செய்திகள் :

ICEEE : கருத்தரிப்பு சிகிச்சையிலும் வந்துவிட்டது AI - சென்னை மருத்துவ கருத்தரங்கில் தகவல்

post image

வளர்ந்து வரும்  டிஜிட்டல் உலகில், கருத்தரிப்பு சிகிச்சையிலும் ஏ.ஐ., தொழில் நுட்பம் ஆதிக்கம் செலுத்த உள்ளதாக கருத்தரிப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் நான்காவது சர்வதேச ‘நாளமில்லா சுரப்பியல், கருவியல் மற்றும் எண்டோஸ்கோபி’ (ஐ.சி.இ.இ.இ.,) 2026 மாநாடு நடைபெற்றது. புளூம் லைஃப் மருத்துவமனை ஒருங்கிணைத்து நடத்திய நிகழ்வில், இந்தியா முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட முன்னணி மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு நிபுணர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். 

கருத்தரிப்பு சிகிச்சையிலும் ஏ.ஐ
கருத்தரிப்பு சிகிச்சையிலும் ஏ.ஐ

உலகளவில் புகழ் பெற்ற ஐ.வி.எஃப் நிபுணர் கௌதம் அல்லாபாடியா, மெடிஸ்கேன் நிறுவனர் டாக்டர் சுரேஷ் சேஷாத்ரி மற்றும் மூத்த நிபுணர் டாக்டர் கௌரிசங்கர் பரமசிவம், வாணி புஜாரி, அபூர்வா பல்லம் ரெட்டி, ரமணி தேவி, சுதர்சன் மற்றும் பிஜாய் பாலகிருஷ்ணன் உட்பட பல மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

புளூம்லைஃப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், மாநாட்டின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் கவிதா கௌதம்,"மருத்துவத் துறையில் நாளுக்கு நாள் பெருகி வரும் தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வது மிக அவசியம். நோயாளிகளுக்குச் சிறந்த சிகிச்சையை வழங்க வேண்டும் என்ற மருத்துவர்களின் ஆர்வமே இதுபோன்ற மாநாடுகளை நடத்தத் தூண்டுகிறது. 2018-ல் தொடங்கப்பட்ட இந்த முன்னெடுப்பு, இன்று ஒரு சர்வதேச தளமாக உருவெடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது," எனத் தெரிவித்தார்.

நிகழ்வில், நவீன செயற்கை கருத்தரிப்பு மற்றும் கருவில் உள்ள குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசனை மற்றும் ஆய்வரங்கங்கள் நடத்தப்பட்டன. செயற்கை கருத்தரிப்பு, கருவில் உள்ள குழந்தைகளுக்கான மருத்துவம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள அதிநவீன மாற்றங்களை மருத்துவர்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. 

நிகழ்வில் பேசிய மருத்துவ நிபுணர்கள், கருத்தரிப்பு சிகிச்சையில் நவீன தொழில்நுட்பங்களின் பங்களிப்பும் மகத்தானதாக இருக்கப் போகிறது. கருவை உருவாக்குவதில் ஆணின் உயிரணுக்களை தேர்வு செய்வதில், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பங்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மருத்துவத் துறையில் அதன் ஆதிக்கம் அதிகமாக இருக்கலாம் என்றனர்.

கருத்தரிப்பு சிகிச்சையிலும் ஏ.ஐ
கருத்தரிப்பு சிகிச்சையிலும் ஏ.ஐ

நீண்ட காலக் கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடு கருவுறுதலில் ஏற்படுத்தும் தாக்கம், குறைந்த மருந்துகள் மற்றும் நோயாளிக்கு அதிக அசௌகரியம் இல்லாத நவீன 'மினி ஐ.வி.எஃப்.,' முறைகள் குறித்தும் மருத்துவர்கள் விளக்கிப் பேசினர். நவீன ஸ்கேனிங் முறைகள் மற்றும் கருமாற்றம் குறித்த பயிற்சிகளை மருத்துவர்கள் மாதிரி கருவிகள் மூலம் நேரடியாகச் செய்து பார்த்தனர். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கவிதா கௌதம் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Doctor Vikatan: மெனோபாஸ் காலத்தில் அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன்... ஆன்டிபயாடிக் எடுக்கலாமா?

Doctor Vikatan: என் வயது 48. மெனோபாஸ் அறிகுறிகள் ஆரம்பித்துவிட்டன.இத்தனை வருடங்களாக இல்லாமல் இப்போது எனக்கு அடிக்கடி யூரினரி இன்ஃபெக்ஷன் வருகிறது. ஒன்றிரண்டு முறை மருத்துவரைச் சந்தித்தபோது ஆன்டிபயாடிக... மேலும் பார்க்க

Doctor Vikatan: அடிக்கடி கத்திரிக்காய் சாப்பிட்டால் கிட்னி ஸ்டோன்ஸ் வருமா?

Doctor Vikatan: சிறுநீரகக் கல் இருப்பவர்கள் தக்காளி சாப்பிடக்கூடாது என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்கள் கத்திரிக்காயும் சாப்பிடக்கூடாது என்று சொல்வது சரியா... அடிக்கடி தக்காளியும் கத்திரிக... மேலும் பார்க்க

Doctor Vikatan: கோயில் குளங்கள், ஆறுகளில் குளித்தால் அரிப்பு, தவிர்க்க முடியாதபோது என்ன செய்வது?

Doctor Vikatan:வீட்டைத் தவிர வெளியிடங்களில் குளித்தால்... குறிப்பாக குளங்கள், ஆறுகளில் குளித்தால் ரொம்பவும் உடல் அரிக்கிறது. புண்ணியத்தலங்கள் என்பதால் அந்த நீரில் குளிக்காமலும் இருக்க முடியவில்லை. அடி... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஓவர் வெயிட், அதீத பசி, நள்ளிரவில் உணவுத்தேடல்... உடலா, மனதா... எதில் பிரச்னை?

Doctor Vikatan: என் மகனுக்கு 29 வயதாகிறது. பல வருடங்களாகவே உடல் பருமனுடன்தான் இருக்கிறான். சமீபகாலமாக அவன் அடிக்கடி பசிப்பதாகச் சொல்லி, கண்டதையும் சாப்பிடுகிறான். குறிப்பாக நள்ளிரவில் உணவுத் தேடல் அவன... மேலும் பார்க்க

Doctor Vikatan: காய்ச்சல் அடித்தால் உடனே பாராசிட்டமால் மாத்திரை போடுவது சரியா?

Doctor Vikatan: லேசாக காய்ச்சல் அடித்தாலே சிலர், உடனே பாராசிட்டமால் மாத்திரை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆனால், என் பாட்டியோ, காய்ச்சலுக்கு உடனே மாத்திரை போடத் தேவையில்லை.... ஒன்றிரண்டு நாள்... மேலும் பார்க்க

Doctor Vikatan: தாமதமாகும் மருத்துவர் Appointment; மருந்துகளை நிறுத்தலாமா, தொடர வேண்டுமா?

Doctor Vikatan:உடல்நலத்துக்காக கடந்த இரண்டு மாதங்களாக டாக்டர் பரிந்துரைத்த மாத்திரைகளைச் சாப்பிட்டு வருகிறேன். டாக்டர் சொன்ன இந்த மாத்திரை முடியும் நாள் அன்றுதான் டாக்டரைச் சந்திக்க வேண்டுமா... இரண்டு... மேலும் பார்க்க