செய்திகள் :

கரூர்: 4 பவுன் தங்க செயினைப் பறிக்க முயன்ற திருடன்; 20 நிமிடங்கள் போராடிய மூதாட்டி; என்ன நடந்தது?

post image

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வளையப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி மனைவி எரம்மாள் (வயது: 75). இவர்களுக்கு மகன், மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இருவருக்கும் திருமணம் ஆகிய நிலையில், மகன் திருச்சியிலேயே தங்கியுள்ளார். இந்நிலையில், முதிய தம்பதியினர் இரவு தங்களது வீட்டில் தனியாக இருந்தபோது இரவு சுமார் 11 மணி அளவில் முகமூடி அணிந்து வீடு புகுந்த மர்ம நபர், வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.

இந்நிலையில், அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியைத் தாக்கி, அவரது கழுத்தில் அணிந்திருந்த நான்கு பவுன் தங்கத் தாலி செயினைப் பறித்துச் சென்றுள்ளார்.

இதற்கிடையில், தாலி பறிக்க வந்த முகமூடி கொள்ளையனிடம் மூதாட்டி தாலி செயினைப் பறிக்கவிடாமல் போராடியதால் கொள்ளையன் அவரைச் சரமாரியாக சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாகத் தாக்கி சித்திரவதைக்கு உள்ளாக்கியுள்ளான்.

instant house

பின்னர், தாலியைப் பறித்துக்கொண்டு முகமூடி கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். சிறிது நேரம் கழித்து காயமடைந்து மயக்கம் தெளிந்த நிலையில் அருகில் இருந்த உறவினர்களிடம் தன்னைத் தாக்கி தாலி செயினைப் பறித்துக்கொண்டு சென்ற சம்பவத்தை அழுதவாறே கூறியுள்ளார்.

அவரது கன்னம், கழுத்து, மார்புப் பகுதிகளில் பலத்த காயமடைந்த நிலையில் இருந்தவரை அவரது உறவினர்கள் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை டி.எஸ்.பி செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், கைரேகை நிபுணத்துவ போலீஸார் மற்றும் லக்கி போலீஸ் நாயுடன் விசாரணை மேற்கொண்டனர்.

அதோடு, அந்தப் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் சுற்றுப்புறப் பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அப்பகுதியில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக தெரு மின் விளக்குகள் எரியவில்லை.

இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட முகமூடி கொள்ளையன் இரவு நேரத்தில் நோட்டமிட்டு மூதாட்டியின் வீட்டிற்குள் உறங்கி இருந்து பின்னர் அவரைத் தாக்கி தாலி செயினைப் பறித்துசென்றுள்ளான் என்பது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

'தொடர் புகார்; கண்டுக்கொள்ளாத நகராட்சி' மூதாட்டியின் கைவிரலை கடித்து துண்டாக்கிய தெரு நாய்

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெருகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக தொடர் புகார் எழுந்தது. இறைச்சி கடைகள் மற்றும் குப்பை கழிவுகள் இரு... மேலும் பார்க்க

வெளிநாட்டில் பதுங்கியுள்ள 60 கேங்க்ஸ்டர்களின் உறவினர்கள் மீது நடவடிக்கை - கோல்டி பிரர் பெற்றோர் கைது

பஞ்சாப் மாநிலம் எப்போதும் ஆயுதம் கலாசாரம் நிறைந்து இருக்கிறது. இது தவிர அங்கு போதைப்பொருளும் எளிதாக விற்பனை செய்யப்படுகிறது. அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடந்துகொண்டிருக்கிறது. பஞ்சாப்பை சேர்ந்த கிரிமினல... மேலும் பார்க்க

அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிக்கு பலியாகும் தெருநாய்கள் - 1,100 தெருநாய்கள் கொன்று குவிப்பு!

தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் தங்களது இஷ்டத்திற்கு வாக்குறுதிகளை கொடுப்பார்கள். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்த பிறகு அந்த வாக்குறுதிகள் பற்றி கவலைப்படுவது கிடையாது என்பதே பெரும... மேலும் பார்க்க

திருமணம் செய்வதாக கூறி 10 ஆண்டுகளாக வேலைக்கார பெண்ணுடன் பாலியல் உறவு - இந்தி நடிகர் நதீம் கான் கைது!

பாலிவுட் நடிகர் நதீம் கான் மீது அவரின் வீட்டு வேலைக்கார பெண் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். 40 வயதான அப்பெண் பல பாலிவுட் நடிகர்கள் வீடுகளில் வேலை செய்து இருக்கிறார். சமீபத்தில் வெளியாகி மெகா... மேலும் பார்க்க

`ரெளடி வெள்ளைக்காளி மீது வெடிகுண்டு வீசிய ரௌடி என்கவுண்டர்' - பெரம்பலூர் பரபரப்பு

கடந்த 24-ம் தேதி ரௌடி வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையில் உணவு சாப்பிடுவதற்காக நிறுத்தப்பட்டது. அப்போது... மேலும் பார்க்க

கேரளா: ஒரு வயது குழந்தை அடித்துக் கொலை; நாடகமாடிய தந்தை சிக்கியது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் சிஜில். மைக் செட் ஆப்பரேட்டர் வேலை செய்து வந்தார். இவருக்கும் கிருஷ்ணபிரியா என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி ... மேலும் பார்க்க