செய்திகள் :

'ஒவ்வொரு கப்பலுக்கு 2 மில்லியன் டாலர்கள்' - ஹார்முஸ் முதல் யுரேனியம் வரை; ஈரானின் 10 நிபந்தனைகள்

post image

அமெரிக்க நேரப்படி, இன்று இரவு 8 மணிக்கு ஈரான் மீதான கடும் தாக்குதலுக்கு நேரத்தைக் குறித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அவர் வைத்திருக்கும் ஒரே நிபந்தனை 'ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டும்' என்பதுதான்.

இந்த நிபந்தனைக்கு ஈரானும் 10 எதிர் நிபந்தனைகளை விதித்துள்ளது. அவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

> மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போரை உடனடியாக நிறுத்த வேண்டும்.

> இந்தப் போர் நிறுத்தம் தற்காலிகமானதாக இல்லாமல், நிரந்தரமானதாக இருக்க வேண்டும்.

> ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வதற்கான ஒரு அமைப்பு வேண்டும்.

ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி

> ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.

> அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் (NPT) கீழ் யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கான உரிமையை முறைப்படி அங்கீகரிக்க வேண்டும்.

> ஈரான் நாட்டின் மீது அமெரிக்காவும், பிற நாடுகளும் விதித்துள்ள தடைகளை நீக்க வேண்டும்.

> லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்.

> இதற்கு பதிலாக, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கும். ஆனால், அங்கே நின்றுகொண்டிருக்கும் ஒவ்வொரு கப்பலும் அந்த வழியாகச் செல்ல கட்டணமாக 2 மில்லியன் டாலர்கள் வசூலிக்கப்படும். இந்தப் பணம் ஓமனுடன் பகிரப்படும்.

> இந்த நிதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட கட்டமைப்புகளைச் சரி செய்ய பயன்படுத்தப்படும்.

நேரடி நஷ்ட ஈடிற்குப் பதிலாக, இப்படி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

> எதிர்காலத்தில் ஈரான் மீது எந்தத் தாக்குதலும் நடத்தப்படாது என்பதற்கான உறுதி.

மதுரை மத்தி: "அறியாமைக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை" - பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்

மதுரை மத்திய தொகுதியில் அ.தி.மு.க கூட்டணி சார்பாக இயக்குநர் சுந்தர்.சி வேட்பாளராகக் களமிறங்கி இருக்கும் நிலையில், அதே தொகுதியில் தி.மு.க சார்பாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுகிறார... மேலும் பார்க்க

அருணாச்சலப் பிரதேசம்: முதல்வர் பேமா காண்டு மீது சிபிஐ விசாரணை; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பேமா காண்டுவின் உறவினர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு, விதிமுறைகளை மீறி அரசு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்... மேலும் பார்க்க

சாத்தான்குளம்: ``மேல்முறையீடு சென்றாலும் எங்கள் சட்டப்போராட்டமும்.." - ஜெயராஜ் குடும்பத்தினர் பேட்டி

கொ ரோனா நேரத்தில் கூடுதல் நேரம் கடை திறந்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாத்தான்குளம் பென்னிக்ஸ் - ஜெயராஜ் ஆகிய தந்தை மகன் கோடுராமாக காவல்துறை அதிகாரிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இந்... மேலும் பார்க்க

`மனைவிக்கு இரண்டு பாஸ்போர்ட்? அமெரிக்கா, துபாயில் சொத்து' - ஹிமந்தா பிஸ்வாவைச் சுற்றும் சர்ச்சை!

அஸ்ஸாம் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஏப்ரல் 9-ம் தேதி தேர்தலும் மே-4ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து சட்டமன்ற... மேலும் பார்க்க

``காங்கிரஸ் கட்சியின் பலம் காங்கிரஸுக்கே தெரியவில்லை.!" - பிரவீன் சக்ரவர்த்தி

திமுக கூட்டணியில் 28 தொகுதிகளை வாங்கிய காங்கிரஸ் கட்சி தாமதமாகத் தான் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. காரணம் வேட்பாளர்கள் தேர்வில் கட்சிக்குள்ளேயே பல குளறுபடிகள் அரங்கேறி இருக்கின்றன. வேட்பாளர்கள் ... மேலும் பார்க்க

`புதுச்சேரி அரசின் ஆயி மண்டபம் சின்னத்தை மாற்றுவோம்!' - தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது பாஜக

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்காக பா.ஜ.க வெளியிட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில், `அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆண்டுக்கு 2 இலவச எல்பிஜி சிலிண்டர்கள் பொங்கல் மற்றும் விநாயகர் சதுர்த்திக்கு ... மேலும் பார்க்க