செய்திகள் :

கரூர் மரணங்கள்: குறுக்குக் கேள்விகள்; 2 நாள் விசாரணை? ஆஜராகும் விஜய்; தவெக-வை நெருக்கும் சிபிஐ?

post image

கரூர் சம்பவத்தில் சிபிஐ தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது. தவெகவின் முக்கிய நிர்வாகிகளை விசாரித்த சிபிஐ, விஜய்க்கும் சம்மன் அனுப்பியிருந்தது.

சிபிஐ முன்பு ஆஜராக டெல்லி புறப்பட்டுவிட்டார் விஜய். இந்நிலையில், விஜய்யைக் குறைந்தபட்சம் இரண்டு நாள்களாவது ஆஜராக வைப்பார்கள் எனக் கிசுகிசுக்கின்றனர் உளவுத்துறை வட்டாரத்தினர்.

TVK Vijay
TVK Vijay

தவெகவின் முக்கிய நிர்வாகிகளான என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் டிசம்பர் கடைசி வாரத்தில் சிபிஐ முன்பு ஆஜராகியிருந்தனர். அவர்களை மூன்று நாள்களுக்கு சிபிஐ விசாரித்திருந்தது.

கரூரில் பாதுகாப்புப் பணியிலிருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் சிபிஐ விசாரித்திருந்தது. ஏற்கனவே கரூருக்கு நேரில் வந்து சம்பவ இடத்தையும் தடயங்களையும் பார்வையிட்டு மக்களிடம் விசாரித்த சிபிஐ, சமீபத்தில் விஜய்யின் பிரசார பேருந்தையும் கரூருக்கு ஓட்டிச் சென்றிருந்தது. அங்கே அந்தப் பேருந்தை முழுமையாக ஆய்வு செய்திருந்தனர்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் சிபிஐ முன்பு ஆஜராகவிருக்கிறார். இதற்காக காலை 7 மணிக்கே தனி விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டிருக்கிறார். காலை 11 மணிக்கு விஜய் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகவிருக்கிறார்.

இந்நிலையில், விஜய்யிடம் குறைந்தபட்சம் இரண்டு நாள்களுக்காகவது விசாரணை நடத்தப்படும் எனத் தகவல் சொல்கின்றனர் உளவுத்துறையினர்.

த.வெ.க - விஜய்
TVK - Vijay

காவல்துறை அதிகாரிகள் மற்றும் தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கூறிய பதில்களை வைத்துக்கொண்டு விஜய்யிடம் குறுக்குக் கேள்விகளும் கேட்கப்படும் என்கின்றனர்.

கரூர் விவகாரத்தில் பாஜகவினர் விஜய்க்கு முழுமையாக ஆதரவு தெரிவித்தபோதும், அவர் பதிலுக்கு எந்தக் க்ரீன் சிக்னலையும் காட்டவில்லை. சிறப்புப் பொதுக்குழு ஒன்றைக் கூட்டி மீண்டும் தானே முதல்வர் வேட்பாளர் எனத் தீர்மானம் போட்டுக்கொண்டார்.

திமுகவின் எதிர்ப்பு வாக்குகளை ஓரணியில் இணைக்க நினைக்கும் பாஜகவின் கனவுக்கு விஜய் தடையாக இருப்பதால் சிபிஐ விசாரணையும் அதன் நடைமுறைகளும் விஜய்க்கு அத்தனை எளிதாக இருக்கப்போவதில்லை என்கின்றனர் அரசியலை உற்றுநோக்குபவர்கள்.

கோவையில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா; வேட்டி, சட்டையில் வந்த பாஜக தேசிய செயல் தலைவர் | Photo Album

நம்ம ஊரு மோடி பொங்கல் விழாநம்ம ஊரு மோடி பொங்கல் விழாநம்ம ஊரு மோடி பொங்கல் விழாநம்ம ஊரு மோடி பொங்கல் விழாநம்ம ஊரு மோடி பொங்கல் விழாநம்ம ஊரு மோடி பொங்கல் விழாநம்ம ஊரு மோடி பொங்கல் விழாநம்ம ஊரு மோடி பொங்... மேலும் பார்க்க

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்த 31.37 ஏக்கர் நிலம் மீட்பு; முடிவுக்கு வந்த 35 வருட போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், திருமலைசமுத்திரம் பகுதியில் அமைந்துள்ளது சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.நாடு முழுவதும் அறியப்பட்ட இப்பல்கலைகழகத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். இந்நி... மேலும் பார்க்க

பணிந்த அரசு; தூய்மைப் பணியாளர்களை சந்திக்கும் அமைச்சர் சேகர் பாபு - வெற்றியை நோக்கி போராட்டம்?

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னையில் 150 நாட்களுக்கு மேலாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் இன்றோடு நிறைவடையும் நிலையை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அ... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகை Vs திருச்சி வேலுசாமி : ரத்தான ‘ஜனநாயக’ பொங்கல்; சர்ச்சையில் சத்தியமூர்த்தி பவன்!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18 இடங்களில் வெற்றி பெற்றது. ஈரோடு கிழக்கில் வென்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைந்ததையடுத்து, அந்தத் தொகுத... மேலும் பார்க்க