செய்திகள் :

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர்; பலியான பெண் - விசாரணையில் வெளிவந்த திடுக் உண்மைகள்!

post image

உத்தரப்பிரதேசத்தில் வயிற்றுவலி காரணமாக கிளினிக்கில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவர் யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்ததில் அப்பெண் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில், அந்த மருத்துவர்கள் போலி மருத்துவர்கள் என்றும், அது அங்கீகரிக்கப்படாத கிளினிக் என்றும் அதிர்ச்சிகர உண்மை வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

உயிரிழப்பு
உயிரிழப்பு

முன்னதாக ஃபதே பகதூர் என்பவரின் மனைவி முனிஷ்ரா ராவத்துக்கு டிசம்பர் 5-ம் தேதி கடும் வயிற்றுவலி ஏற்பட்டிருக்கிறது.

இதனால், ஃபதே பகதூர் தனது மனைவியை பாராபங்கியில் கியான் பிரகாஷ் மிஸ்ரா, விவேக் மிஸ்ரா ஆகியோரின் ஸ்ரீ தாமோதர் அவுஷதாலயா கிளினிக்குக்கு அழைத்துச் சென்றார்.

அப்போது, கியான் பிரகாஷ் அந்தப் பெண்ணின் வயிற்று வலிக்கு சிறுநீரகக் கற்கள்தான் காரணம் என்றும், அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000 ஆகும் என்றும் கணவரிடம் கூறினார். பின்னர், அதை ரூ.20,000-ஆகக் குறைத்தார்.

அடுத்தநாள் கியான் பிரகாஷ் போதையில் யூடியூப் வீடியோவைப் பார்த்துக்கொண்டே அப்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ததில் பெண்ணின் வயிற்றில் பல நரம்புகள் வெட்டப்பட்டன.

நிறைய காயங்களும் ஏற்பட்டன. இதனால் கடும் வலியால் துடித்த அப்பெண் மறுநாளே பரிதாபமாக உயிரிழந்தார். அதோடு, அந்த மருத்துவர்களும் அவரது குடும்பத்தினரும் அப்பெண்ணை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர்.

பின்னர், உயிரிழந்த பெண்ணின் கணவர் உள்ளூர் காவல் நிலையத்தில் புகாரளிக்க போலீஸார் உடனடியாக அந்த கிளினிக்குக்கு சென்றனர்.

காவல்துறை
காவல்துறை

கிளினிக்கை போலீஸார் ஆய்வு செய்ததில் அது அங்கீகரிக்கப்படாத கிளினிக் என்றும், அங்கிருந்தவர்கள் போலி மருத்துவர்கள் என்றும் தெரியவந்தது.

மறுபக்கம் உயிரிழந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும், அந்த போலி கிளினிக்கின் உரிமையாளர்கள் இருவர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது.

இது குறித்து பேசிய காவல்துறை அதிகாரி அமித் சிங் பதூரியா, ``சம்பவம் பற்றி அறிந்ததும், அந்த அங்கீகாரம் இல்லாத அந்த கிளினிக்கை நாங்கள் ஆய்வு செய்தோம்.

அது மூடப்பட்டிருந்ததால் அதன் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தற்போது தலைமறைவாக இருக்கின்றனர். இருப்பினும், அவர்களை உடனடியாகக் கைது செய்வோம்" என்று உறுதியளித்திருக்கிறார்.

பொள்ளாச்சியில் அச்சடித்து பொன்னானியில் சப்ளை; 10 லட்சம் பேருக்கு போலி சான்றிதழ் விற்ற மோசடி கும்பல்

கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், பொன்னானி பகுதியில் நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் உள்ள போலி சான்றிதழ்கள் தயாரித்து வழங்கப்படுவதாக போலீஸ் எஸ்.பி-க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில்... மேலும் பார்க்க

காதலனிடம் தப்பிக்க கார் ஓட்டுநர் மீது புகார் அளித்த நர்சிங் மாணவி - பெங்களூருவில் அதிர்ச்சி

பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர், தனது கழுத்தில் இருந்த காயங்களை மறைப்பதற்காக, காதலனிடம் பொய் கூறியதுடன், கார் ஓட்டுநர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத... மேலும் பார்க்க

`ஊழல் புகார், வருமானத்திற்கு அதிகமாக சொத்து' - ஊராட்சி செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் (48) என்பவர் பிள்ளையார்குளம் ஊராட்சியில் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இவர் வருமானத்திற்கு அதிகமாகச... மேலும் பார்க்க

கடையநல்லூர்: தையல் மெஷின் பெல்ட்டால் மனைவியைக் கொன்ற நபர்; ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலித்தநல்லூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன், வெள்ளதாய் தம்பதியினரின் மகள் வேல்மதிக்கும், கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ராமர் என்பவரு... மேலும் பார்க்க

பெண் எரித்துக் கொலை; நான்கு மனைவிகளுடன் வாழ்க்கை - முன்னாள் காவலர் கைதான அதிர்ச்சி பின்னணி!

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணை பகுதியில் பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் கடந்த 5-ஆம் தேதி பிணமாக கிடந்தார். அங்கு கால்நடைகளை மேய்க்கச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்ப... மேலும் பார்க்க

திருப்பதி: `இது பட்டு இல்ல பாலிஸ்டர்' ரூ.54 கோடி மோசடி - சோதனையில் அதிர்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பட்டு துப்பட்டா வழங்கியதில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திருப்பதி தேவஸ்தனம் போர்டு தலைவர் பி.ஆர்.நாயுடு, கோயிலுக்கு வழங்கப்படும் பட்டு துப்... மேலும் பார்க்க