பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli ...
"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக மெளனமாக இருப்பது ஏன்" - தவெக நிர்மல் குமார் பதில்
திருப்பரங்குன்றம் மலையில் கடந்த டிசம்பர் 3ம் தேதி மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது அங்குப் பதற்றமான சூழலை ஏற்படுத்தியிருந்தது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது. மக்களவை, மாநிலங்களவை வரை இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.
'சிக்கந்தர் தர்காவுக்கு அருகே இருக்கும் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்' என்று உத்தரவிட்ட நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் சமூகநல்லிணக்கத்தை சீர்குழைத்து பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியதாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் தவெக கட்சியினர் எந்தவொரு கருத்தும் சொல்லாமல் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தனர். விஜய்யும் இதுகுறித்து மெளனமாக இருந்து வருவது தமிழக அரசியலில் பல கேள்விகளை எழுப்பியிருந்தது.
இந்நிலையில் இன்று பனையூரில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், "திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. அதனால் இப்போது ஏதும் கருத்து சொல்ல முடியாது. நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் அவ்வளவு நேரம் திமுகவின் காவல்துறை ஏன் தாமதப்படுத்தியது? ஏன் கூட்டம் கூட அனுமதித்தது?

நீதிமன்றத்தில் அரசு தரப்பில் 6 மணிவரை தீபம் ஏற்றுவதாகக் கூறி வந்தனர். அதனால் அங்கு அவ்வளவு கூட்டம் சேர்ந்தது. நீதிமன்றத்தில் அங்கு தீபம் ஏற்ற முடியாது என்று முன்பே தெளிவாகச் சொல்லியிருந்தால் ஏன் அங்கு கூட்டம் கூடி இப்படியாக பதற்றமான சூழல் ஏற்படப்போகிறது. எப்போதும் பின்பற்றப்பட்டுவரும் பாரம்பரியமான முறையை மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது"என்று பேசியிருக்கிறார்.













