செய்திகள் :

தொடர் தோல்வி; ஆனாலும் கௌரவமான தோல்வி - அதிமுக வரலாற்றில் முதல் முறை; சமாளிப்பாரா எடப்பாடி பழனிசாமி!

post image

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. கருத்துக் கணிப்புகள் அத்தனையையும் பொய்யாக்கி தமிழக வெற்றிக் கழகம் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

அதற்கடுத்தபடியாக அதிமுக இரண்டாமிடத்திலும் ஆளும் திமுக மூன்றாவது இடத்திலும் வந்துள்ளன.

திமுக பிரதான எதிர்க்கட்சி என்ற இடத்தைப் பிடிப்பதே கஷ்டம் என்கிற சூழல் நிலவி வருகிறது.

அதிமுகவைப் பொறுத்தவரை கடந்த சட்டமன்றத் தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியாக இருந்ததைப் போலவே இந்தச் சட்டசபையிலும் இருக்குமென தெரிகிறது.

ஆனால் அதிமுக வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு தேர்தலில் தோல்வி என்பது இது முதல் முறை.

இரட்டை இலை
இரட்டை இலை

கட்சி சந்தித்த முதல் தேர்தலான 1977, 80 மற்றும் 85 தேர்தல்களில் வென்ற கட்சி 89ல் தோல்வியடைந்தது. மீண்டும் 91ம் ஆண்டு வென்றது. மீண்டும் 96ல் தோல்வி. 2001ல் மீண்டும் வெற்றி.

2006ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த கட்சி 2011 மற்றும் 16 தேர்தல்களில் வென்றது. 21ல் தோல்வி.

இந்த நிலையில் தற்போது இரண்டாமிடம் பிடித்திருப்பதால் தொடர்ச்சியாக பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலைமை உருவாகியுள்ளது.

இந்தத் தேர்தலில் பலமாக வீசிய விஜய் ஆதரவு அலையில் திமுகவே மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டதால் அதிமுகவுக்கு 70க்கும் மேற்ப்பட்ட தொகுதிகள் என்பது கௌரவமான தோல்விதான் என்றாலும் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச் செயலாளர் ஆன பிறகு தொடர்ந்து ஆட்சி அமைக்க முடியாத சூழலே உருவாகி வருவது அதிமுக தொண்டர்களைச் சோர்வடையச் செய்யலாம்.

அவர்களை எப்படிச் சமாளிக்கப் போகிறாரோ எடப்பாடி பழனிசாமி?

`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழுகார் அப்டேட்ஸ்

புலம்பும் கு.ப.கிருஷ்ணன்!"தப்புக்கணக்கு போட்டுட்டோம்"த.வெ.க-வில், முகம் தெரியாத பலரும் வெற்றிபெற்ற நிலையில், லால்குடி தொகுதி வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனோ தோல்வியைத் தழுவியிருக்கிறார். அ.தி.மு.க முன்னாள் அ... மேலும் பார்க்க

விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காமல் பந்தாடும் ஆளுநர்! - வலுக்கும் கண்டனங்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன... மேலும் பார்க்க

`அந்த திட்டம் வேண்டாம்!' - அதிமுகவுக்கு `நோ' சொல்லிய திமுக?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தாலும் இன்னும் பரபரப்புக்குக் குறைவில்லாமல் நகர்கிறது அரசியல் களம். குறிப்பாக நேற்று இரவு வெளியான சில தகவல்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்கூட எதிர்பாராதவை. அதாவது, ... மேலும் பார்க்க

"விஜய்யைப் பதவியேற்க அனுமதிக்க வேண்டும்; ஆளுநர் அப்படி சொல்ல முடியாது" - திருமாவளவன்

தமிழக சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றிருக்கிறது. 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைக்க முடியும். இந்நிலையில் தான் திமுக கூட்டணிய... மேலும் பார்க்க

`மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார வருத்தப்பட்டார்!' – ஆதங்கப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக த.வெ.க உருவெடுத்திருந்தாலும், ஆட்சி அமைப்பதற்கு தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அதிலிருந்து ... மேலும் பார்க்க

SRH vs PBKS:"பஞ்சாப்பை வீழ்த்தி முதலிடம்; அதிரடி ஆட்டமே எங்களின் ரகசியம்!"– பேட் கம்மின்ஸ் பெருமிதம்

ஐபிஎல் 2026-ன் நேற்றைய (மே 6) விறுவிறுப்பான ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த பஞ்சாப் அணியை வீழ்த்தி, ஹைதராபாத் அணி அபார வெற்... மேலும் பார்க்க