செய்திகள் :

`மாற்று சக்தி என்று கமல் வந்தார்; அவரே ஜெயிக்கல; இப்ப.!' - தவெகவை அட்டாக் செய்த சி.வி.சண்முகம்

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க-வின் செயல்வீரர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா எம்.பி-யுமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, ``தமிழகத்தில் அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் வெற்றி பெறும். கடந்த மாதம் வரை அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதற்கு யாரும் இல்லை என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

எடப்பாடி பழனிசாமி

ஆனால் இன்று அ.தி.மு.க தலைமையில் வலுவான கூட்டணி அமைந்திருக்கிறது. மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நம் கூட்டணி கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினோம்.

அதேசமயம் தி.மு.க கூட்டணி தற்போது கலகலத்துக் கிடக்கிறது. அந்தக் கூட்டணியில் இருப்பவர்கள் தற்போது ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒருவர் 40 கேட்கிறார், மற்றொருவர் 30 வேண்டும் என்கிறார். அத்துடன் சீட் இல்லையென்றால் அங்கே போய்விடுவேன் என்று அவர்களை மிரட்டுகின்றனர்.

அவர் வருகிறார், இவர் வருகிறார் என்று நினைக்க வேண்டாம். மூப்பனாரும், வைகோவும் வந்தார்கள், போனார்கள். அதேபோல விஜயகாந்த் வந்தார் போய்விட்டார்.

நான்தான் தி.மு.க-வுக்கு மாற்று சக்தி என்று கமல்ஹாசன் வந்தார். ஆனால் அவர் போட்டியிட்ட தொகுதியிலேயே தோற்றுப் போனார். நாளை சிம்புகூட அரசியலுக்கு வரலாம். அதேபோல இப்போது ஒருவர் வந்திருக்கிறார். சினிமா தியேட்டரிலும், பேருந்திலும் விசில் அடிக்கலாம்.

தவெக விஜய்
தவெக விஜய்

ஆனால் அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்துக்கு விழும் வாக்குகளைத் தடுக்க எந்தக் கொம்பனாலும் முடியாது. நம்மைப் பொறுத்தவரை அன்றும் சரி… இன்றும் சரி… தி.மு.க-தான் எதிரி. பல ஜாம்பவான்களை பார்த்த இயக்கம் அ.தி.மு.க. இந்தக் கட்சி தலைவர்களை நம்பி இல்லை.

அதன் தொண்டர்களை நம்பியே இருக்கிறது. அதனடிப்படையில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க உறுதியாக தோற்கடிக்கப்படும்" என்றார்.

பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக-வின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திர... மேலும் பார்க்க

"மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?"- மீண்டும் எதிர்வினை ஆற்றிய மாணிக்கம் தாகூர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.அதிக சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.இந்தச் ச... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் போராடுவது ஏன்? 6 புள்ளிகள்|Quick Points

இன்று இந்தியா முழுவதும் தொழிலாளர் சங்கங்களும், விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. இது நாடு முழுவதுமே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்திற்கான காரணத்தை 6 புள்ளிகளில் தெரிந்துகொ... மேலும் பார்க்க

`ஓரங்கட்டும் செந்தில் பாலாஜி டு முறுக்கிக்கொண்ட வைத்திலிங்கம்; புலம்பும் உடன்பிறப்புகள்!' | கழுகார்

ஓரங்கட்டும் செந்தில் பாலாஜி!சீட்டுக்கு மோதும் நிர்வாகிகள்...கோவை மாவட்டத்தின் கிணத்துக்கடவு தொகுதியில், கடந்த இரண்டு தேர்தல்களாக நூலிழையில்தான் வெற்றிவாய்ப்பைத் தவறவிட்டிருக்கிறது தி.மு.க. வரும் தேர்த... மேலும் பார்க்க

இந்திய அரசியலில் அரிதான நிகழ்வு: `சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்' - வரலாறு சொல்லும் கதை!

2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில் இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம், முன்னாள் இந்திய ராணுவத் தளபதி நரவானே புத்தகத்தின் சம்பவம், எப்ஸ்டீன் பைல் என ஆளும் அரசிடம்... மேலும் பார்க்க