சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் எப்போது வரை மழை? |லேட்டஸ்...
சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்; சென்னையில் எப்போது வரை மழை? |லேட்டஸ்ட் அப்டேட்
வங்கக் கடலுக்கு தென்மேற்கு திசையிலும், வட தமிழ்நாடு (சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள்), புதுச்சேரி கடற்கரைக்கு அருகேயும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இது டிட்வா புயலின் மீதமுள்ள பகுதி ஆகும்.
இது வடக்கு திசையில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. (இது நேற்று நள்ளிரவு 2.30 மணிநேரப்படி)
இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கே நகர்ந்து இன்று மதியத்திற்குள் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

எங்கே மழை?
இதையொட்டி, சென்னை வானிலை மையம் கொடுத்துள்ள லேட்டஸ்ட் அப்டேட்...
இன்று காலை 10 மணி வரை தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.
Special Bulletin No. 25 pic.twitter.com/xAAXjnTGnQ
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) November 30, 2025
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 1, 2025














