செய்திகள் :

இலங்கைக் படையின் அத்துமீறல்: 35 மீனவர்கள் கைது; `அழுத்தமாக வலியுறுத்துகிறேன்' - தவெக தலைவர் விஜய்

post image

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. மீனவர்களிடமிருந்து மூன்று விசைப் படகுகளும், ஒரு நாட்டுப் படகும் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றம்சாட்டும் இலங்கை கடற்படை, கைது செய்யப்பட்டவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றிருக்கிறது.

இராமேஸ்வரத்திலிருந்து சுமார் 2,000 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், இலங்கை கடற்படை துப்பாக்கி முனையில் மிரட்டி விரட்டியதாகக் கூறப்படுகிறது.

மீனவர்கள் கைது
மீனவர்கள் கைது

இந்த நிலையில்தான், தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நம் மீனவச் சகோதரர்கள் 35 பேர், இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையை அளிக்கிறது.

கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும்.

மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் மீனவர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும்.

 விஜய்
விஜய்

ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும்.

இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

SIR: தமிழ்நாட்டில் நாளை தொடக்கம்; என்ன நடக்கும்? நீங்கள் என்ன செய்ய வேண்டும்?|Explained

தமிழ்நாட்டில் நாளை முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்குகிறது. இந்த வார்த்தை ஒலிக்க ஆரம்பத்தில் இருந்தே, இது குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து எழுந்துகொண்டே இருக்கின்றன. இதனால், SIR என்றால் என்ன? இத... மேலும் பார்க்க

"பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சோதிக்கிறது; அமெரிக்காவும் சோதிக்கும்" - ட்ரம்ப் பரபரப்பு பேச்சு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாகிஸ்தான் மற்றும் சில நாடுகள் தொடர்ச்சியாக அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டுவருவதாக கூறியிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாக எழுந்துள்ளது. அமெரிக்க அரசு 30 ஆண்டுகளுக்கும் மேலாக ந... மேலும் பார்க்க

``தைவானை தாக்கினால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கே தெரியும்" - சீனாவை எச்சரித்த ட்ரம்ப்

31-ம் தேதி தென் கொரியாவில் ஆசியா - பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்குகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் தென் கொரியா சென்றிருந்தன... மேலும் பார்க்க

``திமுக ஆட்சியில் பாதுகாப்பில்லை; கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு காரணம்'' -அன்புமணி கண்டனம்

கோவையில் தனியார் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு கண்டனம் தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டிருக்கின்றனர். அந்தப் பதிவில் "கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட... மேலும் பார்க்க

``நம்பினார் கெடுவதில்லை; எடப்பாடி பழனிசாமியை நம்பி கெட்டவர்கள் யாரும் இல்லை'' - ஆர்.பி. உதயகுமார்

“ஜெயலலிதா இருக்கின்ற வரை அமைச்சராக முடியாமல், அவர் நம்பிக்கையை ஏன் நீங்கள் பெற முடியவில்லைய்? ஜெயலலிதாவிற்கு நீங்கள் செய்த துரோகம் என்ன?” என்று செங்கோட்டையனிடம் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கே... மேலும் பார்க்க

``அதிமுக - தவெக கூட்டணி அமைத்து வென்றால், விஜய்யை காலி செய்து விடுவார் எடப்பாடி'' - டிடிவிதினகரன்

`SIR குறித்து ஏன் பயம்?'திருச்சியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்,"எஸ்.ஐ.ஆர் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை அரசு நடத்தியிருந்தால் கல... மேலும் பார்க்க