செய்திகள் :

கோவை தெற்கில் ரூ.5 ஆயிரம் பட்டுவாடா செய்ததாக புகார்; நள்ளிரவு அடிதடி, தடியடியால் பரபரப்பு!

post image

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோவையில் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருகின்றனர்.

குறிப்பாக தொண்டாமுத்தூர் , சிங்காநல்லூர், கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்து வருகிறது. குறிப்பாக கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கரூரைச் சேர்ந்த குழுவினர் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு ரூ. 2,500 முதல் ரூ.5 ஆயிரம் வரை பணம் வழங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே நேற்றிரவு ராமநாதபுரம் 80 அடி வீதியில் உள்ள தாமரை பெரிய நாயகி வீதி, அங்கண்ணன் வீதி ஆகிய இடங்களில் கரூர் குழுவினர் பணப்பட்டுவாடா செய்த நிலையில், அவர்களை அ.தி.மு.க-வினர் பிடித்து தாக்குதல் நடத்தினர்.

மேலும் கரூர் குழுவினரின் காரைத் தடுத்து நிறுத்திய அ.தி.மு.க-வினர், கார் கண்ணாடியையும் அடித்து உடைத்தனர். மேலும் அந்தக் காரில் பணம் இருக்கின்றதா எனச் சோதனை செய்ததுடன், காரில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு அ.தி.மு.க.வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன், பா.ஜ.க. மாநகர மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் ஆகியோர் வந்த நிலையில், அ.தி.மு.க-வினர் கார் கதவை உடைக்க முயன்றனர்.

அம்மன் அர்ச்சுணன்
அம்மன் அர்ச்சுணன்

அப்போது காரில் இருந்தவர்களிடம் இருந்த ஒரு பையைப் பிடுங்கி வந்த அம்மன் அர்ச்சுணன், கூட்டத்திற்கு இடையே வைத்து திறந்து காட்டினார். அதில் வேஷ்டி, துணி போன்றவை மட்டுமே இருந்ததால் அ.தி.மு.க-வினர் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் காரை முழுமையாகச் சோதனை செய்ய வேண்டும் என அ.தி.மு.க.-வினர் கோரிக்கை வைத்த நிலையில், போலீசார் சோதனை செய்தபோதும் பணம் எதுவும் சிக்கவில்லை.

பின்னர் அ.தி.மு.க-வினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் மற்றும் பறக்கும் படையினர் தி.மு.க-வினர் 6 பேரைப் பாதுகாப்பாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே பிடிபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி, ராமநாதபுரம் காவல் நிலையத்தை அ.தி.மு.க-வினர் முற்றுகையிட்ட நிலையில் , திமுகவைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரும் காவல் நிலையம் முன்பாகக் குவிந்தனர். இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் வாக்குவாதம் செய்த நிலையில் காவல் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

அப்போது இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்படவே போலீசார் லேசான தடியடி நடந்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

"கோவை தெற்கு தொகுதி தேர்தலை ரத்து செய்ய வேண்டும்"- தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார்; பின்னணி என்ன?

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோவையில் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் தி.மு.க, அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கி வருகின்றனர்.குறிப்பா... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டின் மிரட்டல் எப்படி இருக்கும் என்பதை பாராளுமன்றத்தில் காட்டியிருக்கிறோம்" – கமல்ஹாசன்

கோவை தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "இந்தத் தொகுதியில் நான் நடந்து செல்லாத வீதிகளே இல்ல... மேலும் பார்க்க

``பெண்களுக்கு எதிரான தீய எண்ணத்தோடு இந்த மசோதாவை திமுக, காங்கிரஸ் தடுத்து விட்டது" - அமித்ஷா

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் பா.ஜ.க- வின் முக்கிய நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியின் பா.ஜ.க வேட்பாளர் கிருத்திகாவை ஆதரித்த... மேலும் பார்க்க

"டெல்லி அணி, தமிழ்நாடு அணிக்கான போட்டியில் தமிழ்நாடு அணி வெற்றி பெற வேண்டும்" - உதயநிதி ஸ்டாலின்

அப்போது பேசிய அவர்,"கரூர் மாவட்டத்தில் கடந்த முறை தேர்தலில் நான்குக்கு நான்கு தொகுதிகள் தி.மு.க வெற்றி பெற்றது. இம்முறையும் தி.மு.க 4 தொகுதிகளிலும் வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு கோடியே 35... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டிற்குள் முகமூடி அணிந்து நுழைய பார்க்கிறது பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்" - ராகுல் காந்தி

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து துறையூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி... மேலும் பார்க்க

"ஜெயலலிதா மேடத்தை அப்படி மரியாதை குறைவாகப் பேசியிருந்தால்..." - விஜய்யை விமர்சிக்கும் சத்யராஜ்

அரசியல் கட்சிகள் தங்களுடைய பரப்புரையை தற்போது பரபரப்பாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். நடிகர்கள் பலரும் அரசியல் கட்சியினருக்கு ஆதரவாகப் பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், நேற்று பெரம்பூரில... மேலும் பார்க்க