`தி.மு.க-வுக்கு பாயத் தயாராகும் சிறுத்தைகள் டு சாரி கேட்ட செந்தில் பாலாஜி!' | கழ...
பி.டி.ஆர், சுந்தர்.சி இருவரையும் முந்திய தவெக வேட்பாளர்; ஸ்டார் தொகுதியில் விசில் பறந்தது எப்படி?
மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதிக்கட்சி சார்பில் இயக்குநர் சுந்தர்.சி, திமுக சார்பில் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தவெக முஸ்தபா, நாதக-வில் அப்துல் ஹக்கீம் ஆகியோர் போட்டியிட்டனர். அதிமுக வேட்பாளராக சுந்தர்.சி அறிவிக்கப்பட்டவுடனேயே, கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து, தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டார். ஆனாலும் வெளியூர்க்காரர், நடிகர் என்பதால் எளிதாக அணுக முடியாதோ என்கிற பிரச்னையால் தொகுதி மக்கள் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதில் தயக்கம் காட்டி வந்தனர். `நான் வெற்றி பெற்றால் மதுரையில்தான் இருப்பேன்' என வீதி வீதியாகப் பிரசாரம் செய்தார் சுந்தர்.சி. இதனால் தொகுதி மக்களிடையே சுந்தர்.சி மீது நம்பிக்கை ஏற்பட்டது
இதுவரை தன்னை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள் குறித்து வாய் திறக்காத பி.டி.ஆர், இந்த முறை சுந்தர்.சியையும் அவருடைய மனைவி குஷ்பவையும் விமர்சிக்கத் தொடங்கினார். இதற்கு பதிலடி கொடுத்து சுந்தர்.சியும் பேச பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியது.
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கட்சி நிர்வாகிகளை மதிப்பதில்லை, பிரசாரங்கள் குறித்து தங்களுக்குச் சொல்வதில்லை என புகார் எழுந்ததோடு, நிர்வாகிகளுக்குள் அடிதடி சம்பவங்களும் நடந்தது. தொகுதியில் சிறுபான்மையினர் வாக்குகள் கணிசமான அளவில் இருப்பதால் தவெக சார்பில் முஸ்தபா போட்டியிட்டார். இவர் செல்லும் இடங்களில் இளைஞர் பட்டாளங்களோடு சென்றது தொகுதியில் பேசு பொருளானது. மேலும் தொகுதி முழுவதும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லையென மக்களும் அதிருப்தியில் இருந்தனர். ஆனாலும் இந்தப் பிரச்னைகளெல்லாம் தேர்தலில் எதிரொலிக்காது எனச் சொல்லபட்ட நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கையில தவெக முன்னிலை பெற்றிருப்பது அதிமுக, திமுக-வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.













