் ரீதியாக எப்ஸ்டீனை சில நிகழ்வுகளில் சந்தித்துள்ளேன். அதைத் தவிர, அவர் செய்துகொண்டிருந்த வேலைக்கும் எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை.

எனக்கு எப்ஸ்டீனின் செயல்பாடுகளில் விருப்பமே இல்லை. அவர்களைப் பொறுத்த வரை, நான் சரியான ஆள் இல்லை. எப்ஸ்டீன் என்னை இரண்டு முகம் கொண்டவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ராகுல் காந்தி அந்த இமெயில்களைப் படிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

`ஓரங்கட்டும் செந்தில் பாலாஜி டு முறுக்கிக்கொண்ட வைத்திலிங்கம்; புலம்பும் உடன்பிறப்புகள்!' | கழுகார்

ஓரங்கட்டும் செந்தில் பாலாஜி!சீட்டுக்கு மோதும் நிர்வாகிகள்...கோவை மாவட்டத்தின் கிணத்துக்கடவு தொகுதியில், கடந்த இரண்டு தேர்தல்களாக நூலிழையில்தான் வெற்றிவாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறது தி.மு.க. வரும் தேர்த... மேலும் பார்க்க

இந்திய அரசியலில் அரிதான நிகழ்வு: `சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்' - வரலாறு சொல்லும் கதை!

2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம், முன்னாள் இந்திய ராணுவத் தளபதி நரவானே புத்தகத்தின் சம்பவம், எப்ஸ்டீன் பைல் என ஆளும் அரசிடம்... மேலும் பார்க்க

`மாற்று சக்தி என்று கமல் வந்தார்; அவரே ஜெயிக்கல; இப்ப.!' - தவெகவை அட்டாக் செய்த சி.வி.சண்முகம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க-வின் செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி-யுமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பேசினார். அப்போது, ``தமிழகத்தில் அ.... மேலும் பார்க்க

பிரதமர் மோடி விருந்தை புறக்கணித்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஸ்ரீலேகா - அதிருப்திக்கு காரணம் என்ன?

கேரளாவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என்ற பெருமை பெற்றவர் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி ஸ்ரீலேகா. அவர் பா.ஜ.க-வில் இணைந்து திருவனந்தபுரம் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். கேரள உள்ளாட்சி தேர்தலின்போது திருவ... மேலும் பார்க்க

கேரளா: "சட்டசபைத் தேர்தலில் 21 பாஜக MLA-க்கள் வெற்றிபெற வேண்டும்" - மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆசை

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் அதே காலகட்டத்தில் கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. அதற்காக அம்மாநில அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன.கேரளாவில் 21 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என... மேலும் பார்க்க