செய்திகள் :

``தைவானை தாக்கினால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கே தெரியும்" - சீனாவை எச்சரித்த ட்ரம்ப்

post image

31-ம் தேதி தென் கொரியாவில் ஆசியா - பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்குகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் தென் கொரியா சென்றிருந்தனர். அப்போது இரு நாட்டின் தலைவர்களும் சந்தித்துக்கொண்டனர்.

அமெரிக்க அதிபரின் சீனா பொருள்கள் மீதான வரி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பேசுபொருளான நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பும் சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

இந்த சந்திப்புக்குப் பிறகு அமெரிக்கா சென்ற அதிபர் ட்ரம்ப், தனியார் செய்தி நிறுவனத்தின் நேர்காணல் ஒன்றி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நேர்காணலில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்

அப்போது,``சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சீனாவில் உள்ள மக்களும் தைவானை தாக்கினால், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அறிந்திருக்கிறார்கள்' என்றார்.

சீனா தைவான் மீது இராணுவ ரீதியாக நடவடிக்கை எடுத்தால் அமெரிக்க இராணுவம் அதில் தலையிடுமா என்றக் கேள்விக்கு, ``எனது ரகசியங்களை வெளியிட முடியாது. இது நடந்தால் அது நடக்கும் என உங்களுக்கு என்னால் தெளிவாக சொல்ல விரும்பவில்லை.

நீங்கள் கேள்வி கேட்பதால் மட்டும் நான் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்பவன் அல்ல. ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதை சீனா புரிந்துகொள்கிறது.

சீன அதிபர் மக்களிடம் உரையாற்றும்போது வெளிப்படையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிபராக இருக்கும்வரை நாம் எதுவும் செய்ய மாட்டோம்' எனக் கூறியிருக்கிறார்." என்றார்.

ஆனால் சமீபகாலமாக சீனா விரிவான இராணுவப் பயிற்சிகளை நடத்துகிறது. கிட்டத்தட்ட தினமும் தைவானின் வான்வெளிக்கு அருகில் போர் விமானங்களை அனுப்புகிறது.

சீனா Vs தைவான்
சீனா Vs தைவான்

தைவான் ஜலசந்தியில் சாத்தியமான மோதல் குறித்த அச்சங்களை அதிகரித்துள்ளது என தி எபோக் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

2027 ஆம் ஆண்டுக்குள் சாத்தியமான படையெடுப்பிற்கு தயாராகுமாறு சீன இராணுவத்தை ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறையும் மதிப்பீட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

"பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சோதிக்கிறது; அமெரிக்காவும் சோதிக்கும்" - ட்ரம்ப் பரபரப்பு பேச்சு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் மற்றும் சில நாடுகள் தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டுவருவதாக கூறியிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாக எழுந்துள்ளது. அமெரிக்க அரசு 30 ஆண்டுகளுக்கும் மேலாக ந... மேலும் பார்க்க

இலங்கைக் படையின் அத்துமீறல்: 35 மீனவர்கள் கைது; `அழுத்தமாக வலியுறுத்துகிறேன்' - தவெக தலைவர் விஜய்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. மீனவர்களிடமிருந்து மூன்று விசைப் படகுகளும், ஒரு நாட்டுப் படகும் கைப்பற்றப்பட்டதாகவும் ... மேலும் பார்க்க

``திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை; கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு காரணம்'' -அன்புமணி கண்டனம்

கோவையில் தனியார் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டிருக்கின்றனர். அந்தப் பதிவில் "கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட... மேலும் பார்க்க

``நம்பினார் கெடுவதில்லை; எடப்பாடி பழனிசாமியை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை'' - ஆர்.பி. உதயகுமார்

“ஜெயலலிதா இருக்கின்ற வரை அமைச்சராக முடியாமல், அவர் நம்பிக்கையை ஏன் நீங்கள் பெற முடியவில்லைய்? ஜெயலலிதாவிற்கு நீங்கள் செய்த துரோகம் என்ன?” என்று செங்கோட்டையனிடம் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கே... மேலும் பார்க்க

``அதிமுக - தவெக கூட்டணி அமைத்து வென்றால், விஜய்யை காலி செய்து விடுவார் எடப்பாடி'' - டிடிவிதினகரன்

`SIR குறித்து ஏன் பயம்?'திருச்சியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,"எஸ்.ஐ.ஆர் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை அரசு நடத்தியிருந்தால் கல... மேலும் பார்க்க