செய்திகள் :

கோவை : 2-ல் மட்டுமே முன்னிலை.... அதிமுக கோட்டையை தகர்க்கிறதா தவெக?

post image

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நண்பகல் 12 மணி நிலவரப்படி சூலூர், கிணத்துக்கடவு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு ஆகிய 5 தொகுதிகளில் த.வெ.க. முன்னிலையில் உள்ளது.  கோவை தெற்கு, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய 3 தொகுதிகளில் தி.மு.க. முன்னிலையில் உள்ளது. தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி ஆகிய 2 தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. முன்னிலையில் உள்ளது.

அ.தி.மு.க தொண்டாமுத்தூர் வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி மற்றும் பொள்ளாச்சி வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மட்டுமே தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். அ.தி.மு.க. பலம் வாய்ந்த தொகுதிகளாக கருதப்படும் மேட்டுப்பாளையம், சூலூர், கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம் ஆகிய தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 1996ம் ஆண்டில் மட்டுமே கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த அ.தி.மு.க, இந்த தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வென்ற நிலையில், இந்த முறை இரண்டு தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவிநாசி: இ-சேவை மையம் நடத்தும் கணவர்; எல்.முருகனை வீழ்த்தி வாகை சூடிய இல்லத்தரசி! யார் இந்த கமலி?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் மருத்துவர் கோகிலா மணி, அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளரான மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ... மேலும் பார்க்க

ஈரோட்டில் வாஷ் அவுட்டான திமுக கூட்டணி; அமைச்சர் உட்பட 8 பேரை வீழ்த்திய த.வெ.க!

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபிச்செட்டிப்பாளையம், மொடக்குறிச்சி, பவானி, பவானிசாகர் தனி, அந்தியூர், பெருந்துறை என மொத்தம் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மேற்கு, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்ப... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம்: சோபிக்காத த.மா.கா; சம்பவம் செய்த சக்கரபாணி - 7வது முறை வெற்றி சாத்தியமானது எப்படி?

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார், சக்கரபாணி. தொகுதி முழுவதும் மக்களுக்கான அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் என எல்லாவற்றையும் செய்து தொகுதியைத் தன் கன்ட்ரோலி... மேலும் பார்க்க

ஓ.பி.எஸ்ஸிற்கு ’கிலி’யை ஏற்படுத்திய த.வெ.க; திக் திக் வாக்கு எண்ணிக்கை; போராடி கரை சேர்ந்த தி.மு.க!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க -வில் இணைந்து போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார் எனும்போது வெல்வாரா? தோற்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எகிறியது. அ.தி.மு.க-வால் இவ்வளவு காலமும் வெற... மேலும் பார்க்க

TVK: சீட் தராத திமுக; பழி தீர்த்த கட்சித்தாவல்; சூலூரை வென்ற தவெக சுகுமாரின் பின்னணி என்ன?

சூலூர் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 616 வாக்காளர்கள் உள்ள நிலையில்,2 லட்சத்து 71 ஆயிரத்து 567 பேர் வாக்களித்தனர். இதில் 90 ஆயிரத்து 531 வாக்குகள் பெற்ற த.வெ.க. வேட்பாளர் சுகுமார... மேலும் பார்க்க

TVK: 'சென்னைவாசி, சிபி சத்யராஜின் ஆதரவு' - சிங்காநல்லூரை வென்ற ஸ்ரீ கிரி பிரசாத்தின் பின்னணி என்ன?

சிங்காநல்லூர் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 69 ஆயிரத்து 941 வாக்காளர்களில், தேர்தலில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 746 பேர் வாக்களித்தனர். இதில் த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீ கிரி பிரசாத் 84 ஆயிரத்து 163 வாக்... மேலும் பார்க்க