WhatsApp: புதிய கெடுபிடி; 'இதை' செஞ்சுடுங்க மக்களே! - மத்திய அரசின் அதிரடி
`பிடிப்பட்ட ஆண் புலி' - விடுவிக்க வனத்துறை தேர்வு செய்த இடத்துக்கான காரணம் இதுதான்!
சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்தில் மனித- வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. புலிகளின் எண்ணிக்கை மெல்ல மீண்டெழுந்தாலும் அவற்றுக்கான வாழிட போதாமை என்பது மிகப்பெரும் பிரச்னையாக மாறி வருகிறது. வனத்தை விட்டு வெளியேறும் புலிகள் மனிதர்களையும் கால்நடைகளையும் தாக்கும் நெருக்கடியான நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகில் உள்ள தேவர்சோலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களாக நடமாடி வந்த புலி ஒன்று 40- க்கும் அதிகமான கால்நடைகளைத் தாக்கிவந்தது. தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடிவரும் அந்தப் புலியைப் பிடிக்க வலியுறுத்தி உள்ளூர் மக்கள் போராட்டங்களை நடத்தினர். இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் வனத்துறையினர் கூண்டு அமைத்து கண்காணித்து வந்தனர்.
தொடர்ந்து கால்நடைகளைத் தாக்கி வந்த குறிப்பிட்ட அந்தப் புலி நேற்று முன்தினம் அதிகாலை கூண்டுக்குள் சிக்கியது. சுமார் மூன்று வயதுடைய அந்த ஆண் புலியின் உடல் நிலையைப் பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள், மீண்டும் வனப் பகுதிக்குள் விடுவிக்க முடிவு செய்தனர். முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதிக்குள் ஆண் புலிகளின் நடமாட்டம் இல்லாத பகுதியை ஆய்வுகளின் மூலம் தேர்வு செய்த வனத்துறையினர், நேற்று நள்ளிரவு அந்தப் புலியை பத்திரமாக விடுவித்துள்ளனர்.

ஆண் புலிகள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வடுவித்ததன் பின்னணி குறித்து பகிர்ந்த வனத்துறையினர் , "அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்ட புலிகள் இன்றைக்கு காப்பாற்றப்பட்டு அதன் எண்ணிக்கை மெல்ல மீண்டு வருவதற்கு மிக முக்கிய காரணமாக 'புராஜெக்ட் டைகர்' எனப்படும் புலிகள் பாதுகாப்பு திட்டம் தேசிய அளவில் கை கொடுத்திருக்கிறது. புலிகள் பாதுகாப்பைப் பொறுத்தவரை என்.டி.சி.ஏ என்று அழைக்கப்படும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலே பின்பற்றப்படுகிறது.
அண்மையில் கூடலூரில் பிடித்த ஆண் புலியை விடுவிப்பதற்கான முதுமலை வனப்பகுதியைத் தேர்வு செய்ததுடன், அந்த பகுதியில் வேறெந்த ஆண் புலியின் நடமாட்டமும் இல்லை என்பதை ஆய்வுத் தரவுகளின் படி உறுதி செய்த பின்னரே விடுவித்தோம். ஏனென்றால் ஒவ்வொரு ஆண் புலியும் குறிப்பிட்ட சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள எல்லையை தனக்கான வாழிடமாக தகவமைத்துக் கொள்ளும். அந்த எல்லைக்குள் வேறு ஆண் புலிகளை வாழ அனுமதிக்காது.

மீறி நுழைந்தால் இரண்டு புலிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாகவே ஆண் புலி நடமாட்டம் இல்லாத வாழிட எல்லையைக் கண்டறிந்து அந்த பகுதிக்குள் பத்திரமாக விடுவித்துள்ளோம். இந்த இளம் ஆண் புலி தனக்கான எல்லையை வகுத்துக் கொள்வதுடன் அதற்குத் தேவையான இரை, இணை, நீர்நிலைகள் போன்றவையும் ஏற்படுத்திக்கொள்ள ஏதுவான வாய்ப்புகள் உள்ளன



















