செய்திகள் :

`போருக்கு பின் பைக் சாகசங்கள்' - பாலஸ்தீன இளைஞர்களின் தொடக்கம்

post image

இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன மக்கள் மீது நடத்தி வரும் மனிதநேயமற்ற தாக்குதலைக் கண்டு உலகமே பரிதாபப்படுகிறது.

இந்தத் தாக்குதல் மக்களின் வாழ்வாதாரத்தோடு உயிர்களையும் காவு வாங்கி வருகிறது. இந்தத் தாக்குதல்களில் தப்பி வாழும் மக்களையும் மீண்டும் மேலே எழும்பவிடாமல் தடுக்கப்படுகிறது.

இருந்தும் பாலஸ்தீன மக்கள் தங்களது முயற்சிகளை கைவிடவில்லை. தொடர்ந்து அவர்கள் தங்களது வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகின்றனர்.

பைக் சாகசம் - சித்தரிப்பு படம்
பைக் சாகசம் - சித்தரிப்பு படம்

இதன் ஒரு பகுதியாக, மத்திய காசாவில் அல் சஹ்ரா நகரத்தில் உள்ள மணல் குன்றுகளில் இளைஞர்கள் திரண்டு பைக் சாகசங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இது இப்போது தான் தொடங்கியது அல்ல.

2023-ஆம் ஆண்டு, பாலஸ்தீனத்தில் போர் தொடங்குவதற்கு முன்பு, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அல் சஹ்ரா நகரத்தில் உள்ள மணல் குன்றுகளில் நடந்து வந்த ஒன்றுதான் இது.

இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இது காசாவில் மட்டும் நடக்கும் ஒன்றல்ல. 2006-ஆம் ஆண்டு, லெபனான் போருக்கு பின் பெய்ரூத் நகரில் குழந்தைகளும் இளைஞர்களும் மீண்டும் கடற்கரையில் பந்து விளையாட்டு, தெருவில் சைக்கிள் சாகசங்கள் போன்ற விளையாட்டுகளைத் தொடங்கினார்கள்.

பாகிஸ்தான் போர் சமயத்தில் நிறுத்தப்பட்ட கிராம கிரிக்கெட் போட்டிகளும், பாரம்பரிய குதிரை விளையாட்டுப் போட்டிகளும் மீண்டும் நடத்தப்பட்டன.

இஸ்ரேல்-பாலஸ்தீன போர்
இஸ்ரேல்-பாலஸ்தீன போர்

சிரியா போருக்கு பின், அலெப்போ, இட்லிப் போன்ற நகரங்களில் தெரு பந்து விளையாட்டு, பாரம்பரிய குத்துச்சண்டை மற்றும் சைக்கிள் ரேஸ்கள் மீண்டும் நடந்தன.

அப்படியே, இப்போது பாலஸ்தீனத்தில் பைக் சாகசங்கள் தொடங்கியிருக்கின்றன.